< Isaiæ 15 >
1 Onus Moab. Quia nocte vastata est Ar Moab, conticuit: quia nocte vastatus est murus Moab, conticuit.
௧மோவாபைக்குறித்த செய்தி. இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது அழிக்கப்பட்டது; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது அழிக்கப்பட்டது.
2 Ascendit domus, et Dibon ad excelsa in planctum super Nabo, et super Medaba, Moab ululavit: in cunctis capitibus eius calvitium, et omnis barba radetur.
௨அழுவதற்காக மேடைகளாகிய பாயித்திற்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவின் காரணமாகவும் மெதெபாவின் காரணமாகவும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.
3 In triviis eius accincti sunt sacco: super tecta eius, et in plateis eius omnis ululatus descendit in fletum.
௩அதின் வீதிகளில் சணல் ஆடையைக் கட்டிக்கொண்டு, எல்லோரும் அதின் வீடுகள்மேலும், அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள்.
4 Clamabit Hesebon, et Eleale, usque Iasa audita est vox eorum. super hoc expediti Moab ululabunt, anima eius ululabit sibi.
௪எஸ்போன் ஊராரும் எலெயாலெ ஊராரும் சத்தமிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்வரை கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதம் அணிந்தவர்கள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் பயப்படுகிறது.
5 Cor meum ad Moab clamabit, vectes eius usque ad Segor vitulam conternantem: per ascensum enim Luith flens ascendet, et in via Oronaim clamorem contritionis levabunt.
௫என் இருதயம் மோவாபுக்காக ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்திற்கு ஏறிப்போகிற வழியிலே அழுதுகொண்டு ஏறுகிறார்கள்; ஒரொனாயிமின் வழியிலே நொறுங்குதலின் சத்தமிடுகிறார்கள்.
6 Aquæ enim Nemrim desertæ erunt, quia aruit herba, defecit germen, viror omnis interiit.
௬நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போகும்; புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமல் போகிறது.
7 Secundum magnitudinem operis et visitatio eorum: ad torrentem salicum ducent eos.
௭ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும், அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பால் எடுத்துக்கொண்டுபோவார்கள்.
8 Quoniam circuivit clamor terminum Moab: usque ad Gallim ululatus eius, et usque ad Puteum Elim clamor eius.
௮கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்வரை அதின் அலறுதலும், பெரேலீம்வரை அதின் புலம்புதலும் கேட்கும்.
9 Quia aquæ Dibon repletæ sunt sanguine: ponam enim super Dibon additamenta: his, qui fugerint de Moab leonem, et reliquiis terræ.
௯தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிகக் கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரச்செய்வேன்.