< 시편 99 >
1 여호와께서 통치하시니 만민이 떨 것이요 여호와께서 그룹 사이에 좌정하시니 땅이 요동할 것이로다
௧யெகோவா ராஜரிகம்செய்கிறார், மக்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார், பூமி அசைவதாக.
2 여호와께서 시온에서 광대하시고 모든 민족 위에 높으시도다
௨யெகோவா சீயோனில் பெரியவர், அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர்.
3 주의 크고 두려운 이름을 찬송할지어다 그는 거룩하시도다
௩மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.
4 왕의 능력은 공의를 사랑하는 것이라 주께서 공평을 견고히 세우시고 야곱 중에서 공과 의를 행하시나이다
௪ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.
5 너희는 여호와 우리 하나님을 높여 그 발등상 앞에서 경배할지어다 그는 거룩하시도다
௫நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, அவர் பாதத்தைப் பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர்.
6 그 제사장 중에는 모세와 아론이요 그 이름을 부르는 자 중에는 사무엘이라 저희가 여호와께 간구하매 응답하셨도다
௬அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும், அவர் பெயரைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறுஉத்திரவு அருளினார்.
7 여호와께서 구름 기둥에서 저희에게 말씀하시니 저희가 그 주신 증거와 율례를 지켰도다
௭மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.
8 여호와 우리 하나님이여 주께서는 저희에게 응답하셨고 저희 행한 대로 갚기는 하셨으나 저희를 사하신 하나님이시니이다
௮எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்; நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர்.
9 너희는 여호와 우리 하나님을 높이고 그 성산에서 경배할지어다 대저 여호와 우리 하나님은 거룩하시도다
௯நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர்.