< Psalmorum 124 >
1 Canticum graduum. Nisi quia Dominus erat in nobis, dicat nunc Israel:
௧தாவீதின் ஆரோகண பாடல். மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
2 nisi quia Dominus erat in nobis, Cum exurgerent homines in nos,
௨யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
3 forte vivos deglutissent nos: Cum irasceretur furor eorum in nos,
௩அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
4 forsitan aqua absorbuisset nos.
௪அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
5 Torrentem pertransivit anima nostra: forsitan pertransisset anima nostra aquam intolerabilem.
௫கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
6 Benedictus Dominus qui non dedit nos, in captionem dentibus eorum.
௬நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் இருக்கிற யெகோவாவுக்கு நன்றி.
7 Anima nostra sicut passer erepta est de laqueo venantium: Laqueus contritus est, et nos liberati sumus.
௭வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பினது, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
8 Adiutorium nostrum in nomine Domini, qui fecit cælum et terram.
௮நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவுடைய பெயரில் உள்ளது.