< Apustuļu Darbi 8 >

1 Bet Saulam viņa nāve bija ļoti pa prātam; un tanī dienā liela vajāšana cēlās pret to draudzi, kas bija Jeruzālemē. Un visi izklīda pa Jūdu zemes un Samarijas tiesām, tik ne tie apustuļi.
ஸ்தேவானைக் கொலைசெய்வதற்கு சவுலும் சம்மதித்திருந்தான். அந்த நாட்களிலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டானது. அப்போஸ்தலர்கள்தவிர, மற்ற எல்லோரும் யூதேயா சமாரியா நாடுகளில் சிதறப்பட்டுப்போனார்கள்.
2 Un dievbijīgi vīri Stefanu paglabāja un viņu gauži nožēloja.
தேவபக்தியுள்ள மனிதர்கள் ஸ்தேவானை எடுத்து அடக்கம்செய்து, அவனுக்காக மிகவும் துக்கம் அனுசரித்தார்கள்.
3 Bet Sauls to draudzi postīja un gāja pa namiem, satverdams gan vīrus, gan sievas, un tos nodeva cietumā.
சவுல் ஒவ்வொரு வீடாகப்புகுந்து, ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், சிறைப்பிடித்து சபையை அழித்துக்கொண்டிருந்தான்.
4 Tad nu tie izklīdinātie apkārt staigāja, to vārdu pasludinādami.
சிதறிப்போனவர்கள் எங்கும் சுற்றித்திரிந்து நற்செய்தியைப் போதித்துவந்தார்கள்.
5 Un Filips uz vienu Samarijas pilsētu nogājis, tiem Kristu pasludināja.
அப்பொழுது பிலிப்பு என்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குச் சென்று, அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் போதித்தான்.
6 Un tie ļaudis vienprātīgi klausījās uz to, ko Filips runāja, dzirdēdami un redzēdami tās zīmes, ko viņš darīja;
பிலிப்பு செய்த அதிசயங்களை மக்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டு கவனித்தார்கள்.
7 Jo no daudziem, kam bija nešķīsti gari, tie izgāja, ar stipru balsi brēkdami, un daudzi melmeņu sērdzīgi(paralizēti) un tizli tapa dziedināti.
அநேகருக்குள் இருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தமிட்டு அவர்களைவிட்டுப்போனது. அநேக கைகால்கள் செயலிலந்தவர்களும், நடக்க இயலாதவர்களும் சுகமாக்கப்பட்டார்கள்.
8 Un liela līksmība cēlās tai pilsētā.
அந்தப் பட்டணத்திலே மிகுந்த மகிழ்ச்சி உண்டானது.
9 Un kāds vīrs, ar vārdu Sīmanis, tai pilsētā līdz tam bija darbojies ar buršanu un Samarijas ļaudis iztrūcinājis sacīdams, ka esot liels vīrs;
சீமோன் என்ற ஒருவன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தை செய்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு மக்களைத் திகைக்கவைத்துக்கொண்டிருந்தான்.
10 Tam visi klausīja, tā mazi kā lieli sacīdami: “Šis ir tas lielais Dieva spēks.”
௧0தெய்வத்தின் பெரிய சக்தி இவன்தான் என்று நினைத்து, சிறியோர் பெரியோர் எல்லோரும் அவனுடைய சொல்லைக்கேட்டு வந்தார்கள்.
11 Bet tie tāpēc tam klausīja, ka tas jau sen ar burvību tos bija apstulbojis.
௧௧அவன் நீண்ட நாட்களாக தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.
12 Kad tie nu Filipam ticēja, kas tiem pasludināja to evaņģēliju par Dieva valstību un Jēzus Kristus vārdu, tad tie tapa kristīti, tā vīri kā sievas.
௧௨தேவனுடைய இராஜ்யத்திற்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்திற்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு போதித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, ஆண்களும் பெண்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
13 Un Sīmanis pats arīdzan ticēja, un kristīts pastāvīgi turējās pie Filipa, un redzēdams zīmes un lielus brīnumus notiekam, viņš iztrūkās.
௧௩அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைச் சேர்ந்துகொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் பார்த்து பிரமித்தான்.
14 Bet tie apustuļi Jeruzālemē dzirdēdami, ka Samarija Dieva vārdu bija pieņēmusi, sūtīja pie tiem Pēteri un Jāni.
௧௪சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.
15 Šie nonākuši par tiem lūdza Dievu, ka tie dabūtu Svēto Garu.
௧௫இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமட்டும் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,
16 Jo tas vēl uz nevienu no tiem nebija nācis, bet tie bija tikai kristīti uz Tā Kunga Jēzus vārdu.
௧௬அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்செய்து,
17 Tad viņi rokas tiem uzlika, un tie dabūja Svēto Garu.
௧௭அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றார்கள்.
18 Bet Sīmanis redzēdams, ka caur apustuļu roku uzlikšanu Svētais Gars top dots, tiem dāvāja naudu,
௧௮அப்போஸ்தலர்கள் தங்களுடைய கரங்களை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுகிறதை சீமோன் பார்த்தபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:
19 Sacīdams: “Dodiet man arīdzan to spēku, ka tas, kam es rokas uzlieku, dabū Svēto Garu.”
௧௯நான் எவன்மேல் என் கரங்களை வைக்கிறேனோ, அவனும் பரிசுத்த ஆவியானவரைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
20 Bet Pēteris uz to sacīja: “Ka tu pazustu ar savu sudrabu, tāpēc ka tu domā Dieva dāvanu par naudu pirkt.
௨0பேதுரு அவனைப் பார்த்து: தேவனுடைய வரத்தை பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாம் என்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடுகூட அழிந்து போகக்கடவது.
21 Tev nav daļas nedz mantošanas pie šā vārda, jo tava sirds nav taisna Dieva priekšā.
௨௧உன் இருதயம் தேவனுக்கு முன்பாகச் செம்மையாக இல்லாதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
22 Tāpēc atgriezies no šā sava ļaunuma un lūdz Dievu, vai šis tavas sirds nodoms tev varētu tapt piedots;
௨௨ஆகவே, நீ உன் தீயகுணத்தைவிட்டு மனம்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
23 Jo es tevi redzu rūgtas žults pilnu un netaisnībā saistītu.”
௨௩நீ கசப்பான விஷத்திலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
24 Bet Sīmanis atbildēja un sacīja: “Lūdziet jūs par mani To Kungu, lai uz mani nenāk, ko jūs esat runājuši.”
௨௪அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு சம்பவிக்காதபடிக்கு, எனக்காகக் கர்த்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.
25 Tad nu Tā Kunga vārdu apliecinājuši un runājuši, tie griezās atpakaļ uz Jeruzālemi un pasludināja evanģēliju daudz Samarijas miestos.
௨௫இவ்விதமாக அவர்கள் கர்த்தருடைய வார்த்தையைச் சாட்சியாக அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் நற்செய்தியைப் போதித்து, எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள்.
26 Un Tā Kunga eņģelis uz Filipu runāja sacīdams: “Celies un ej uz dienvidu pusi uz to ceļu, kas no Jeruzālemes iet uz Gazu, kur daudz nestaigā.”
௨௬பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு திசையாக எருசலேமிலிருந்து காசா பட்டணத்திற்குப் போகிற வனாந்திரப்பாதைவழியாகப் போ என்றான்.
27 Un cēlies viņš nogāja. Un redzi, viens Moru vīrs, Kandaces, Moru zemes ķēniņienes, kambarjunkurs un lielskungs, kas bija pār visām viņas mantām, tas bija nācis uz Jeruzālemi, Dievu pielūgt.
௨௭அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜாத்தியாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாக இருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் தொழுதுகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து;
28 Un atpakaļ uz ceļu devies viņš sēdēja savos ratos un lasīja pravieti Jesaju.
௨௮ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான்.
29 Un Tas Gars uz Filipu sacīja: “Ej klāt un turies pie šiem ratiem.”
௨௯ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.
30 Un piesteidzies Filips dzirdēja viņu lasām pravieti Jesaju un sacīja: “Vai tu arī saproti, ko tu lasi?”
௩0அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குப் புரிகிறதா என்றான்.
31 Bet tas sacīja: “Kā lai to varu, kad neviens mani nemāca?” Un viņš lūdza Filipu, lai tas uzkāptu un pie tā piesēstos.
௩௧அதற்கு அவன்: ஒருவன் எனக்குப் புரியவைக்காவிட்டால் அது எனக்கு எப்படி புரியும் என்று சொல்லி; பிலிப்பை, தன்னுடனே ஏறி உட்காரும்படி வேண்டிக்கொண்டான்.
32 Un tas rakstu gabals, ko tas lasīja, bija šis: “Viņš ir tā kā avs pie kaušanas vests un itin kā jērs apklusis sava cirpēja priekšā, tāpat Viņš savu muti neatdara.
௩௨அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: “அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தம்போடாத ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
33 Iekš Viņa pazemošanās Viņa sodība ir atņemta; kas izteiks Viņa dzimumu? Jo Viņa dzīvība top aizrauta no zemes.”
௩௩அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போனது; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும்” என்பதே.
34 Un tas kambarjunkurs atbildēja un uz Filipu sacīja: “Es tevi lūdzu, par ko tas pravietis to saka? Vai par sevi pašu, jeb vai par citu kādu?”
௩௪மந்திரி பிலிப்பை நோக்கி: “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான்.
35 Un Filips savu muti atdarīja un no šī raksta iesākdams viņam pasludināja to evaņģēliju no Jēzus.
௩௫அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை அடிப்படையாக வைத்து இயேசுவைக்குறித்து அவனுக்குப் போதித்தான்.
36 Un to ceļu braukdami tie nāca pie kāda ūdens, un tas kambarjunkurs sacīja: “Redz, še ūdens! Kas stāv pretī, ka topu kristīts?”
௩௬இவ்விதமாக அவர்கள் போய்க்கொண்டிருக்கும்போது, தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: “இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடை என்ன” என்றான்.
37 Bet Filips sacīja: “Ja tu no visas sirds tici, tad to var.” Un viņš atbildēja un sacīja: “Es ticu, ka Jēzus Kristus ir Dieva Dēls.”
௩௭அதற்குப் பிலிப்பு: “நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லை” என்றான். அப்பொழுது அவன்: “இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன்” என்று சொல்லி;
38 Un viņš pavēlēja, tos ratus pieturēt, un abi divi nokāpa ūdenī, tā Filips kā tas kambarjunkurs, un viņš to kristīja.
௩௮இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்புவும் மந்திரியும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.
39 Un kad tie no ūdens bija izkāpuši, Dieva Gars Filipu aizrāva, un tas kambarjunkurs viņu vairs neredzēja; bet viņš līksms brauca savu ceļu.
௩௯அவர்கள் தண்ணீரைவிட்டுக் கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அதற்குப்பின்பு அவனைக் காணாமல், சந்தோஷத்தோடு தன் வழியே போனான்.
40 Bet Filips atradās Ašdodā; un visas pilsētas pārstaigādams, viņš evaņģēliju sludināja, kamēr nāca uz Cezareju.
௪0பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அந்த இடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவிற்கு வருகிறவரையில் அனைத்து பட்டணங்களிலும் நற்செய்தியைப் போதித்துக்கொண்டுவந்தான்.

< Apustuļu Darbi 8 >