< Psalmorum 82 >
1 Psalmus Asaph. Deus stetit in synagoga deorum; in medio autem deos dijudicat.
௧ஆசாபின் பாடல். தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
2 Usquequo judicatis iniquitatem, et facies peccatorum sumitis?
௨எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து, துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா)
3 Judicate egeno et pupillo; humilem et pauperem justificate.
௩ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
4 Eripite pauperem, et egenum de manu peccatoris liberate.
௪பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
5 Nescierunt, neque intellexerunt; in tenebris ambulant: movebuntur omnia fundamenta terræ.
௫அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
6 Ego dixi: Dii estis, et filii Excelsi omnes.
௬நீங்கள் தெய்வங்கள் என்றும், நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
7 Vos autem sicut homines moriemini, et sicut unus de principibus cadetis.
௭ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.
8 Surge, Deus, judica terram, quoniam tu hæreditabis in omnibus gentibus.
௮தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.