< Marka Evaņg̒elijs 13 >
1 Un Viņam no Dieva nama izejot, viens no Viņa mācekļiem uz To sacīja: “Mācītāj, lūk, kādi akmeņi tie ir, un kādas ēkas.”
௧இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்படும்போது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, இதோ, இந்தக் கற்கள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டிடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
2 Un Jēzus atbildēja un uz to sacīja: “Vai tu visas šās lielās ēkas redzi? Tur akmens uz akmens netaps atstāts, kas netaps noplēsts.”
௨இயேசு அவனுக்கு மறுமொழியாக: இந்தப் பெரிய கட்டிடங்களைக் பார்க்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்.
3 Un kad Viņš sēdēja uz Eļļas kalna Dieva namam pretī, tad Pēteris un Jēkabs un Jānis un Andrejs Viņu jautāja sevišķi:
௩பின்பு, அவர் தேவாலயத்திற்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடம் தனிமையில் வந்து:
4 “Saki mums, kad tas būs, un kāda tā zīme, kad viss tas piepildīsies?”
௪இவைகள் எப்பொழுது நடக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறும் காலங்களுக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
5 Bet Jēzus tiem atbildēja un iesāka runāt: “Pielūkojiet, ka neviens jūs nepieviļ.
௫இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.
6 Jo daudzi nāks Manā Vārdā sacīdami: es tas esmu; un daudz pievils.
௬ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தைச் சொல்லி: நானே கிறிஸ்து என்று, அநேகரை ஏமாற்றுவார்கள்.
7 Bet kad jūs dzirdēsiet karus un kara valodas, tad nebēdājaties, jo tam būs tā notikt; bet tas gals vēl nav klāt.
௭யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காமல் இருங்கள்; இவைகள் நடக்கவேண்டியவைகள். ஆனாலும், முடிவு உடனே வராது.
8 Jo tauta celsies pret tautu un valsts pret valsti un vietām būs zemes trīcēšanas, bada laiki un dumpji.
௮மக்களுக்கு எதிராக மக்களும், ராஜ்யத்திற்கு எதிராக ராஜ்யமும் எழும்பும்; பூமி அதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்; பஞ்சங்களும், கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.
9 Tas būs to grūto bēdu iesākums; bet lūkojiet jūs uz sevi pašiem; jo tie jūs nodos augstās tiesās un baznīcās; un jūs tapsiet šausti un Manis dēļ valdnieku un ķēniņu priekšā vesti, tiem par liecību.
௯நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால், உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெப ஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள்.
10 Un evaņģēlijam būs papriekš tapt sludinātam visām tautām.
௧0எல்லா தேசத்தின் மக்களுக்கும் நற்செய்தி முதலில் பிரசங்கிக்கப்படவேண்டும்.
11 Kad nu tie jūs vedīs, jūs nododami, tad nebēdājaties iepriekš, kas jums būs jārunā, nedz apdomājaties; bet kas jums tanī pašā stundā taps dots, to runājiet; jo jūs neesat tie, kas runā, bet Tas Svētais Gars.
௧௧அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படாமலும் சிந்திக்காமலும் இருங்கள்; அந்த நேரத்திலே உங்களுக்குக் கொடுக்கப்படுகிற வார்த்தைகளையே பேசுங்கள்; ஏனென்றால், பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, பரிசுத்த ஆவியானவரே பேசுகிறவர்.
12 Bet tad brālis brāli nodos pie nāves un tēvs dēlu; un bērni celsies pret vecākiem un viņus nonāvēs.
௧௨அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள்.
13 Un jūs tapsiet ienīdēti no visiem Mana Vārda dēļ; bet kas pastāv līdz galam, tas taps izglābts.
௧௩என் நாமத்தினால் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள். கடைசிவரைக்கும் நிலைத்து நிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
14 Bet kad jūs to izpostīšanas negantību redzēsiet, par ko pravietis Daniēls ir runājis, ka tā stāv, kur neklājās (kas to lasa, tas lai to labi apdomā), tad lai bēg uz kalniem tie, kas ir Jūdu zemē.
௧௪மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும்; அது நிற்கக்கூடாத இடத்திலே நிற்கிறதை நீங்கள் பார்க்கும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும்.
15 Un kas uz jumta ir, tas lai nenokāpj namā un tur lai neieiet, ko no sava nama iznest.
௧௫வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிற்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாவது எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கவேண்டும்.
16 Un kas ir laukā, tas lai neatgriežas atpakaļ savas drēbes paņemt.
௧௬வயலில் வேலைசெய்கிறவன் மாற்று உடையை எடுப்பதற்கு வீட்டிற்கு திரும்பிப் போகாமல் இருக்கவேண்டும்.
17 Bet vai tām grūtām un tām zīdītājām tanīs dienās.
௧௭அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ!
18 Bet lūdzat, ka jūsu bēgšana nenotiek ziemas laikā.
௧௮இவைகள் மழைகாலத்திலே நடக்காதபடி வேண்டிக்கொள்ளுங்கள்.
19 Jo tanī laikā būs tādas lielas bēdas, kādas nav bijušas no paša iesākuma, kamēr Dievs pasauli radījis līdz šim, un kādas arī nebūs.
௧௯ஏனென்றால், தேவன் உலகத்தை படைத்தது முதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடக்காததுமான உபத்திரவம் அந்த நாட்களில் உண்டாயிருக்கும்.
20 Un ja Tas Kungs šās dienas nepaīsinātu, tad neviens netaptu izglābts; bet to izredzēto dēļ ko Viņš izredzējis, Viņš tās dienas ir paīsinājis.
௨0கர்த்தர் அந்த நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தம், அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.
21 Un ja kas tanī laikā uz jums sacīs: redzi, še ir Kristus, jeb redzi, tur Viņš ir; tad neticiet.
௨௧அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று யாராவது சொன்னால், நம்பவேண்டாம்.
22 Jo viltīgi Kristi un viltīgi pravieši celsies un lielas zīmes un brīnumus darīs, ka pieviltu, ja tas varētu notikt, arī tos izredzētos.
௨௨ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, முடிந்தவரை தெரிந்துகொள்ளப்பட்டவர்களை ஏமாற்ற அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
23 Bet jūs pielūkojiet; redzi, Es jums to visu papriekš esmu sacījis.
௨௩நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
24 Bet tanīs dienās, pēc tām bēdām, saule aptumšosies, un mēnesis nedos savu spīdumu;
௨௪அந்த நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் இருள் அடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காது;
25 Un debess zvaigznes nokritīs, un debess stiprumi kustināsies.
௨௫வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களில் உள்ள அதிகார வல்லமைகள் அசைக்கப்படும்.
26 Un tad redzēs To Cilvēka Dēlu nākam padebešos ar lielu spēku un godību.
௨௬அப்பொழுது மனிதகுமாரன் அதிக வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைப் பார்ப்பார்கள்.
27 Un tad Viņš sūtīs Savus eņģeļus un sakrās Savus izredzētos no tiem četriem vējiem, no zemes gala līdz debess galam.
௨௭அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து, வானத்தின் கடைசிமுனை வரைக்கும் உள்ள நான்கு திசைகளிலும் இருந்து கூட்டிச் சேர்ப்பார்.
28 Bet mācaties līdzību no vīģes koka: kad viņa zars jau iezeļ, un lapas plaukst, tad jūs nomaniet, vasaru esam klātu.
௨௮அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைத்தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள்.
29 Tā arīdzan, kad jūs šo visu redzēsiet notiekam, tad ziniet, ka tas ir tuvu priekš durvīm.
௨௯அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது, அவர் அருகில் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
30 Patiesi, Es jums saku: šī cilts nezudīs, tiekams viss tas būs noticis.
௩0இவைகளெல்லாம் நடக்கும்முன்பு இந்த சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
31 Debess un zeme zudīs, bet Mani vārdi nezudīs.
௩௧வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
32 Bet par to dienu jeb stundu neviens nezina, ne tie eņģeļi, kas debesīs, ne Tas Dēls, kā vien Tas Tēvs.
௩௨அந்த நாளும் அந்த நேரமும் பிதா ஒருவர்தவிர வேறு ஒருவனுக்கும் தெரியாது, பரலோகத்தில் உள்ள தூதர்களுக்கும் தெரியாது, குமாரனுக்கும் தெரியாது.
33 Pielūkojiet, esiet modrīgi un lūdziet, jo jūs nezināt, kad tas laiks ir.
௩௩அந்தகாலத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியாததினால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
34 Tā kā viens cilvēks, citur noiedams, atstāja savu namu un deva saviem kalpiem varu un ikkatram savu darbu, un pavēlēja durvju sargam būt nomodā.
௩௪ஒரு மனிதன் தன் வீட்டைவிட்டு, தூரதேசத்திற்கு பயணம் செய்யத் தீர்மானிக்கும்போது, தன் வேலைக்காரர்களுக்கு பொறுப்பைக் கொடுத்து, அவனவனுக்குத் தன்தன் வேலைகளையும் நியமித்து, விழித்திருக்கும்படி காவல்காக்கிறவனுக்குச் சொல்லுவான்.
35 Tad nu esat nomodā! Jo jūs nezināt, kad tas nama kungs nāk, vai vakarā, vai nakts vidū, vai gaiļos, vai no rīta agri,
௩௫அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனென்றால், வீட்டின் முதலாளி மாலைநேரத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று உங்களுக்குத் தெரியாது.
36 Ka tas nejauši nākdams, jūs neatrod guļam.
௩௬நீங்கள் நினைக்காத நேரத்தில் அவன் வந்து, நீங்கள் தூங்குகிறதைக் கண்டுபிடிக்காதபடி விழித்திருங்கள்.
37 Bet ko Es jums saku, to Es saku visiem: esat nomodā.”
௩௭நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லோருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.