< 시편 89 >

1 에스라인 에단의 마스길 내가 여호와의 인자하심을 영원히 노래하며 주의 성실하심을 내 입으로 대대에 알게 하리이다
எஸ்ரானாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் போதக பாடல். யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன்.
2 내가 말하기를 인자하심을 영원히 세우시며 주의 성실하심을 하늘에서 견고히 하시리라 하였나이다
கிருபை என்றென்றைக்கும் உறுதிப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே நிறுவுவீர் என்றேன்.
3 주께서 이르시되 내가 나의 택한 자와 언약을 맺으며 내 종 다윗에게 맹세하기를
என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கை செய்து, என்னுடைய ஊழியனாகிய தாவீதை நோக்கி:
4 내가 네 자손을 영원히 견고히 하며 네 위를 대대에 세우리라 하였다 하셨나이다(셀라)
என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி, தலைமுறை தலைமுறையாக உன்னுடைய சிங்காசனத்தை நிறுவுவேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா)
5 여호와여 주의 기사를 하늘이 찬양할 것이요 주의 성실도 거룩한 자의 회중에서 찬양하리이다
யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
6 대저 궁창에서 능히 여호와와 비교할 자 누구며 권능 있는 자 중에 여호와와 같은 자 누구리이까
வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்? பலவான்களின் மகன்களில் யெகோவாவுக்கு ஒப்பானவர் யார்?
7 하나님은 거룩한 자의 회중에서 심히 엄위하시오며 둘러 있는 모든 자 위에 더욱 두려워할 자시니이다
தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் பயப்படத்தக்கவர்.
8 여호와 만군의 하나님이여 주와 같이 능한 자 누구리이까 여호와여 주의 성실하심이 주를 둘렀나이다
சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உம்மைப்போல வல்லமையுள்ள யெகோவா யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
9 주께서 바다의 흉용함을 다스리시며 그 파도가 일어날 때에 평정케 하시나이다
தேவனே நீர் கடலின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கச்செய்கிறீர்.
10 주께서 라합을 살륙 당한 자 같이 파쇄하시고 주의 원수를 주의 능력의 팔로 흩으셨나이다
௧0நீர் ராகாபை வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான கரத்தினால் உம்முடைய எதிரிகளைச் சிதறடித்தீர்.
11 하늘이 주의 것이요 땅도 주의 것이라 세계와 그 중에 충만한 것을 주께서 건설하셨나이다
௧௧வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
12 남북을 주께서 창조하셨으니 다볼과 헤르몬이 주의 이름을 인하여 즐거워하나이다
௧௨வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும்.
13 주의 팔에 능력이 있사오며 주의 손은 강하고 주의 오른손은 높으시니이다
௧௩உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது; உம்முடைய கை பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகை உன்னதமானது.
14 의와 공의가 주의 보좌의 기초라 인자함과 진실함이 주를 앞서 행하나이다
௧௪நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
15 즐거운 소리를 아는 백성은 유복한 자라 여호와여 저희가 주의 얼굴 빛에 다니며
௧௫கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; யெகோவாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
16 종일 주의 이름으로 기뻐하며 주의 의로 인하여 높아지오니
௧௬அவர்கள் உம்முடைய பெயரில் நாள்தோறும் சந்தோஷப்பட்டு, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
17 주는 저희 힘의 영광이심이라 우리 뿔이 주의 은총으로 높아지오리니
௧௭நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்களுடைய கொம்பு உயரும்.
18 우리 방패는 여호와께 속하였고 우리 왕은 이스라엘의 거룩한 자에게 속하였음이니이다
௧௮யெகோவாவால் எங்களுடைய கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.
19 주께서 이상 중에 주의 성도에게 말씀하시기를 내가 돕는 힘을 능력 있는 자에게 더하며 백성 중에서 택한 자를 높였으되
௧௯அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: உதவிசெய்யக்கூடிய சக்தியை ஒரு வல்லமையுள்ளவன்மேல் வைத்து, மக்களில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.
20 내가 내 종 다윗을 찾아 나의 거룩한 기름으로 부었도다
௨0என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என்னுடைய பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21 내 손이 저와 함께 하여 견고히 하고 내 팔이 그를 힘이 있게 하리이다
௨௧என்னுடைய கை அவனோடு உறுதியாக இருக்கும்; என்னுடைய கை அவனைப் பலப்படுத்தும்.
22 원수가 저에게서 강탈치 못하며 악한 자가 저를 곤고케 못하리로다
௨௨எதிரி அவனை நெருக்குவதில்லை; துன்மார்க்கமான மகன் அவனை ஒடுக்குவதில்லை.
23 내가 저의 앞에서 그 대적을 박멸하며 저를 한하는 자를 치려니와
௨௩அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.
24 나의 성실함과 인자함이 저와 함께 하리니 내 이름을 인하여 그 뿔이 높아지리로다
௨௪என்னுடைய உண்மையும் என்னுடைய கிருபையும் அவனோடு இருக்கும்; என்னுடைய பெயரினால் அவன் கொம்பு உயரும்.
25 내가 또 그 손을 바다 위에 세우며 오른손을 강들 위에 세우리니
௨௫அவனுடைய கையை மத்திய தரைக் கடலின்மேலும், அவனுடைய வலது கையை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன்.
26 저가 내게 부르기를 주는 나의 아버지시요 나의 하나님이시요 나의 구원의 바위시라 하리로다
௨௬அவன் என்னை நோக்கி: நீர் என்னுடைய பிதா, என் தேவன், என்னுடைய இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
27 내가 또 저로 장자를 삼고 세계 열왕의 으뜸이 되게 하며
௨௭நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும், பூமியின் ராஜாக்களைவிட மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
28 저를 위하여 나의 인자함을 영구히 지키고 저로 더불어 한 나의 언약을 굳게 세우며
௨௮என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என்னுடைய உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
29 또 그 후손을 영구케 하여 그 위를 하늘의 날과 같게 하리로다
௨௯அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளவரை நிலைநிற்கவும் செய்வேன்.
30 만일 그 자손이 내 법을 버리며 내 규례대로 행치 아니하며
௩0அவனுடைய பிள்ளைகள் என்னுடைய நியாயங்களின்படி நடக்காமல், என்னுடைய வேதத்தை விட்டு விலகி;
31 내 율례를 파하며 내 계명을 지키지 아니하면
௩௧என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என்னுடைய நியமங்களை மீறி நடந்தால்;
32 내가 지팡이로 저희 범과를 다스리며 채찍으로 저희 죄악을 징책하리로다
௩௨அவர்களுடைய மீறுதலை சாட்டையினாலும், அவர்களுடைய அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
33 그러나 나의 인자함을 그에게서 다 거두지 아니하며 나의 성실함도 폐하지 아니하며
௩௩ஆனாலும் என்னுடைய கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என்னுடைய உண்மையில் மீறாமலும் இருப்பேன்.
34 내 언약을 파하지 아니하며 내 입술에서 낸 것도 변치 아니하리로다
௩௪என்னுடைய உடன்படிக்கையை மீறாமலும், என்னுடைய உதடுகள் சொன்னதை மாற்றாமலும் இருப்பேன்.
35 내가 나의 거룩함으로 한번 맹세하였은즉 다윗에게 거짓을 아니할 것이라
௩௫ஒருமுறை என்னுடைய பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதிற்கு நான் பொய்சொல்லமாட்டேன்.
36 그 후손이 장구하고 그 위는 해 같이 내 앞에 항상 있으며
௩௬அவனுடைய சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவனுடைய சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
37 또 궁창의 확실한 증인 달 같이 영원히 견고케 되리라 하셨도다(셀라)
௩௭சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், வானத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று சொன்னீர். (சேலா)
38 그러나 주께서 주의 기름 부음 받은 자를 노하사 물리쳐 버리셨으며
௩௮ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்; நீர் அபிஷேகம் செய்துவைத்தவன்மேல் கடுங்கோபமானீர்.
39 주의 종의 언약을 미워하사 그 관을 땅에 던져 욕되게 하셨으며
௩௯உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.
40 저의 모든 울타리를 파괴하시며 그 보장을 훼파하셨으므로
௪0அவனுடைய மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவனுடைய பாதுகாப்பான இடங்களைப் பாழாக்கினீர்.
41 길로 지나는 자들에게 다 탈취를 당하며 그 이웃에게 욕을 당하나이다
௪௧வழிநடக்கிற அனைவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன்னுடைய அயலாருக்கு நிந்தையானான்.
42 주께서 저의 대적의 오른손을 높이시고 저희 모든 원수로 기쁘게 하셨으며
௪௨அவனுடைய எதிரிகளின் வலது கையை நீர் உயர்த்தி, அவனுடைய விரோதிகள் அனைவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர்.
43 저의 칼날을 둔하게 하사 저로 전장에 서지 못하게 하셨으며
௪௩அவனுடைய வாளின் கூர்மையை மழுங்கச்செய்து, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
44 저의 영광을 그치게 하시고 그 위를 땅에 엎으셨으며
௪௪அவனுடைய மகிமையை இல்லாமல்போகச்செய்து, அவனுடைய சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.
45 그 소년의 날을 단촉케 하시고 저를 수치로 덮으셨나이다(셀라)
௪௫அவனுடைய வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா)
46 여호와여 언제까지니이까 스스로 영원히 숨기시리이까 주의 노가 언제까지 불붙듯 하시겠나이까
௪௬எதுவரைக்கும், யெகோவாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?
47 나의 때가 얼마나 단촉한지 기억하소서 주께서 모든 인생을 어찌 그리 허무하게 창조하셨는지요
௪௭என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனிதர்கள் அனைவரையும் வீணாக படைக்கவேண்டியதென்ன?
48 누가 살아서 죽음을 보지 아니하고 그 영혼을 음부의 권세에서 건지리이까(셀라) (Sheol h7585)
௪௮மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) (Sheol h7585)
49 주여 주의 성실하심으로 다윗에게 맹세하신 이전 인자하심이 어디 있나이까
௪௯ஆண்டவரே, நீர் தாவீதிற்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்செய்த உமது ஆரம்பநாட்களின் கிருபைகள் எங்கே?
50 주는 주의 종들의 받은 훼방을 기억하소서 유력한 모든 민족의 훼방을 기억하소서
௫0ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும், நீர் அபிஷேகம் செய்தவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
51 여호와여 이 훼방은 주의 원수가 주의 기름부음 받은 자의 행동을 훼방한 것이로소이다
௫௧யெகோவாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான மக்கள் எல்லோராலும் நான் என்னுடைய மடியில் சுமக்கும் என்னுடைய நிந்தையையும் நினைத்தருளும்.
52 여호와를 영원히 찬송할지어다 아멘 아멘
௫௨யெகோவாவுக்கு என்றென்றைக்கும் நன்றி உண்டாகட்டும். ஆமென். ஆமென்.

< 시편 89 >