< Michas 5 >

1 Nu tad pulcējies, pulku meita; viņi pret mums apmetīsies. Tie ar rīksti sitīs Israēla soģi vaigā.
சேனைகளையுடைய நகரமே, இப்போது குழுக்குழுவாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றுகை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்.
2 Un tu Bētleme Efrata, jebšu tu esi maza starp tiem tūkstošiem no Jūda, no tevis Man izies (Tas), kas būs Valdnieks iekš Israēla, un kura iziešana ir no iesākuma, no mūžīgām dienām.
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லெகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
3 Tādēļ Viņš tos nodos līdz tam laikam, kur dzemdētāja dzemdēs. Tad viņa atlikušie brāļi atgriezīsies pie Israēla bērniem.
ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கும்வரை அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரர்களில் மீதியானவர்கள் இஸ்ரவேல் மக்களோடு திரும்புவார்கள்.
4 Un Viņš stāvēs un ganīs Tā Kunga spēkā, ar Tā Kunga, sava Dieva, vārda augstību. Un tie dzīvos, jo nu Viņš taps liels līdz pasaules galiem.
அவர் நின்றுகொண்டு, யெகோவாவுடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனி பூமியின் எல்லைகள் முழுவதிலும் மகிமைப்படுவார்.
5 Un šis būs miers. Kad Asurs nāks mūsu zemē un ieies mūsu pilīs, tad mēs pret to iecelsim septiņus ganus un astoņus cilvēku virsniekus.
இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பர்களையும் மனிதர்களில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.
6 Tie noganīs Asura zemi ar zobenu un Nimroda zemi viņas vārtos. Tā Viņš mūs izglābs no Asura, kad tas nāks mūsu zemē, un kad ieies mūsu robežās.
இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்.
7 Un Jēkaba atlikums būs daudz tautu starpā kā rasa no Tā Kunga, kā lietus lāses uz zāles, kas negaida uz nevienu nedz cerē uz cilvēka bērnu.
யாக்கோபிலே மீதியானவர்கள் யெகோவாலே வருகிற பனியைப்போலவும், மனிதனுக்குக் காத்திருக்காமலும், மனுமக்களுக்குத் தாமதிக்காமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக மக்களின் நடுவிலே இருப்பார்கள்.
8 Tiešām, Jēkaba atlikums būs pagānu starpā, daudz tautu vidū, kā lauva starp meža zvēriem, kā jauns lauva starp avju ganāmiem pulkiem, kas ielauzies samin un saplosa, un nav glābēja.
யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமமாகவும், கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பார் இல்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமமாகவும் மக்களுக்குள் அநேக மக்களின் நடுவிலே இருப்பார்கள்.
9 Tava roka būs paaugstināta pār taviem pretiniekiem, un visi tavi ienaidnieki taps izdeldēti.
உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் எதிரிகளெல்லோரும் அழிக்கப்படுவார்கள்.
10 “Un notiks tai dienā”, saka Tas Kungs, “ka Es izdeldēšu tavus zirgus no tava vidus un iznīcināšu tavus ratus.
௧0அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராமல் அழித்து, உன் இரதங்களை அழித்து,
11 Un Es izdeldēšu tavas zemes pilsētas un nolauzīšu visas tavas stiprās vietas.
௧௧உன் தேசத்துப் பட்டணங்களை அழித்து, உன் மதில்களையெல்லாம் அழித்து,
12 Un Es izdeldēšu buršanu no tavas rokas, ka zīlnieki pie tevis vairs nebūs.
௧௨சூனிய வித்தைகள் உன் கையில் இல்லாதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்.
13 Un Es izdeldēšu tavus dievekļus un tavus elkudievu stabus no tava vidus, un tu nemetīsies zemē priekš savu roku darba.
௧௩உன் வார்ப்பிக்கப்பட்ட சிலைகளையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இல்லாதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் படைப்புகளை நீ இனிப் பணிந்துகொள்ளமாட்டாய்.
14 Es izraušu tavas ašeras no tava vidus un iznīcināšu tavas pilsētas.
௧௪நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இல்லாமல் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து,
15 Un Es atriebšos ar dusmību un bardzību pie tiem pagāniem, kas neklausa.”
௧௫செவிகொடுக்காத அந்நிய மக்களிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.

< Michas 5 >