< Jeremijas 37 >
1 Un ķēniņš Cedeķija, Josijas dēls, valdīja Jekanijas, Jojaķima dēla, vietā; to Nebukadnecars, Bābeles ķēniņš, bija iecēlis par ķēniņu Jūda zemē.
௧பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாதேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய மகனாகிய கோனியாவின் பட்டத்திற்கு யோசியாவின் மகனாகிய சிதேக்கியா வந்து ஆட்சிசெய்தான்.
2 Bet ne viņš, ne viņa kalpi, ne tie ļaudis tai zemē neklausīja Tā Kunga vārdiem, ko viņš bija runājis caur pravieti Jeremiju.
௨யெகோவா எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் மக்களாகிலும் கேட்கவில்லை.
3 Un ķēniņš Cedeķija sūtīja Juhalu, Šelemijas dēlu, un priesteri Cefaniju, Mazejas dēlu, pie pravieša Jeremijas un lika sacīt: lūdz jel par mums To Kungu, mūsu Dievu.
௩சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் மகனாகிய யூகாலையும், மாசெயாவின் மகனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம் செய்யவேண்டும் என்று சொல்லச் சொன்னான்.
4 Jo Jeremija gāja vēl iekšā un ārā starp tiem ļaudīm un vēl nebija cietumā ielikts.
௪அப்பொழுது எரேமியா மக்களின் நடுவே போக்கும் வரத்துமாக இருந்தான்; அவனை அவர்கள் காவல் வீட்டில் இன்னும் போடவில்லை.
5 Un Faraona karaspēks bija cēlies no Ēģiptes zemes, un tie Kaldeji, kas ap Jeruzālemi bija apmetušies, to baumi par tiem dzirdējuši, no Jeruzālemes bija aizgājuši.
௫பார்வோனின் சேனையோவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்டது; எருசலேமை முற்றுகைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு, எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள்.
6 Tad Tā Kunga vārds notika uz pravieti Jeremiju sacīdams:
௬அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசிக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்:
7 Tā saka Tas Kungs, Israēla Dievs: tā jums būs atsacīt Jūda ķēniņam, kas jūs pie Manis sūtījis, Mani vaicāt: redzi, Faraona karaspēks, kas jums izgājis palīgā, griezīsies atpakaļ uz savu zemi, uz Ēģipti.
௭இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், என்னிடத்தில் விசாரிக்கும்படி உங்களை என்னிடத்திற்கு அனுப்பின யூதாவின் ராஜாவை நீங்கள் நோக்கி: இதோ, உங்களுக்கு ஒத்தாசையாகப் புறப்பட்ட பார்வோனின் சேனை தன் தேசமாகிய எகிப்திற்குத் திரும்பிப்போகும்.
8 Un Kaldeji nāks atpakaļ un karos pret šo pilsētu un to uzņems un to sadedzinās ar uguni.
௮கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்திற்கு விரோதமாகப் போர்செய்து, அதைப் பிடித்து, நெருப்பினால் சுட்டெரிப்பார்கள்.
9 Tā saka Tas Kungs: nepieviļat savas dvēseles, sacīdami: Kaldeji tiešām no mums aizies projām, - jo tie neaizies.
௯கல்தேயர் நம்மைவிட்டு கண்டிப்பாகப் போய்விடுவார்களென்று சொல்லி, நீங்கள் மோசம் போகாதிருங்கள், அவர்கள் போவதில்லை.
10 Jo jebšu jūs kautu visu Kaldeju spēku, kas pret jums karo, un atliktos no tiem (tikai) kādi ievainoti vīri, tad tie celsies ikkatrs savā teltī un sadedzinās šo pilsētu ar uguni.
௧0உங்களுடன் போர்செய்கிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் தோற்கடித்தாலும், மீந்தவர்கள் எல்லோரும் காயம்பட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை நெருப்பினால் சுட்டெரிப்பார்கள் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்.
11 Un notikās, kad Kaldeju spēks no Jeruzālemes bija aizgājis priekš Faraona karaspēka,
௧௧பார்வோனின் படை வருகிறதென்று, கல்தேயருடைய படை எருசலேமைவிட்டுப் போனபோது,
12 Tad Jeremija izgāja no Jeruzālemes, iet uz Benjamina zemi un tur uzņemt savu daļu to ļaužu vidū.
௧௨எரேமியா அவ்விடத்தைவிட்டு, மக்களின் நடுவில் விலகிப்போகிறவன் போல, பென்யமீன் தேசத்திற்குப் போக மனதாய் எருசலேமிலிருந்து புறப்பட்டுப்போனான்.
13 Un kad viņš nāca Benjamina vārtos, tad tur bija tas sargu virsnieks, Jerija vārdā, Šelemijas dēls, Kananijas dēla dēls, tas sagrāba pravieti Jeremiju un sacīja: tu gribi pāriet pie Kaldejiem.
௧௩அவன் பென்யமீன் வாசலில் வந்தபோது, காவற்காரர்களின் அதிபதியாகிய யெரியா என்னும் பெயருள்ள ஒருவன் அங்கே இருந்தான்; அவன் அனனியாவின் மகனாகிய செலேமியாவின் மகன்; அவன்: நீ கல்தேயரைச் சேரப்போகிறவன் என்றுசொல்லி, எரேமியா தீர்க்கதரிசியைப் பிடித்தான்.
14 Un Jeremija sacīja: tas nav tiesa, es nepāriešu pie Kaldejiem. Bet Jerija viņu neklausīja un sagrāba Jeremiju un to noveda pie tiem lielkungiem.
௧௪அப்பொழுது எரேமியா: அது பொய், நான் கல்தேயரைச் சேரப்போகிறவனல்ல என்றான்; ஆனாலும் யெரியா எரேமியாவின் சொல்லைக் கேளாமல், அவனைப் பிடித்து, பிரபுக்களிடத்தில் கொண்டுபோனான்.
15 Un tie lielkungi apskaitās par Jeremiju un viņu sita un lika cietumā, rakstītāja Jonatana namā, jo to tie bija darījuši par cietuma namu.
௧௫அப்பொழுது பிரபுக்கள்: எரேமியாவின்மேல் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, அவனைக் காரியதரிசியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்; அவர்கள் அதைக் காவற்கூடமாக்கியிருந்தார்கள்.
16 Tā Jeremija gāja cietumā tais pagrabos, un tur Jeremija sēdēja daudz dienas.
௧௬அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் நுழைந்து, அங்கே அநேக நாட்கள் இருந்தான்.
17 Tad ķēniņš Cedeķija sūtīja un lika viņu atvest, un ķēniņš viņu vaicāja paslepeni savā namā un sacīja: vai ir kāds vārds no Tā Kunga? Un Jeremija sacīja: ir. Un viņš sacīja: tu Bābeles ķēniņam tapsi dots rokā.
௧௭பின்பு சிதேக்கியா ராஜா அவனை வரவழைத்து: யெகோவாவால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டில் இரகசியமாகக் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான்.
18 Un Jeremija sacīja uz ķēniņu Cedeķiju: ko es esmu grēkojis pret tevi un pret taviem kalpiem un pret šiem ļaudīm, ka jūs mani esat likuši cietumā?
௧௮பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டில் அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த மக்களுக்கும் விரோதமாக என்ன குற்றம்செய்தேன்?
19 Kur nu ir jūsu pravieši, kas jums sludināja un sacīja: Bābeles ķēniņš nenāks pret jums nedz pret šo zemi?
௧௯பாபிலோன் ராஜா உங்களுக்கும் இந்தத் தேசத்திற்கும் விரோதமாக வருவதில்லையென்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய தீர்க்கதரிசிகள் எங்கே?
20 Tad nu, klausi jel, ak kungs un ķēniņ! Lai jel mana lūgšana tavā priekšā ir pieņēmīga, un neved mani atpakaļ rakstītāja Jonatana namā, ka es tur nemirstu.
௨0இப்போதும் ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குக் காதுகொடுத்து, என் விண்ணப்பத்திற்குத் தயைசெய்து, என்னைக் காரியதரிசியாகிய யோனத்தானுடைய வீட்டிற்குத் திரும்ப அனுப்பவேண்டாம்; அனுப்பினால் நான் அங்கே செத்துப்போவேன் என்றான்.
21 Tad ķēniņš Cedeķija pavēlēja, lai Jeremiju tura cietuma pagalmā, un viņam ikdienas tapa dots viens maizes rieciens no cepēju ielas, tiekams visa maize pilsētā bija apēsta. Tā Jeremija palika cietuma pagalmā.
௨௧அப்பொழுது எரேமியாவைக் காவல்நிலையத்தின் முற்றத்தில் காக்கவும், நகரத்தில் அப்பம் இருக்குவரை அப்பம் சுடுகிறவர்களின் வீதியில் தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக்கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவல்நிலையத்தின் முற்றத்தில் இருந்தான்.