< 시편 33 >

1 너희 의인들아 어호와를 즐거워하라 찬송은 정직한 자의 마땅히 할 바로다
நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்; துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும்.
2 수금으로 여호와께 감사하고 열 줄 비파로 찬송할지어다
சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள்.
3 새 노래로 그를 노래하며 즐거운 소리로 공교히 연주할지어다
அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள்.
4 여호와의 말씀은 정직하며 그 행사는 다 진실하시도다
யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.
5 저는 정의와 공의를 사랑하심이여 세상에 여호와의 인자하심이 충만하도다
அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது.
6 여호와의 말씀으로 하늘이 지음이 되었으며 그 만상이 그 입기운으로 이루었도다
யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது.
7 저가 바닷물을 모아 무더기 같이 쌓으시며 깊은 물을 곳간에 두시도다
அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.
8 온 땅은 여호와를 두려워하며 세계의 모든 거민은 그를 경외할지어다
பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக.
9 저가 말씀하시매 이루었으며 명하시매 견고히 섰도다
அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
10 여호와께서 열방의 도모를 폐하시며 민족들의 사상을 무효케 하시도다
௧0யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார்.
11 여호와의 도모는 영영히 서고 그 심사는 대대에 이르리로다
௧௧யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
12 여호와로 자기 하나님을 삼은 나라 곧 하나님의 기업으로 빼신 바 된 백성은 복이 있도다
௧௨யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும், அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது.
13 여호와께서 하늘에서 감찰하사 모든 인생을 보심이여
௧௩யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்.
14 곧 그 거하신 곳에서 세상의 모든 거민을 하감하시도다
௧௪தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்.
15 저는 일반의 마음을 지으시며 저희 모든 행사를 감찰하시는 자로다
௧௫அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.
16 많은 군대로 구원 얻은 왕이 없으며 용사가 힘이 커도 스스로 구하지 못하는도다
௧௬எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்; போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான்.
17 구원함에 말은 헛것임이여 그 큰 힘으로 구하지 못하는도다
௧௭காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது.
18 여호와는 그 경외하는 자 곧 그 인자하심을 바라는 자를 살피사
௧௮தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
19 저희 영혼을 사망에서 건지시며 저희를 기근시에 살게 하시는도다
௧௯பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது.
20 우리 영혼이 여호와를 바람이여 저는 우리의 도움과 방패시로다
௨0நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
21 우리 마음이 저를 즐거워함이여 우리가 그 성호를 의지한 연고로다
௨௧அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும்.
22 여호와여 우리가 주께 바라는 대로 주의 인자하심을 우리에게 베푸소서
௨௨யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.

< 시편 33 >