< 시편 47 >
1 고라 자손의 시, 영장으로 한 노래 너희 만민들아 손바닥을 치고 즐거운 소리로 하나님께 외칠지어다
௧கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல். எல்லா மக்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள்.
2 지존하신 여호와는 엄위하시고 온 땅에 큰 임군이 되심이로다
௨உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும், பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார்.
3 여호와께서 만민을 우리에게, 열방을 우리 발아래 복종케 하시며
௩மக்களை நமக்கு கீழ்படுத்தி, தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
4 우리를 위하여 기업을 택하시나니 곧 사랑하신 야곱의 영화로다
௪தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா)
5 하나님이 즐거이 부르는 중에 올라가심이여 여호와께서 나팔소리 중에 올라가시도다
௫தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.
6 찬양하라 하나님을 찬양하라 찬양하라 우리 왕을 찬양하라
௬தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
7 하나님은 온 땅의 왕이심이라 지혜의 시로 찬양할지어다
௭தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.
8 하나님이 열방을 치리하시며 하나님이 그 거룩한 보좌에 앉으셨도다
௮தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
9 열방의 방백들이 모임이여 아브라함의 하나님의 백성이 되도다 세상의 모든 방패는 여호와의 것임이여 저는 지존하시도다
௯மக்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய மக்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமான தேவன்.