< Pāvila 2. Vēstule Timotejam 4 >

1 Es piekodināju Dieva un Tā Kunga Jēzus Kristus priekšā, kas nāks tiesāt dzīvus un mirušus, Viņa atspīdēšanu un Viņa valstību minēdams:
நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடு இருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு முன்பாகவும், அவருடைய வருகையையும், அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:
2 Pasludini to vārdu, dari to laikā, nelaikā, pārliecini, apdraudi, paskubini iekš visas lēnprātības un mācības.
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் கவனமாக திருசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் தவறென்று எடுத்துறைத்து, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
3 Jo nāks laiki, ka tie to veselīgo mācību nepanesīs, bet pēc savām pašu iekārošanām sev mācītājus uzkraus, kā tiem ausis niez,
ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவி கொடுக்காதவர்களாகி, தங்களுடைய சுயவிருப்பங்களுக்குத் தகுந்த போதகர்களைத் தங்களுக்கு மிகுதியாக சேர்த்துக்கொண்டு.
4 Un novērsīs ausis no patiesības un griezīsies pie pasakām.
சத்தியத்திற்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகும் காலம் வரும்.
5 Bet tu esi nomodā iekš visām lietām, panes ļaunumu, dari evaņģelista darbu, izdari savu amatu pilnīgi.
நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாக இரு, தீங்கு அனுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
6 Jo es jau topu upurēts, un manas atraisīšanas laiks ir tuvu klāt.
ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாகத் தந்துவிட்டேன்; நான் சரீரத்தைவிட்டுப் பிரியும் நேரம் வந்தது.
7 To labo cīnīšanos esmu cīnījies, to tecēšanu esmu pabeidzis, ticību esmu turējis.
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
8 Joprojām man ir nolikts tas taisnības kronis, ko man Tas Kungs, Tas taisnais Soģis, dos viņā dienā, un nevien man, bet arī visiem, kas Viņa atspīdēšanu ir mīlējuši.
இப்பொழுது நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்த நாளிலே அதை எனக்குக் கொடுப்பார்; எனக்கு மாத்திரமல்ல, அவருடைய வருகையை விரும்பும் அனைவருக்கும் அதைக் கொடுப்பார்.
9 Steidzies ātri nākt pie manis;
நீ சீக்கிரமாக என்னிடத்தில் வரும்படி ஆயத்தப்படு.
10 Jo Demas mani atstājis, mīlēdams šo pasauli, un ir nogājis uz Tesaloniku, Krescents uz Galatiju, Titus uz Dalmatiju. (aiōn g165)
௧0ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். (aiōn g165)
11 Lūkas vien ir pie manis; ņem Marku un atved to līdz, jo tas man ļoti derīgs pie kalpošanas.
௧௧லூக்காமட்டும் என்னோடு இருக்கிறான். மாற்குவை உன்னோடு அழைத்துக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.
12 Tihiku es esmu sūtījis uz Efesu.
௧௨தீகிக்குவை நான் எபேசுவிற்கு அனுப்பினேன்.
13 To mēteli, ko es Troadā pie Karpa esmu atstājis, atnes nākdams līdz un tās grāmatas, visvairāk tās rakstāmās ādas.
௧௩துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவனிடத்தில் நான் வைத்துவிட்டுவந்த மேலங்கியையும், புத்தகங்களையும், விசேஷமாகத் தோல் சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.
14 Aleksandrs, tas kalējs, man daudz ļauna ir darījis; Tas Kungs tam atmaksās pēc viņa darbiem.
௧௪கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.
15 No tā tu arīdzan sargies, jo tas mūsu vārdiem pārlieku pretī stāvējis.
௧௫நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாக இரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.
16 Pie manas pirmās aizbildināšanās neviens pie manis nav bijis, bet visi ir atstājušies no manis, (lai tas tiem netop pielīdzināts).
௧௬நான் முதல்முறை உத்தரவுசொல்ல நிற்கும்போது ஒருவனும் என்னோடுகூட இருக்கவில்லை, எல்லோரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சாராதிருப்பதாக.
17 Bet Tas Kungs man ir klāt bijis un mani stiprinājis, ka caur mani tā mācība pilnīgi taptu zināma un visi pagāni to dzirdētu; un es esmu izrauts no lauvas rīkles.
௧௭கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், யூதரல்லாத எல்லோரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் காப்பாற்றப்பட்டேன்.
18 Un Tas Kungs mani izraus no ikviena ļauna darba un izglābs uz Savu Debesu valstību; Tam ir gods mūžīgi mūžam! Āmen. (aiōn g165)
௧௮கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
19 Sveicini Prisku un Aķilu un Onesifora namu.
௧௯பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவிற்கும், ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.
20 Erasts ir palicis Korintū, un Trofimu es esmu atstājis neveselu Miletū.
௨0எரஸ்து கொரிந்து பட்டணத்தில் தங்கிவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.
21 Steidzies nākt priekš ziemas. Tevi sveicina Eubuls un Pudents un Linus un Klaudija un visi brāļi.
௨௧மழைக்காலத்திற்குமுன் நீ வந்துசேரும்படி ஆயத்தப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லா சகோதரர்களும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
22 Lai Tas Kungs Jēzus Kristus ir ar tavu garu. Žēlastība lai ir ar jums! Āmen.
௨௨கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

< Pāvila 2. Vēstule Timotejam 4 >