< Pirmā Laiku 15 >

1 Un Dāvids uztaisīja sev namus Dāvida pilsētā un sataisīja vietu Dieva šķirstam un tam uzcēla telti.
அவன் தனக்கு தாவீதின் நகரத்தில் வீடுகளைக் கட்டி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.
2 Tad Dāvids sacīja: neviens lai nenes Dieva šķirstu kā vien Leviti, jo tos Tas Kungs ir izredzējis, nest Dieva šķirstu un viņam kalpot mūžīgi.
பிறகு தாவீது: லேவியர்கள் தவிர வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கக் கூடாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களையே யெகோவா தெரிந்துகொண்டார் என்றான்.
3 Un Dāvids sapulcēja visu Israēli uz Jeruzālemi, novest Dieva šķirstu savā vietā, ko viņš tam bija sataisījis.
அப்படியே யெகோவாவுடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் இடத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
4 Un Dāvids sasauca Ārona bērnus un Levitus:
ஆரோனின் சந்ததிகளையும்,
5 No Kehāta bērniem virsnieku Uriēli ar saviem brāļiem, simt un divdesmit;
லேவியர்களாகிய கோகாத் சந்ததியில் பிரபுவாகிய ஊரியேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றிருபதுபேரையும்,
6 No Merarus bērniem virsnieku Asaju ar saviem brāļiem, divsimt un divdesmit;
மெராரியின் சந்ததியில் பிரபுவாகிய அசாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூற்றிருபதுபேரையும்,
7 No Ģerzoma bērniem virsnieku Joēli ar saviem brāļiem, simt un trīsdesmit.
கெர்சோன் மகன்களில் பிரபுவாகிய யோவேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றுமுப்பதுபேரையும்,
8 No Elicafana bērniem virsnieku Šemaju ar saviem brāļiem, divsimt;
எலிசாபான் மகன்களில் பிரபுவாகிய செமாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூறுபேரையும்,
9 No Hebrona bērniem virsnieku Eliēli ar saviem brāļiem, astoņdesmit;
எப்ரோன் சந்ததியில் பிரபுவாகிய ஏலியேலையும், அவனுடைய சகோதரர்களாகிய எண்பதுபேரையும்,
10 No Uziēļa bērniem virsnieku Aminadabu ar saviem brāļiem, simt un divpadsmit.
௧0ஊசியேல் சந்ததியில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றுப்பன்னிரெண்டு பேரையும் தாவீது கூடிவரச்செய்தான்.
11 Un Dāvids aicināja priesterus Cadoku un Abjataru, un Levitus Uriēli, Azaju un Joēli, Šemaju un Eliēli un Aminadabu
௧௧பின்பு தாவீது ஆசாரியர்களாகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியர்களாகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, ஏலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து,
12 Un uz tiem sacīja: jūs Levitu tēvu namu virsnieki, svētījaties paši ar saviem brāļiem un atvedat Tā Kunga, Israēla Dieva, šķirstu, kur es tam vietu sataisījis.
௧௨அவர்களை நோக்கி: லேவியர்களில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர்கள், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்செய்த இடத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்களுடைய சகோதரர்களையும் பரிசுத்தம்செய்துகொள்ளுங்கள்.
13 Jo viņu reiz, kad jūs klāt nebijāt, Tas Kungs, mūsu Dievs, izlauza robu mūsu starpā, tāpēc ka to nemeklējām, kā pienācās.
௧௩முதலில் நீங்கள் அதை சுமக்காததாலும், நாம் நம்முடைய தேவனாகிய யெகோவாவை நியாயமானபடி தேடாமற்போனதாலும், அவர் நமக்குள்ளே அடிவிழச்செய்தார் என்றான்.
14 Tad tie priesteri un Leviti svētījās, atvest Tā Kunga, Israēla Dieva, šķirstu.
௧௪ஆசாரியர்களும் லேவியர்களும் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவரத் தங்களைச் சுத்தம்செய்துகொண்டார்கள்.
15 Un Levitu bērni nesa Dieva šķirstu, itin kā Mozus bija pavēlējis pēc Tā Kunga vārda, ar kārtīm uz saviem kamiešiem.
௧௫பின்பு லேவியர்கள் யெகோவாவுடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்தபடி தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினால் தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.
16 Un Dāvids pavēlēja Levitu virsniekiem sarīkot savus brāļus, tos dziedātājus, ar spēlēm, ar soma stabulēm, ar koklēm un pulkstenīšiem, skaņi dziedāt un balsi pacelt ar prieku.
௧௬தாவீது லேவியர்களின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களாகிய பாடகர்களைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான்.
17 Tad Leviti iecēla Hemanu, Joēļa dēlu, un no viņa brāļiem Asafu, Bereķijas dēlu, un no Merarus bērniem, saviem brāļiem, Etanu, Kuzajas dēlu,
௧௭அப்படியே லேவியர்கள் யோவேலின் மகனாகிய ஏமானையும், அவனுடைய சகோதரர்களில் பெரகியாவின் மகனாகிய ஆசாப்பையும், மெராரியின் சந்ததியான தங்களுடைய சகோதரர்களில் குஷாயாவின் மகனாகிய ஏத்தானையும்,
18 Un ar šiem savus brāļus no otras kārtas, Zahariju, Benu un Jaēziēli un Zemiramotu un Jejeēli un Unnu, Elijabu un Benaju un Maāseju un Matitiju un Eliveleju un Mikneju un ObedEdomu un Jeīeli, tos vārtu sargus.
௧௮இவர்களோடு இரண்டாவது வரிசையாகத் தங்களுடைய சகோதரர்களாகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளர்களையும் நிறுத்தினார்கள்.
19 Un dziedātāji bija Hemans, Asafs un Etans, skandinādami ar vara pulkstenīšiem,
௧௯பாடகர்களாகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், வெண்கல தொனியுள்ள கைத்தாளங்களை ஒலிக்கச்செய்து பாடினார்கள்.
20 Un Zaharija un Aziēls un Zemiramots un Jeīels un Unnus un Elijabs un Maāseja un Benaja ar smalki skanīgām soma stabulēm,
௨0சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருக்களை வாசித்தார்கள்.
21 Un Matitija un Elivelejus un Mikneja un ObedEdoms un Jeīels un Azazija, priekšā dziedādami ar astoņu stīgu koklēm.
௨௧மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாக வாசித்தார்கள்.
22 Un Kananaja bija Levitu vadonis, (dziesmas) uzņemt, viņš tos mācīja uzņemt, jo viņš bija saprātīgs.
௨௨லேவியர்களுக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாக இருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையை நடத்தினான்.
23 Un Bereķija un Elkanus bija šķirsta vārtu sargi.
௨௩பெரகியாவும் எல்க்கானாவும் பெட்டிக்கு முன்பாகக் காவல்காத்துவந்தார்கள்.
24 Un Zabanija un Jehošafats un Netaneēls un Amasajus un Zaharija un Benaja un Eliēzers, tie priesteri, pūta trumetes Dieva šķirsta priekšā, un ObedEdoms un Jeķija bija šķirsta vārtu sargi.
௨௪செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர்கள் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத்ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளிகளாக இருந்தார்கள்.
25 Tā Dāvids un Israēla vecaji un virsnieki pār tūkstošiem nogāja, atvest Tā Kunga derības šķirstu no ObedEdoma nama ar prieku.
௨௫இப்படி தாவீதும், இஸ்ரவேலின் மூப்பர்களும், ஆயிரம்பேர்களின் தலைவர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடு கொண்டுவரச்செய்தார்கள்.
26 Un kad Dievs tiem Levitiem palīdzēja, kas Tā Kunga derības šķirstu nesa, tad tie upurēja septiņus vēršus un septiņus aunus.
௨௬யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களுக்கு தேவன் தயவு செய்ததால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள்.
27 Un Dāvids bija ģērbies nātnu svārkos un tāpat visi Leviti, kas to šķirstu nesa, un tie dziedātāji un Kananija, tas dziedātāju vadonis; Dāvidam bija arī linu plecusega.
௨௭தாவீதும், பெட்டியை சுமக்கிற எல்லா லேவியர்களும், பாடகர்களும், பாடகர்களின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளை அணிந்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தை அணிந்திருந்தான்.
28 Tā viss Israēls nesa augšām Tā Kunga derības šķirstu ar gavilēšanu un bazūņu skaņu un ar trumetēm un ar pulkstenīšiem, un spēlēja ar soma stabulēm un koklēm.
௨௮அப்படியே இஸ்ரவேலனைத்தும் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் சத்தத்தோடும், தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.
29 Un kad Tā Kunga derības šķirsts nonāca Dāvida pilī, tad Mikale, Saula meita, skatījās pa logu ārā un redzēja ķēniņu Dāvidu dejojam un spēlējam, un tā to nicināja savā sirdī.
௨௯யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி, தாவீதின் நகரம்வரை வந்தபோது, சவுலின் மகளாகிய மீகாள் பலகணி வழியாகப் பார்த்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன்னுடைய இருதயத்தில் அவமதித்தாள்.

< Pirmā Laiku 15 >