< Psalmorum 84 >

1 In finem, pro torcularibus filiis Core. Psalmus. [Quam dilecta tabernacula tua, Domine virtutum!
கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல். சேனைகளின் யெகோவாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
2 Concupiscit, et deficit anima mea in atria Domini; cor meum et caro mea exsultaverunt in Deum vivum.
என்னுடைய ஆத்துமா யெகோவாவுடைய ஆலயமுற்றங்களின்மேல் வாஞ்சையும் ஆவலுமாக இருக்கிறது; என்னுடைய இருதயமும் என்னுடைய சரீரமும் உயிருள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
3 Etenim passer invenit sibi domum, et turtur nidum sibi, ubi ponat pullos suos: altaria tua, Domine virtutum, rex meus, et Deus meus.
என்னுடைய ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் யெகோவாவே, உம்முடைய பீடங்களின் அருகில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன்னுடைய குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.
4 Beati qui habitant in domo tua, Domine; in sæcula sæculorum laudabunt te.
உம்முடைய வீட்டில் தங்கி இருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் (சேலா)
5 Beatus vir cujus est auxilium abs te: ascensiones in corde suo disposuit,
உம்மிலே பெலன்கொள்ளுகிற மனிதனும், தங்களுடைய இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.
6 in valle lacrimarum, in loco quem posuit.
அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.
7 Etenim benedictionem dabit legislator; ibunt de virtute in virtutem: videbitur Deus deorum in Sion.
அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.
8 Domine Deus virtutum, exaudi orationem meam; auribus percipe, Deus Jacob.
சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா)
9 Protector noster, aspice, Deus, et respice in faciem christi tui.
எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாக இரும்; நீர் அபிஷேகம் செய்தவரின் முகத்தைப் பாரும்.
10 Quia melior est dies una in atriis tuis super millia; elegi abjectus esse in domo Dei mei magis quam habitare in tabernaculis peccatorum.
௧0ஆயிரம் நாளைவிட உமது முற்றங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; துன்மார்க்கர்களின் கூடாரங்களில் தங்கியிருப்பதைவிட என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.
11 Quia misericordiam et veritatem diligit Deus: gratiam et gloriam dabit Dominus.
௧௧தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்; யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார்.
12 Non privabit bonis eos qui ambulant in innocentia: Domine virtutum, beatus homo qui sperat in te.]
௧௨சேனைகளின் யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிற மனிதன் பாக்கியவான்.

< Psalmorum 84 >