< 시편 28 >
1 다윗의 시 여호와여 내가 주께 부르짖으오니 나의 반석이여 내게 귀를 막지 마소서 주께서 내게 잠잠하시면 내가 무덤에 내려가는 자와 같을까 하나이다
௧தாவீதின் பாடல். என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்; நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
2 내가 주의 성소를 향하여 나의 손을 들고 주께 부르짖을 때에 나의 간구하는 소리를 들으소서
௨நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
3 악인과 행악하는 자와 함께 나를 끌지 마옵소서 저희는 그 이웃에게 화평을 말하나 그 마음에는 악독이 있나이다
௩அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும்.
4 저희의 행사와 그 행위의 악한 대로 갚으시며 저희 손의 지은 대로 갚아 그 마땅히 받을 것으로 보응하소서
௪அவர்களுடைய செயல்களுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் தீங்கிற்கும் சரியானதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் கைகளின் செய்கைக்கு சரியானதாக அவர்களுக்குக் கொடும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.
5 저희는 여호와의 행하신 일과 손으로 지으신 것을 생각지 아니하므로 여호와께서 저희를 파괴하고 건설치 아니하시리로다
௫அவர்கள் யெகோவாவுடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.
6 여호와를 찬송함이여 내 간구하는 소리를 들으심이로다
௬யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்; அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.
7 여호와는 나의 힘과 나의 방패시니 내 마음이 저를 의지하여 도움을 얻었도다 그러므로 내 마음이 크게 기뻐하며 내 노래로 저를 찬송하리로다
௭யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; என் பாடலினால் அவரைத் துதிப்பேன்.
8 여호와는 저희의 힘이시요 그 기름 부음 받은 자의 구원의 산성이시로다
௮யெகோவா அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம் செய்தவனுக்கு பாதுகாப்பான அடைக்கலமானவர்.
9 주의 백성을 구원하시며 주의 산업에 복을 주시고 또 저희의 목자가 되사 영원토록 드십소서
௯தேவனே நீர் உமது மக்களைப் பாதுகாத்து, உமது உரிமை சொத்தை ஆசீர்வதியும்; அவர்களுக்கு உணவளித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.