< زەبوورەکان 94 >
ئەی یەزدان، خودای تۆڵە، ئەی خودای تۆڵە، بدرەوشێوە. | 1 |
௧நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய யெகோவாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.
ئەی دادوەری زەوی، ڕاپەرە، سزای لووتبەرزەکان بدەوە. | 2 |
௨பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து, பெருமைக்காரர்களுக்குப் பதிலளியும்.
ئەی یەزدان، هەتا کەی بەدکاران، هەتا کەی بەدکاران دڵشاد دەبن؟ | 3 |
௩யெகோவாவே, துன்மார்க்கர்கள் எதுவரைக்கும் மகிழ்ந்து, எதுவரைக்கும் சந்தோஷமாக இருப்பார்கள்?
بەدکاران لووتبەرزی لە قسەکانیانەوە هەڵدەقوڵێت، شانازی بە خۆیانەوە دەکەن. | 4 |
௪எதுவரைக்கும் அக்கிரமக்காரர்கள் அனைவரும் வாயாடி, கடினமாகப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்?
ئەی یەزدان، گەلەکەت وردوخاش دەکەن، میراتی تۆ دەچەوسێننەوە. | 5 |
௫யெகோவாவே, அவர்கள் உமது மக்களை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.
بێوەژن و نامۆ دەکوژن، هەتیو سەردەبڕن. | 6 |
௬விதவையையும் அந்நியனையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:
دەڵێن: «یەزدان نابینێت، خودای یاقوب ئاگای لێ نییە.» | 7 |
௭யெகோவா பார்க்கமாட்டார், யாக்கோபின் தேவன் கவனிக்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.
ئەی دەبەنگەکان لەنێو گەل، وریابن! ئەی گێلەکان، کەی تێدەگەن؟ | 8 |
௮மக்களில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடர்களே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?
ئایا ئەوەی گوێی چاندووە، نابیستێت؟ ئایا ئەوەی چاوی دروستکردووە، نابینێت؟ | 9 |
௯காதை உண்டாக்கினவர் கேட்கமாட்டாரோ? கண்ணை உருவாக்கினவர் காணமாட்டாரோ?
ئایا ئەوەی نەتەوەکان تەمبێ دەکات، سەرزەنشت ناکات؟ ئایا ئەوەی فێری مرۆڤ دەکات، زانیاری نییە؟ | 10 |
௧0தேசங்களைத் தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளமாட்டாரோ? மனிதனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியமாட்டாரோ?
یەزدان بیرکردنەوەی مرۆڤ دەزانێت، کە پووچە. | 11 |
௧௧மனிதனுடைய யோசனைகள் வீணென்று யெகோவா அறிந்திருக்கிறார்.
ئەی یەزدان، خۆزگە دەخوازرێ بەو کەسەی تۆ تەمبێی دەکەیت، لە تەوراتی خۆت فێری دەکەیت، | 12 |
௧௨யெகோவாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்கு நாட்களில் அமர்ந்திருக்கச்செய்து,
لە ڕۆژی سەختدا ئارامی بکەیتەوە، هەتا گۆڕ بۆ بەدکار هەڵبکەنرێت، | 13 |
௧௩தண்டித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனிதன் பாக்கியவான்.
چونکە یەزدان واز لە گەلی خۆی ناهێنێ، میراتی خۆی ڕەت ناکاتەوە. | 14 |
௧௪யெகோவா தம்முடைய மக்களைத் தள்ளிவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
دادوەری بۆ ڕاستودروستی دەگێڕێتەوە، هەموو دڵڕاستەکان شوێنی دەکەون. | 15 |
௧௫நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார்கள் அனைவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
کێ بۆم لە دژی بەدکاران هەڵدەستێتەوە؟ کێ بۆم لە دژی خراپەکاران بوەستێتەوە؟ | 16 |
௧௬துன்மார்க்கர்களுக்கு விரோதமாக எனது சார்பாக எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரர்களுக்கு விரோதமாக எனது சார்பாக நிற்பவன் யார்?
یەزدان هاریکارم بوو، ئەگینا هێندەی نەمابوو گیانم لەنێو بێدەنگی مردووان نیشتەجێ بێت. | 17 |
௧௭யெகோவா எனக்குத் துணையாக இல்லாவிட்டால், என்னுடைய ஆத்துமா சீக்கிரமாக மவுனத்தில் தங்கியிருக்கும்.
کاتێک گوتم: «پێم دەخلیسکێت،» ئەی یەزدان، خۆشەویستییە نەگۆڕەکەت پشتی گرتم. | 18 |
௧௮என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, யெகோவாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
کە خەم لە ناخم زۆر بوو، دڵنەوایی تۆ گیانی منی شاد کرد. | 19 |
௧௯என்னுடைய உள்ளத்தில் கவலைகள் பெருகும்போது, உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
ئایا تەختی گەندەڵی هاوڕێیەتی لەگەڵ تۆ دەبەستێت، ئەوانەی بەگوێرەی زۆرداری خۆیان، شێوەی یاسا دادەڕێژن؟ | 20 |
௨0தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற துன்மார்க்கனுடைய ஆட்சி உம்மோடு இசைந்திருக்குமோ?
لە دژی گیانی ڕاستودروست کۆدەبنەوە، خوێنێکی بێگەرد تاوانبار دەکەن. | 21 |
௨௧அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.
بەڵام یەزدان بۆم دەبێتە قەڵا، خودا بۆم بووە بە تاشەبەردی پەناگام. | 22 |
௨௨யெகோவாவோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாக இருக்கிறார்.
ئەو خراپەیەی دەیکەن بەسەر خۆیانیدا دەداتەوە و لە سزای بەدکاری خۆیان کڕیان دەکات، یەزدانی پەروەردگارمان کڕیان دەکات. | 23 |
௨௩அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினால் அவர்களை அழிப்பார்; நம்முடைய தேவனாகிய யெகோவாவே அவர்களை அழிப்பார்.