< Zaccharias Propheta 2 >
1 Et levavi oculos meos, et vidi: et ecce vir, et in manu eius funiculus mensorum.
௧நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு மனிதனைக் கண்டேன்.
2 Et dixi: Quo tu vadis? Et dixit ad me: Ut metiar Ierusalem, et videam quanta sit latitudo eius, et quanta longitudo eius.
௨நீர் எவ்விடத்திற்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்: எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் தெரிந்துகொள்ளும்படி அதை அளப்பதற்குப் போகிறேன் என்றார்.
3 Et ecce angelus, qui loquebatur in me, egrediebatur, et angelus alius egrediebatur in occursum eius.
௩இதோ, என்னுடன் பேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டு வந்தான்.
4 Et dixit ad eum: Curre, loquere ad puerum istum, dicens: Absque muro habitabitur Ierusalem prae multitudine hominum, et iumentorum in medio eius.
௪இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால்: எருசலேம் தன் நடுவிலே கூடும் மனிதர்களின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதில் இல்லாத பட்டணங்கள்போல் குடியிருப்பாகும்.
5 Et ego ero ei, ait Dominus, murus ignis in circuitu: et in gloria ero in medio eius.
௫நான் அதற்குச் சுற்றிலும் நெருப்பு மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
6 O, o fugite de terra Aquilonis, dicit Dominus: quoniam in quattuor ventos caeli dispersi vos, dicit Dominus.
௬ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறடித்தேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
7 O Sion, fuge quae habitas apud filiam Babylonis:
௭பாபிலோன் மகளிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்.
8 quia haec dicit Dominus exercituum: Post gloriam misit me ad gentes, quae spoliaverunt vos: qui enim tetigerit vos, tangit pupillam oculi mei:
௮அதன்பிறகு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட தேசங்களிடத்திற்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் என்னுடைய கண்மணியைத் தொடுகிறான்.
9 quia ecce ego levo manum meam super eos, et erunt praedae his, qui serviebant sibi: et cognoscetis quia Dominus exercituum misit me.
௯இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் யெகோவா என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள்.
10 Lauda, et laetare filia Sion: quia ecce ego venio, et habitabo in medio tui, ait Dominus.
௧0மகளாகிய சீயோனே கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
11 Et applicabuntur Gentes multae ad Dominum in die illa, et erunt mihi in populum, et habitabo in medio tui: et scies quia Dominus exercituum misit me ad te.
௧௧அந்நாளிலே அநேக தேசங்கள் யெகோவாவைச் சேர்ந்து என் மக்களாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் யெகோவா என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய்.
12 Et possidebit Dominus Iuda partem suam in terra sanctificata: et eliget adhuc Ierusalem.
௧௨யெகோவா பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கை சொந்தமாக்கிக்கொள்ள திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார்.
13 Sileat omnis caro a facie Domini: quia consurrexit de habitaculo sancto suo.
௧௩மாம்சமான அனைத்துமக்களே, யெகோவாவுக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.