< Psalmorum 145 >
1 Laudatio David. Exaltabo te Deus meus rex: et benedicam nomini tuo in saeculum, et in saeculum saeculi.
தாவீதின் ஸ்தோத்திர சங்கீதம். என் அரசராகிய இறைவனே, நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்; நான் என்றென்றும் உம்முடைய பெயரைத் துதிப்பேன்.
2 Per singulos dies benedicam tibi: et laudabo nomen tuum in saeculum, et in saeculum saeculi.
நாள்தோறும் நான் உம்மைத் துதித்து, உம்முடைய பெயரை என்றென்றைக்கும் பாராட்டுவேன்.
3 Magnus Dominus et laudabilis nimis: et magnitudinis eius non est finis.
யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாய் இருக்கிறார்; அவருடைய மகத்துவத்தை யாராலும் அளவிடமுடியாது.
4 Generatio et generatio laudabit opera tua: et potentiam tuam pronunciabunt.
உம்முடைய செயல்களை ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும்; அவர்கள் உம்முடைய வல்லமையான செயல்களைச் சொல்வார்கள்.
5 Magnificentiam gloriae sanctitatis tuae loquentur: et mirabilia tua narrabunt.
நான் உம்முடைய மகத்துவத்தின் மாட்சிமையான சிறப்பையும், உமது அதிசயமான செயல்களையும் பற்றித் தியானிப்பேன்.
6 Et virtutem terribilium tuorum dicent: et magnitudinem tuam narrabunt.
அவர்கள் உமது பிரமிக்கத்தக்க செயல்களின் வல்லமையைச் சொல்வார்கள்; நான் உம்முடைய மகத்துவமான கிரியைகளைப் பிரசித்தப்படுத்துவேன்.
7 Memoriam abundantiae suavitatis tuae eructabunt: et iustitia tua exultabunt.
அவர்கள் உமது நற்குணத்தின் மகத்துவத்தை நினைத்துக் கொண்டாடுவார்கள்; உமது நீதியைக் குறித்துச் சந்தோஷமாய்ப் பாடுவார்கள்.
8 Miserator et misericors Dominus: patiens, et multum misericors.
யெகோவா கிருபையும் கருணையும் உள்ளவர்; அவர் கோபிக்கிறதில் தாமதிப்பவரும் உடன்படிக்கையின் அன்பு நிறைந்தவருமாய் இருக்கிறார்.
9 Suavis Dominus universis: et miserationes eius super omnia opera eius.
யெகோவா எல்லோருக்கும் நல்லவர்; தாம் படைத்த அனைத்தின்மேலும் இரக்கமுள்ளவர்.
10 Confiteantur tibi Domine omnia opera tua: et sancti tui benedicant tibi.
யெகோவாவே, நீர் படைத்த எல்லாம் உம்மைத் துதிக்கும்; உமது உண்மையுள்ள மக்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11 Gloriam regni tui dicent: et potentiam tuam loquentur:
அவர்கள் உமது அரசின் மகிமையைச் சொல்லி, உம்முடைய வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.
12 Ut notam faciant filiis hominum potentiam tuam: et gloriam magnificentiae regni tui.
அதினால் எல்லா மனிதரும் உம்முடைய வல்லமையான செயல்களையும், உமது அரசின் மகிமையான சிறப்பையும் அறிந்துகொள்வார்கள்.
13 Regnum tuum regnum omnium saeculorum: et dominatio tua in omni generatione et generationem. Fidelis Dominus in omnibus verbis suis: et sanctus in omnibus operibus suis.
உம்முடைய அரசு ஒரு நித்தியமான அரசு; உம்முடைய ஆளுகை எல்லாத் தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கிறது. யெகோவா தம்முடைய எல்லா வாக்குத்தத்தங்களிலும் நம்பத்தக்கவர்; தம்முடைய செயல்கள் அனைத்திலும் உண்மையுள்ளவர்.
14 Allevat Dominus omnes, qui corruunt: et erigit omnes elisos.
யெகோவா விழுகிற யாவரையும் தாங்கி, தாழ்த்தப்பட்ட அனைவரையும் உயர்த்துகிறார்.
15 Oculi omnium in te sperant Domine: et tu das escam illorum in tempore opportuno.
எல்லாருடைய கண்களும் உம்மை நோக்குகின்றன; ஏற்றவேளையில் நீர் அவர்களுக்கு உணவு கொடுக்கிறீர்.
16 Aperis tu manum tuam: et imples omne animal benedictione.
நீர் உம்முடைய கையைத் திறந்து, எல்லா உயிரினங்களின் வாஞ்சைகளைத் திருப்தியாக்குகிறீர்.
17 Iustus Dominus in omnibus viis suis: et sanctus in omnibus operibus suis.
யெகோவா தமது வழிகள் எல்லாவற்றிலும் நீதியுள்ளவராயும் தம்முடைய செயல்களிளெல்லாம் உண்மையுள்ளவராயும் இருக்கிறார்.
18 Prope est Dominus omnibus invocantibus eum: omnibus invocantibus eum in veritate.
யெகோவா தம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோருக்கும், உண்மையாகவே அவரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அருகே இருக்கிறார்.
19 Voluntatem timentium se faciet, et deprecationem eorum exaudiet: et salvos faciet eos.
அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறார்; அவர்களுடைய கூப்பிடுதலைக் கேட்டு அவர்களைக் காப்பாற்றுகிறார்.
20 Custodit Dominus omnes diligentes se: et omnes peccatores disperdet.
யெகோவா தம்மில் அன்புகூருகிறவர்களைப் பாதுகாக்கிறார்; ஆனால் கொடியவர்கள் அனைவரையும் தண்டிப்பார்.
21 Laudationem Domini loquetur os meum: et benedicat omnis caro nomini sancto eius in saeculum, et in saeculum saeculi.
என் வாய் யெகோவாவைத் துதிக்கும். எல்லா உயிரினங்களும் அவருடைய பரிசுத்த பெயரை என்றென்றும் துதிக்கட்டும்.