< Nehemiah 7 >
1 Inge musa ke pot uh safla, ac mutunpot nukewa oaki acn se, ac itukyang orekma lun mwet topang su forfor taran Tempul, oayapa ma kunen un mwet on ac mwet Levi saya.
மதில் திரும்பவும் கட்டப்பட்டு முடிந்ததும், நான் கதவுகளை அதற்குரிய இடத்தில் வைத்தேன். வாசல் காவலர்களும், பாடகர்களும் லேவியர்களும் நியமிக்கப்பட்டார்கள்.
2 Nga sang mwet luo in leum fin acn Jerusalem: sie pa Hanani, tamulel luk, ac sie pa Hananiah, captain lun un mwet mweun ke pot fulat lun siti uh. Hananiah el arulana akfulatye God in moul lal, oayapa lulalfongiyuk el yohk liki mwet saya nukewa.
எருசலேமுக்குப் பொறுப்பாக அரண்மனையின் தளபதி ஆளுநனான அனனியாவுடன் என் சகோதரன் ஆனானியை வைத்தேன். ஏனெனில் அனனியா அங்கிருந்த அநேகரைக் காட்டிலும் உத்தமமுள்ளவனும், இறைவனுக்குப் பயந்து நடக்கிறவனுமாயிருந்தான்.
3 Nga fahkang eltal in tia fuhlela mutunpot lun Jerusalem in ikak ke lotutang nwe ke faht uh takak, na in kauli ac srumasryukla meet liki mwet topang elos som liki kunokon lalos ke faht uh tili. Nga oayapa fahk tuh eltal in pakiya mwet topang ke mutunpot uh liki inmasrlon mwet su muta Jerusalem. Kutu selos kuneyuk in taran kais sie acn, ac mwet saya in foroht forma taran lohm selos sifacna.
நான் அவர்களிடம், “பகலில் வெயில் ஏறும்வரை எருசலேமின் நுழைவாசல் கதவுகள் திறக்கப்படக் கூடாது. வாசல் காவலர் கடமையில் இருக்கும்போதே அவர்களைக்கொண்டு கதவுகள் பூட்டப்பட்டு, தாழ்ப்பாள்களை போடுங்கள். அத்துடன் எருசலேமின் குடியிருப்பாளர்களிலிருந்தே காவலர் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். அவர்களில் சிலரை காவல் நிலையங்களிலும், மற்றும் சிலரை அவர்களின் வீட்டின் அருகேயும் காவலுக்கு ஏற்படுத்துங்கள்” என்றும் சொன்னேன்.
4 Jerusalem sie siti na lulap, tusruktu tiana pus mwet muta we, ac soenna pus pac lohm musaiyuk we.
இப்பொழுது பட்டணம் பெரியதும், விசாலமானதுமாக இருந்தது. ஆனால் இருந்த மக்கள் தொகை மிகவும் குறைவாயிருந்தது. வீடுகளும் திரும்பக் கட்டப்படவில்லை.
5 God El pirikyu nga in orani mwet uh wi mwet kol ac mwet fulat lalos, ac lohang nu ke ma simla ke takin sou lalos. Nga konauk ma simla kaclos su foloko emeet liki sruoh, ac pa inge ma kalem ke ma nga konauk uh:
அப்பொழுது இறைவன் உயர்குடி மனிதரையும், அதிகாரிகளையும், சாதாரண மக்களையும் ஒன்றுகூட்டி, அவர்களை அவரவர் குடும்பங்களின்படி பதிவு செய்வதற்காக என் மனதை ஏவினார். முதலில் திரும்பி வந்தவர்களின் வம்ச அட்டவணை ஒன்று எனக்குக் கிடைத்தது. அதில் எழுதப்பட்டிருந்தது இதுவே:
6 Pus sin mwet sruoh elos som liki acn Babylon ac foloko nu Jerusalem ac Judah, kais sie nu in acn sel sifacna. Sou lalos elos tuh muta in sruoh Babylonia oe in pacl se Tokosra Nebuchadnezzar el tuh usalosla nu we.
பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து, அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும், யூதாவுக்கும்
7 Mwet kol lalos pa Zerubbabel, Joshua, Nehemiah, Azariah, Raamiah, Nahamani, Mordecai, Bilshan, Mispereth, Bigvai, Nehum, ac Baanah.
செருபாபேல், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாய், நெகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:
8 Pa inge inen sou lulap lun Israel ac pisen mwet in kais sie sou su foloko liki sruoh: Parosh — 2,172
பாரோஷின் சந்ததி 2,172 பேர்,
செபத்தியாவின் சந்ததி 372 பேர்,
11 Pahath Moab (in fwil natul Jeshua ac Joab) — 2,818
யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,818 பேர்,
ஏலாமின் சந்ததி 1,254 பேர்,
சத்தூவின் சந்ததி 845 பேர்,
சக்காயின் சந்ததி 760 பேர்,
பின்னூயியின் சந்ததி 648 பேர்,
பெபாயின் சந்ததி 628 பேர்,
அஸ்காதின் சந்ததி 2,322 பேர்,
அதோனிகாமின் சந்ததி 667 பேர்,
பிக்வாயின் சந்ததி 2,067 பேர்,
21 Ater (su pangpang pac Hezekiah) — 98
எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர்,
பேஸாயின் சந்ததி 324 பேர்,
ஆரீப்பின் சந்ததி 112 பேர்,
கிபியோனின் சந்ததி 95 பேர்.
26 Mwet su mwet matu lalos tuh muta in siti inge wi pac foloko: mwet Bethlehem ac Netophah — 188
பெத்லெகேமையும் நெத்தோபாவையும் சேர்ந்த மனிதர் 188 பேர்,
ஆனதோத்தின் மனிதர் 128 பேர்,
28 mwet Beth Azmaveth — 42
பெத் அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர்,
29 mwet Kiriath Jearim, Chephirah ac Beeroth — 743
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர்,
30 mwet Ramah ac Geba — 621
ராமா, கேபாவின் மனிதர் 621 பேர்,
மிக்மாஸின் மனிதர் 122 பேர்,
32 mwet Bethel ac Ai — 123
பெத்தேல், ஆயியின் மனிதர் 123 பேர்,
33 mwet Nebo se ngia — 52
மற்ற நேபோவின் மனிதர் 52 பேர்,
34 mwet Elam se ngia — 1,254
மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,
எரிகோவின் மனிதர் 345 பேர்,
37 mwet Lod, Hadid, ac Ono — 721
லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 721 பேர்,
செனாகாவின் மனிதர் 3,930 பேர்.
39 Pa inge inen sou lun mwet tol su foloko liki sruoh: Jedaiah (fwil natul Jeshua) — 973
ஆசாரியர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர்,
இம்மேரின் சந்ததி 1,052 பேர்,
பஸ்கூரின் சந்ததி 1,247 பேர்,
ஆரீமின் சந்ததி 1,017 பேர்.
43 Sou lun mwet Levi su foloko liki sruoh: Jeshua ac Kadmiel (fwil natul Hodaviah) — 74
லேவியர்கள்: ஒதாயாவின் வழியே கத்மியேலின் வழிவந்த யெசுவாவின் சந்ததி 74 பேர்.
44 Mwet on lun Tempul, (fwil natul Asaph) — 148
பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 148 பேர்.
45 Mwet topang ke mutunpot lun Tempul (fwil natul Shallum, Ater, Talmon, Akkub, Hatita, ac Shobai) — 138
வாசல் காவலர்கள்: சல்லூம், அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததி 138 பேர்.
46 Sou lun mwet orekma ke Tempul su foloko liki sruoh: Ziha, Hasupha, Tabbaoth,
ஆலய பணியாட்கள்: சீகா, அசுபா, தபாயோத்,
48 Lebana, Hagaba, Shalmai,
லெபானா, அகாபா, சல்மாயி,
50 Reaiah, Rezin, Nekoda,
ரயாயா, ரேசீன், நெக்கோதா,
52 Besai, Meunim, Nephushesim,
பேசாய், மெயூனீம், நெபுசீம்,
53 Bakbuk, Hakupha, Harhur,
பக்பூக், அகுபா, அர்கூர்,
54 Bazlith, Mehida, Harsha,
பஸ்லுத், மெகிதா, அர்ஷா,
55 Barkos, Sisera, Temah,
பர்கோஸ், சிசெரா, தேமா,
நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.
57 Sou lun mwet kulansap lal Solomon su foloko liki sruoh: Sotai, Sophereth, Perida,
சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெரிதா,
58 Jaalah, Darkon, Giddel,
யாலா, தர்கோன், கித்தேல்,
59 Shephatiah, Hattil, Pochereth, Hazzebaim, ac Amon.
செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமோன் ஆகியோரின் சந்ததிகள்.
60 Pisa lulap ke mwet in fwil nutin mwet orekma ke Tempul ac mwet kulansap lal Solomon su foloko liki sruoh pa mwet tolfoko eungoul luo.
ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர்.
61 Oasr mwet foloko liki acn Tel Melah, Tel Harsha, Cherub, Addon, ac Immer, tusruktu elos tia ku in akpwayeye lah elos ma nutin mwet Israel.
பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
62 Pisen mwet in fwil natul Delaiah, Tobiah, ac Nekoda, pa mwet onfoko angngaul luo.
அவர்கள்: தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 642 பேர்.
63 Oayapa oasr mwet in sou lun mwet tol inge: fwil natul Hobaiah, Hakkoz ac Barzillai. (Papa matu tumun sou lal Barzillai el tuh payuk sin sie mutan ke sou lal Barzillai, sie mwet Gilead, na el tuh eis inen sou lun papa talupal.)
ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: அபாயா, அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சிலாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான்.
64 Mwet inge tuh suk inelos ke takin mwet matu lalos, tuh tiana konauk. Ke ma inge elos kofla in oaoayang nu ke mwet tol.
இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.
65 Governor lun mwet Jew fahk nu selos lah elos fah tia ku in ipeis ke mwe mongo mutal ma itukyang nu sin God nwe ke oasr sie mwet tol su ku in orekmakin Urim ac Thummim.
ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான்.
66 Pisa lulap ke mwet foloko liki sruoh — 42,360.
எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர்.
67 Mukul ac mutan kulansap lalos — 7,337 Mwet on mukul ac mutan — 245
இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 245 பேரும் இருந்தனர்.
68 Horse — 736 Miul — 245
மேலும் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும்,
69 Camel — 435 Donkey — 6,720
435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.
70 Mwet puspis elos orani mwe kasru in sang moli orekma in sifil musaeak Tempul: Governor 270 ounce in gold 50 pol lulap in alu 530 nuknuk loeloes lun mwet tol
குடும்பத் தலைவர்களில் சிலர் வேலைக்கு நன்கொடைகளைக் கொடுத்தார்கள். ஆளுநர் 1,000 தங்கக் காசுகளையும், 50 பாத்திரங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் கருவூலத்திற்குக் கொடுத்தான்.
71 Sifen sou 337 paun in gold 3,215 paun in silver
சில குடும்பங்களின் தலைவர்கள் ஆலய வேலையின் கருவூலத்திற்கு 20,000 தங்கக் காசுகளையும், 2,200 மினா வெள்ளியையும் கொடுத்தார்கள்.
72 Mwet lula 337 paun in gold 2,923 paun in silver 67 nuknuk loeloes lun mwet tol
மற்ற மக்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,000 மினா வெள்ளியையும், ஆசாரியருக்கான 67 உடைகளையும் கொடுத்தார்கள்.
73 Mwet tol, mwet Levi, mwet topang ke pot lun Tempul, mwet on, mwet puspis sin mwet saya, mwet orekma lun Tempul, ac mwet Israel nukewa, elos oaki in acn in walil lun Judah.
ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் மக்களில் குறிப்பிட்ட சிலருடனும், மீதியான இஸ்ரயேலருடனும் சேர்ந்து, தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். ஏழாம் மாதம் இஸ்ரயேலர் வந்து தங்கள் ஊர்களில் குடியேறியபோது,