< Psalmi 114 >
1 Kad Israēls izgāja no Ēģiptes, Jēkaba nams no svešas valodas ļaudīm,
இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, யாக்கோபின் குடும்பத்தார் வேறுநாட்டைச் சேர்ந்த மக்களிடமிருந்து வெளியே வந்தபோது,
2 Tad Jūda Viņam tapa par svētu daļu, un Israēls par Viņa valstību.
யூதா, இறைவனின் பரிசுத்த இடமாயிற்று; இஸ்ரயேல் அவருடைய அரசாட்சி ஆயிற்று.
3 Jūra redzēja un bēga, Jardāne griezās atpakaļ;
கடல் அவர்களைக் கண்டு ஓடி ஒதுங்கியது; யோர்தான் நதி அதின் வழியை மாற்றியது.
4 Kalni lēkāja kā auni, pakalni kā jēri.
மலைகள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகள்போலவும் துள்ளின.
5 Kas tev bija, jūra, ka tu bēdz, un tev, Jardāne, ka tu atpakaļ griezies?
கடலே, நீ விலகி ஒதுங்கியது ஏன்? யோர்தான் நதியே, நீ ஓடாமல் நின்றது ஏன்?
6 Jums, kalni, ka jūs lēkājāt kā auni, pakalni, kā jēri?
மலைகளே, நீங்கள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், குன்றுகளே, நீங்கள் செம்மறியாட்டுக் குட்டிகளைப் போலவும் துள்ளியது ஏன்?
7 Priekš Tā Kunga drebi, zeme, Jēkaba Dieva priekšā,
பூமியே, யெகோவாவின் சமுகத்தில் நடுங்கு, யாக்கோபின் இறைவனின் சமுகத்தில் நடுங்கு.
8 Kas klinti pārvērsa par ezeru un akmeņus par ūdens avotiem.
அவர் கற்பாறையைக் குளமாகவும், கடினமான கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றினாரே.