< Psalmorum 81 >

1 In finem, Pro torcularibus, Psalmus ipsi Asaph. Exultate Deo adiutori nostro: iubilate Deo Iacob.
கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல். நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாகப் பாடி, யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள்.
2 Sumite psalmum, et date tympanum: psalterium iucundum cum cithara.
தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, பாட்டு பாடுங்கள்.
3 Buccinate in Neomenia tuba, in insigni die solemnitatis vestræ:
மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.
4 Quia præceptum in Israel est: et iudicium Deo Iacob.
இது இஸ்ரவேலுக்குப் ஆணையும், யாக்கோபின் தேவன் விதித்த கட்டளையுமாக இருக்கிறது.
5 Testimonium in Ioseph posuit illud, cum exiret de Terra Ægypti: linguam, quam non noverat, audivit.
நாம் அறியாத மொழியைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படும்போது, இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார்.
6 Divertit ab oneribus dorsum eius: manus eius in cophino servierunt.
அவனுடைய தோளைச் சுமைக்கு விலக்கினேன்; அவனுடைய கைகள் கூடைக்கு விடுவிக்கப்பட்டது.
7 In tribulatione invocasti me, et liberavi te: exaudivi te in abscondito tempestatis: probavi te apud aquam contradictionis.
நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்திரவு அருளினேன்; மேரிபாவின் தண்ணீர்கள் அருகில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா)
8 Audi populus meus, et contestabor te: Israel si audieris me,
என்னுடைய மக்களே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாக இருக்கும்.
9 non erit in te deus recens, neque adorabis deum alienum.
உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ வணங்கவும் வேண்டாம்.
10 Ego enim sum Dominus Deus tuus, qui eduxi te de terra Ægypti: dilata os tuum, et implebo illud.
௧0உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே; உன்னுடைய வாயை விரிவாகத் திற, நான் அதை நிரப்புவேன்.
11 Et non audivit populus meus vocem meam: et Israel non intendit mihi.
௧௧என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.
12 Et dimisi eos secundum desideria cordis eorum, ibunt in adinventionibus suis.
௧௨ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்களுடைய யோசனைகளின்படியே நடந்தார்கள்.
13 Si populus meus audisset me: Israel si in viis meis ambulasset:
௧௩ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என்னுடைய வழிகளில் நடந்தால் நலமாக இருக்கும்!
14 Pro nihilo forsitan inimicos eorum humiliassem: et super tribulantes eos misissem manum meam.
௧௪நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி, என்னுடைய கையை அவர்கள் எதிரிகளுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
15 Inimici Domini mentiti sunt ei: et erit tempus eorum in sæcula.
௧௫அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.
16 Et cibavit eos ex adipe frumenti: et de petra, melle saturavit eos.
௧௬செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.

< Psalmorum 81 >