< سەرژمێری 31 >

هەروەها یەزدان بە موسای فەرموو: 1
யெகோவா மோசேயை நோக்கி:
«بە تەواوی تۆڵە بۆ نەوەی ئیسرائیل لە میدیانییەکان بکەرەوە، ئینجا دەچیتە پاڵ گەلەکەت.» 2
“இஸ்ரவேல் மக்களுக்காக மீதியானியர்களிடத்தில் பழிவாங்கு; அதின் பின்பு உன்னுடைய மக்களிடத்தில் சேர்க்கப்படுவாய்” என்றார்.
موساش بە گەلی گوت: «لەنێو خۆتان هەندێک پیاو چەکدار بکەن بۆ جەنگ، هەتا بچنە سەر میدیان و تۆڵەی یەزدان لە میدیان بکەنەوە، 3
அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “யெகோவாக்காக மீதியானியர்களிடம் பழிவாங்கத்தக்க, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகும்படியாக மனிதர்களைப் பிரித்தெடுங்கள்.
لە هەر هۆزێک هەزار کەس لە هەموو هۆزەکانی ئیسرائیل بۆ جەنگ دەنێرن.» 4
இஸ்ரவேலர்களுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் 1,000 பேரை யுத்தத்திற்கு அனுப்பவேண்டும்” என்றான்.
ئینجا لە خێڵەکانی ئیسرائیلدا لە هەر هۆزێک هەزار کەس هەڵبژێردرا، دوازدە هەزار کەس بۆ جەنگ چەکدار کران. 5
அப்படியே இஸ்ரவேலர்களாகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் 12,000 பேர் யுத்தத்திற்கு ஆயத்தமாக நிறுத்தப்பட்டார்கள்.
ئینجا موسا ناردنی بۆ جەنگ، لە هەر هۆزێک هەزار، لەگەڵ فینەحاسی کوڕی ئەلعازاری کاهین، قاپوقاچاغی پیرۆزگا و کەڕەناکانی هوتافیشی بەدەستەوە بوو. 6
மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசாரின் மகன் பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்பும்போது, அவனுடைய கையிலே பரிசுத்த பொருட்களையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான்.
ئەوان لە دژی میدیانییەکان جەنگان، وەک یەزدان فەرمانی بە موسا کرد، هەموو نێرینەیەکیان کوشت. 7
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் மீதியானியர்களுடன் யுத்தம்செய்து, ஆண்கள் எல்லோரையும் கொன்றுபோட்டார்கள்.
پاشاکانی میدیانیشیان لەگەڵ کوژراوەکانیاندا کوشت، ئاڤی و ڕاقەم و چوور و حوور و ڕێڤەع، پێنج پاشای میدیان، بەلعامی کوڕی بەعۆریشیان بە شمشێر کوشت. 8
அவர்களைக் கொன்றுபோட்டதும் அல்லாமல், மீதியானியர்களின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் மகனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள்.
هەروەها نەوەی ئیسرائیل ژن و منداڵی میدیانیان ڕاپێچ کرد و هەموو ئاژەڵ و مەڕ و مانگا و هەموو موڵکیانیان تاڵان کردن. 9
அன்றியும் இஸ்ரவேல் இராணுவம் மீதியானியர்களின் பெண்களையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற சொத்துகள் அனைத்தையும் கொள்ளையிட்டு,
هەموو ئەو شارۆچکانەش کە میدیانییەکان تێیدا نیشتەجێ بوون و خێوەتگاکانیان سووتاند. 10
௧0அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து,
لە دەستکەوت و تاڵانییەکەش لە مرۆڤ و ئاژەڵ هەموویان برد. 11
௧௧தாங்கள் கொள்ளையிட்ட பொருள்களையும் தாங்கள் பிடித்த மனிதர்கள் மிருகங்கள் அனைத்தையும் சேர்த்து,
ئینجا بە ڕاپێچکراوان و تاڵان و دەستکەوتەوە هاتنە لای موسا و ئەلعازاری کاهین، کۆمەڵی نەوەی ئیسرائیل لە ئۆردوگاکە لە دەشتی مۆئاب کە لەسەر ڕووباری ئوردون بوو بەرامبەر ئەریحا. 12
௧௨சிறைப்பிடிக்கப்பட்ட மனிதர்களையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும், எரிகோவின் அருகிலுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமவெளிகளிலுள்ள முகாமிலிருந்த மோசேயினிடத்திற்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடமும், இஸ்ரவேல் மக்களாகிய சபையாரிடமும் கொண்டுவந்தார்கள்.
موسا و ئەلعازاری کاهین و هەموو ڕابەرانی کۆمەڵ بۆ پێشوازییان چوونە دەرەوەی ئۆردوگاکە. 13
௧௩மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லோரும் அவர்களைச் சந்திக்க முகாமிற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
بەڵام موسا لە سەرکردەکانی سوپا تووڕە بوو، کە فەرماندەکانی هەزاران و سەدان بوون و لە جەنگەوە هاتبوونەوە. 14
௧௪அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவர்களும், நூறுபேருக்குத் தலைவர்களுமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,
موسا لێی پرسین: «ئایا هەموو ئافرەتێکتان بە زیندوویی هێشتووەتەوە؟ 15
௧௫அவர்களை நோக்கி: “பெண்கள் எல்லோரையும் உயிரோடு விட்டுவிட்டீர்களா?
ئەوانە بوون بە قسەی بەلعامیان کرد و بوونە هۆی ناپاکی نەوەی ئیسرائیل لەگەڵ یەزدان لە کێشەکەی پەعۆر، جا دەرد لەناو کۆمەڵی یەزدان بڵاو بووەوە. 16
௧௬பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு விரோதமாகத் துரோகம்செய்யக் காரணமாக இருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் யெகோவாவின் சபையிலே வாதையும் நேரிட்டதே.
ئێستاش هەموو منداڵە نێرینەکان بکوژن لەگەڵ هەر ژنێک کە لەگەڵ نێر سەرجێیی کردووە، 17
௧௭ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், ஆண்தொடர்பு கொண்டுள்ள எல்லா பெண்களையும் கொன்றுபோடுங்கள்.
بەڵام هەموو ئەو کچانەی لەگەڵ پیاو سەرجێییان نەکردووە بۆ خۆتان بە زیندوویی بیانهێڵنەوە. 18
௧௮பெண்களில் ஆண்தொடர்பு அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடு வையுங்கள்.
«ئێوەش حەوت ڕۆژ لە دەرەوەی ئۆردوگاکە چادر هەڵبدەن و خۆتان پاک بکەنەوە، هەرکەسێک یەکێکی کوشتووە یان دەستی لە کوژراوێک داوە، با لە ڕۆژی سێیەم و حەوتەم خۆی پاک بکاتەوە، ئێوە و ڕاپێچکراوانتان. 19
௧௯பின்பு நீங்கள் ஏழுநாட்கள் முகாமிற்கு வெளியே தங்குங்கள்; மனித உயிரைக் கொன்றவர்களும். வெட்டுண்டவர்களைத் தொட்டவர்களுமாகிய நீங்கள் யாவரும் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் உங்களையும் உங்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களையும் சுத்திகரித்து,
هەروەها هەر بەرگێک یان شتێک لە پێست یان لە مووی بزن دروستکرابێت و هەر شتێک لە دار دروستکرابێت، پاکی دەکەنەوە.» 20
௨0அந்தப்படியே எல்லா ஆடைகளையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமுடியினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கவேண்டும்” என்றான்.
ئەلعازاری کاهینیش بە پیاوانی سوپاکەی گوت کە چووبوون بۆ جەنگ: «ئەمە فەرزی فێرکردنەکەیە کە یەزدان فەرمانی بە موسا کرد، 21
௨௧ஆசாரியனாகிய எலெயாசாரும் யுத்தத்திற்குப் போய்வந்த படைவீரர்களை நோக்கி: “யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட விதிப்பிரமாணம் என்னவென்றால்:
زێڕ و زیو و بڕۆنز و ئاسن و تەنەکە و قورقوشم، 22
௨௨அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படி,
هەموو ئەو شتانەی بەرگەی ئاگر دەگرێت، بەناو ئاگردا تێپەڕی دەکەن و پاشان بە ئاوی پاککردنەوە خاوێن دەبێتەوە. هەموو ئەو شتانەش کە بەرگەی ئاگر ناگرێت، ئەوا بەناو ئاودا تێپەڕی دەکەن. 23
௨௩அவைகளை அக்கினியிலே போட்டு எடுக்கவேண்டும்; தீட்டுக்கழிக்கும் தண்ணீராலும் அவைகள் சுத்திகரிக்கப்படவேண்டும்; அக்கினிக்கு நிற்கத் தகாதவைகள் எல்லாம் தண்ணீரினால் சுத்தம் செய்யவேண்டும்.
لە ڕۆژی حەوتەمیش جلەکانتان دەشۆن و ئێوە پاک دەبنەوە، ئینجا دێنەوە ناو ئۆردوگاکە.» 24
௨௪ஏழாம் நாளில் உங்களுடைய ஆடைகளைத் தோய்க்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருப்பீர்கள்; பின்பு நீங்கள் முகாமிற்குள் வரலாம்” என்றான்.
هەروەها یەزدان بە موسای فەرموو: 25
௨௫யெகோவா மோசேயை நோக்கி:
«تۆ و ئەلعازاری کاهین و گەورەی بنەماڵەکانی کۆمەڵ تاڵانە ڕاپێچکراوەکە لە خەڵک و لە ئاژەڵ بژمێرن. 26
௨௬“பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதர்களையும் மிருகங்களையும் நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையினுடைய முன்னோர்களாகிய தலைவர்களும் கணக்கிட்டு,
تاڵانییەکە بە یەکسانی دابەش بکە لەنێوان ئەو سەربازانەی کە لە جەنگ بەشداریان کرد و هەروەها هەموو کۆمەڵ. 27
௨௭கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள்.
بەشی یەزدانیش دەربهێنە لە بەشی ئەوانەی بەشدارییان لە جەنگ کردووە، یەک لە پێنج سەدی خەڵک و گاوگۆتاڵ و گوێدرێژ. 28
௨௮மேலும் யுத்தத்திற்குப் போன படைவீரர்களிடத்தில் யெகோவாக்காக மனிதர்களிலும், மாடுகளிலும், கழுதைகளிலும், ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு மிருகம் வீதமாக வரி வாங்கி,
لە نیوەکەی ئەوان وەریدەگرن و دەیدەنە ئەلعازاری کاهین، بەخشینی بەرزکراوەیە بۆ یەزدان. 29
௨௯அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, யெகோவாவுக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்கு கொடுக்கவேண்டும்.
لە نیوەکەی نەوەی ئیسرائیلیش یەک لە پەنجا لە خەڵک و گاوگۆتاڵ و گوێدرێژ و مەڕ یان لە هەر ئاژەڵێکی دیکە دەبەیت و دەیدەیتە لێڤییەکان کە بەرپرسیارن لە بایەخدان بە چادری پەرستنی یەزدان.» 30
௩0இஸ்ரவேல் மக்களின் பாதிப்பங்கிலோ மனிதர்களிலும், மாடுகள், கழுதைகள், ஆடுகளாகிய எல்லா வித மிருகங்களிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாக வாங்கி, அவைகளைக் யெகோவாவுடைய வாசஸ்தலத்தின் காவலைக்காக்கும் லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டும்” என்றார்.
جا موسا و ئەلعازاری کاهین وەک یەزدان فەرمانی بە موسا کرد، ئاوایان کرد. 31
௩௧யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள்.
کۆی تاڵانییەکەش کە دەستکەوتی پیاوانی سوپاکە بوو، شەش سەد و حەفتا و پێنج هەزار مەڕ و 32
௩௨படைவீரர்கள் கொள்ளையிட்ட பொருளில், 6,75,000 ஆடுகளும்,
حەفتا و دوو هەزار مانگا و 33
௩௩72,000 மாடுகளும்,
شەست و یەک هەزار گوێدرێژ بوون، 34
௩௪61,000 கழுதைகளும் மீதியாக இருந்தது.
لە مرۆڤیش لەو ئافرەتانەی کە لەگەڵ پیاو سەرجێییان نەکردبوو سی و دوو هەزار کەس بوون. 35
௩௫ஆணுடன் உடலுறவுக்கொள்ளாத பெண்களில் 32,000 பேர் இருந்தார்கள்.
جا نیوەکەی کە بەشی ئەوانە بوو بۆ جەنگ چووبوون: سێ سەد و سی و حەوت هەزار و پێنج سەد مەڕ بوو، 36
௩௬யுத்தம்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் 3,37,500.
بەشی یەزدانیش لە مەڕەکان شەش سەد و حەفتا و پێنج بوو، 37
௩௭இந்த ஆடுகளிலே யெகோவாவுக்கு வரியாக வந்தது 675.
مانگاکانیش سی و شەش هەزار بوو و بەشی یەزدانیش حەفتا و دوو بوو، 38
௩௮மாடுகள் 36,000; அவைகளில் யெகோவாவுக்கு வரியாக வந்தது 72.
گوێدرێژیش سی هەزار و پێنج سەد بوو، بەشی یەزدانیش شەست و یەک بوو. 39
௩௯கழுதைகள் 30,500; அவைகளில் யெகோவாவின் பகுதியாக வந்தது 61.
مرۆڤیش شازدە هەزار بوو، بەشی یەزدانیش سی و دوو بوو. 40
௪0மனிதஉயிர்கள் 16,000 பேர்; அவர்களில் யெகோவாவுக்கு வரியாக வந்தவர்கள் 32 பேர்.
جا بەشەکە کە بەخشینی بەرزکراوە بوو بۆ یەزدان، موسا دایە ئەلعازاری کاهین، وەک یەزدان فەرمانی بە موسا کرد. 41
௪௧யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடி. ஆசாரியனாகிய எலெயாசாரிடம் கொடுத்தான்.
بەڵام نیوەکەی ئیسرائیل کە موسا لە پیاوانی سوپاکەی جیا کردبووەوە، 42
௪௨யுத்தம்செய்த பேர்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் மோசே பாதி பாதியாகப் பங்கிட்டதின்படி சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது:
نیوەکەی کۆمەڵ سێ سەد و سی و حەوت هەزار و پێنج سەد مەڕ بوو، 43
௪௩ஆடுகளில் 3,37,500
مانگاش سی و شەش هەزار بوو، 44
௪௪மாடுகளில் 36,000,
گوێدرێژیش سی هەزار و پێنج سەد بوو، 45
௪௫கழுதைகளில் 30,500,
لە مرۆڤیش شازدە هەزار بوو. 46
௪௬மனிதஉயிர்களில் 16,000 பேருமே.
جا موسا لە نیوەکەی نەوەی ئیسرائیل یەک لە پەنجای خەڵک و ئاژەڵی برد و دایە لێڤییەکان کە بەرپرسیار بوون لە بایەخدان بە چادری پەرستنی یەزدان، وەک یەزدان فەرمانی بە موسا کرد. 47
௪௭இஸ்ரவேல் மக்களின் பாதிப்பங்குக்கு வந்த இந்த மனிதஉயிர்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதிற்கு ஒன்று வீதமாக, எடுத்து அவைகளைக் யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடி, யெகோவாவுடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியர்களுக்குக் கொடுத்தான்.
ئینجا سەرکردەی یەکەکانی سوپاکە هاتنە پێش بۆ لای موسا، فەرماندەکانی هەزاران و سەدان، 48
௪௮பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவர்களும் நூறுபேருக்குத் தலைவர்களுமான அதிகாரிகள் மோசேயிடம் வந்து,
بە موسایان گوت: «ئێمەی خزمەتکارانت ژمارەی ئەو پیاوانەی جەنگمان وەرگرت کە لەژێر فەرمانمان بوون و کەسمان لەدەست نەداوە. 49
௪௯“உமது ஊழியக்காரராகிய நாங்கள் எங்களுடைய கையின் கீழிருக்கிற யுத்தமனிதர்களை கணக்கு பார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை.
ئەوەتا قوربانی یەزدانمان پێشکەش کرد، هەریەکە هەرچی کەلوپەلی زێڕی دەست کەوتووە لە خڕخاڵ و بازن و ئەنگوستیلە و گوارە و ملوانکە، بۆ کەفارەتکردن بۆمان لەبەردەم یەزدان.» 50
௫0ஆகையால், யெகோவாவுடைய சந்நிதியில் எங்களுடைய ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய காலணிகளையும், கை அணிகளையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம்” என்றார்கள்.
جا موسا و ئەلعازاری کاهین هەموو کەلوپەلێکی لە زێڕ دروستکراویان لێ وەرگرتن. 51
௫௧அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எல்லாவித வேலைப்பாடுள்ள பொருட்களான அந்தப் பொன் ஆபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள்.
هەموو زێڕەکەی بەخشینی بەرزکراوە کە لەلایەن فەرماندەکانی هەزاران و سەدان بۆ یەزدان بەرز کرایەوە، شازدە هەزار و حەوت سەد و پەنجا شاقل بوو. 52
௫௨இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவர்களானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவர்களானவர்களாலும் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பதினாறு ஆயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாக இருந்தது.
بەڵام پیاوانی سوپاکە ئەوەی دەستیان کەوتبوو بۆ خۆیان بوو. 53
௫௩யுத்தத்திற்குப் போன மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்காக கொள்ளையிட்டிருந்தார்கள்.
جا موسا و ئەلعازاری کاهین زێڕەکەیان لە فەرماندەکانی هەزاران و سەدان وەرگرت و هێنایانە ناو چادری چاوپێکەوتنەوە، وەک یادگاری بۆ نەوەی ئیسرائیل لەبەردەم یەزدان. 54
௫௪அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம் பேருக்குத் தலைவர்களானவர்களின் கையிலும், நூறு பேருக்குத் தலைவர்களானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் மக்களுக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள்.

< سەرژمێری 31 >