< 민수기 16 >
1 레위의 증손 고핫의 손자 이스할의 아들 고라와 르우벤 자손 엘리압의 아들 다단과 아비람과 벨렛의 아들 온이 당을 짓고
௧லேவிக்குப் பிறந்த கோகாத்தின் மகனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் மகனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு,
2 이스라엘 자손 총회에 택함을 받은 자 곧 회중에 유명한 어떤 족장 이백오십 인과 함께 일어나서 모세를 거스리니라
௨இஸ்ரவேல் மக்களில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்திற்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய 250 பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக எழும்பி,
3 그들이 모여서 모세와 아론을 거스려 그들에게 이르되 너희가 분수에 지나도다 회중이 다 각각 거룩하고 여호와께서도 그들 중에 계시거늘 너희가 어찌하여 여호와의 총회 위에 스스로 높이느뇨
௩மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டம்கூடி, அவர்களை நோக்கி: “நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லோரும் பரிசுத்தமானவர்கள்; யெகோவா அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, யெகோவாவுடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்” என்றார்கள்.
௪மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.
5 고라와 그 모든 무리에게 말하여 가로되 아침에 여호와께서 자기에게 속한 자가 누구인지 거룩한 자가 누구인지 보이시고 그 자를 자기에게 가까이 나아오게 하시되 곧 그가 택하신 자를 자기에게 가까이 나아오게 하시리니
௫பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: “நாளைக்குக் யெகோவா தம்முடையவன் இன்னான் என்றும், தம் அருகில் சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.
6 이렇게 하라 너 고라와 너의 모든 무리는 향로를 취하고
௬ஒன்று செய்யுங்கள்; கோராகே, கோராகின் கூட்டத்தார்களே, நீங்கள் எல்லோரும் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு,
7 내일 여호와 앞에서 그 향로에 불을 담고 그 위에 향을 두라 그 때에 여호와의 택하신 자는 거룩하게 되리라 레위 자손들아 너희가 너무 분수에 지나치느니라
௭நாளைக்கு அவைகளில் அக்கினி போட்டு, யெகோவாவுடைய சந்நிதியில் தூபவர்க்கம் போடுங்கள்; அப்பொழுது யெகோவா எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாக இருப்பான்; லேவியின் சந்ததியாராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள்” என்றான்.
8 모세가 또 고라에게 이르되 너희 레위 자손들아 들으라
௮பின்னும் மோசே கோராகை நோக்கி: “லேவியின் சந்ததியாரே, கேளுங்கள்;
9 이스라엘의 하나님이 이스라엘 회중에서 너희를 구별하여 자기에게 가까이 하게 하사 여호와의 성막에서 봉사하게 하시며 회중 앞에 서서 그들을 대신하여 섬기게 하심이 너희에게 작은 일이겠느냐
௯யெகோவாவுடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம் அருகில் சேரச்செய்யும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும்,
10 하나님이 너와 네 모든 형제 레위 자손으로 너와 함께 가까이 오게 하신 것이 작은 일이 아니어늘 너희가 오히려 제사장의 직분을 구하느냐
௧0அவர் உன்னையும் உன்னோடு லேவியின் சந்ததியாராகிய உன்னுடைய எல்லாச் சகோதரனையும் சேரச்செய்ததும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?
11 이를 위하여 너와 너의 무리가 다 모여서 여호와를 거스리는도다 아론은 어떠한 사람이관대 너희가 그를 원망하느냐
௧௧இதற்காக நீயும் உன்னுடைய கூட்டத்தார் அனைவரும் யெகோவாவுடைய விரோதமாகவே கூட்டம்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் யார்” என்றான்.
12 모세가 엘리압의 아들 다단과 아비람을 부르러 보내었더니 그들이 가로되 우리는 올라가지 않겠노라
௧௨பின்பு மோசே எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: “நாங்கள் வருகிறதில்லை;
13 네가 우리를 젖과 꿀이 흐르는 땅에서 이끌어 내어 광야에서 죽이려 함이 어찌 작은 일이기에 오히려 스스로 우리 위에 왕이 되려 하느냐
௧௩இந்த வனாந்திரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திலிருந்து எங்களைக் கொண்டு வந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் அதிகாரமும் செய்யப்பார்கிறாயோ?
14 이뿐 아니라 네가 우리를 젖과 꿀이 흐르는 땅으로 인도하여 들이지도 아니하고 밭과 포도원도 우리에게 기업으로 주지 아니하니 네가 이 사람들의 눈을 빼려느냐 우리는 올라가지 아니하겠노라
௧௪மேலும் நீ எங்களைப் நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திற்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சைத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதர்களுடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை” என்றார்கள்.
15 모세가 심히 노하여 여호와께 여짜오되 주는 그들의 예물을 돌아보지 마옵소서 나는 그들의 한 나귀도 취하지 아니하였고 그들의 한 사람도 해하지 아니하였나이다 하고
௧௫அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் யெகோவாவை நோக்கி: “அவர்கள் செலுத்தும் காணிக்கையை அங்கீகரியாமல் இருப்பீராக; நான் அவர்களிடம் ஒரு கழுதையைக் கூட எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு தீங்கு செய்யவும் இல்லை” என்றான்.
16 이에 고라에게 이르되 너와 너의 온 무리는 아론과 함께 내일 여호와 앞으로 나아오되
௧௬பின்பு மோசே கோராகை நோக்கி: “நீயும் உன்னுடைய கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் யெகோவாவுடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.
17 너희는 각기 향로를 잡고 그 위에 향을 두고 각 사람이 그 향로를 여호와 앞으로 가져오라 향로는 모두 이백오십 이라 너와 아론도 각각 향로를 가지고 올지니라
௧௭உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய 250 தூபகலசங்களையும் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள்” என்றான்.
18 그들이 각기 향로를 취하여 불을 담고 향을 그 위에 두고 모세와 아론으로 더불어 회막문에 서니라
௧௮அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள்.
19 고라가 온 회중을 회막문에 모아 놓고 그 두 사람을 대적하려 하매 여호와의 영광이 온 회중에게 나타나시니라
௧௯அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.
20 여호와께서 모세와 아론에게 일러 가라사대
௨0யெகோவா மோசேயோடும் ஆரோனோடும் பேசி:
21 너희는 이 회중에게서 떠나라 내가 순식간에 그들을 멸하려 하노라
௨௧“இந்தச் சபையை விட்டுப் பிரிந்து போங்கள்; ஒரு நிமிடத்திலே அவர்களை அழித்துப்போடுவேன்” என்றார்.
22 그 두 사람이 엎드려 가로되 하나님이여 모든 육체의 생명의 하나님이여 한 사람이 범죄하였거늘 온 회중에게 진노하시나이까
௨௨அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: “தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபம்கொள்வீரோ” என்றார்கள்.
௨௩அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
24 회중에게 명하여 이르기를 너희는 고라와 다단과 아비람의 장막 사면에서 떠나라 하라
௨௪“கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல்” என்றார்.
25 모세가 일어나 다단과 아비람에게로 가니 이스라엘 장로들이 좇았더라
௨௫உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடம் போனான்; இஸ்ரவேலின் மூப்பர்களும் அவனைப் பின்சென்று போனார்கள்.
26 모세가 회중에게 일러 가로되 이 악인들의 장막에서 떠나고 그들의 물건은 아무 것도 만지지 말라 그들의 모든 죄 중에서 너희도 멸망할까 두려워 하노라 하매
௨௬அவன் சபையாரை நோக்கி: “இந்தப் பொல்லாத மனிதர்களின் எல்லா பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடி, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாமலிருங்கள்” என்றான்.
27 무리가 고라와 다단과 아비람의 장막 사면을 떠나고 다단과 아비람은 그 처자와 유아들과 함께 나와서 자기 장막문에 선지라
௨௭அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தைவிட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்களுடைய மனைவிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்களுடைய கூடாரவாசலிலே நின்றார்கள்.
28 모세가 가로되 여호와께서 나를 보내사 이 모든 일을 행케 하신 것이요 나의 임의로 함이 아닌 줄을 이 일로 인하여 알리라
௨௮அப்பொழுது மோசே: “இந்தக் கிரியைகளையெல்லாம் செய்கிறதற்குக் யெகோவா என்னை அனுப்பினார் என்றும், அவைகளை நான் என்னுடைய மனதின்படியே செய்யவில்லை என்றும், நீங்கள் எதினாலே அறிவீர்களென்றால்,
29 곧 이 사람들의 죽음이 모든 사람과 일반이요 그들의 당하는 벌이 모든 사람의 당하는 벌과 일반이면 여호와께서 나를 보내심이 아니어니와
௨௯எல்லா மனிதர்களும் சாகிறபடி இவர்கள் செத்து, எல்லா மனிதர்களுக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், யெகோவா என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்.
30 만일 여호와께서 새 일을 행하사 땅으로 입을 열어 이 사람들과 그들의 모든 소속을 삼켜 산채로 음부에 빠지게 하시면 이 사람들이 과연 여호와를 멸시한 것인 줄을 너희가 알리라 (Sheol )
௩0யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol )
31 이 모든 말을 마치는 동시에 그들의 밑의 땅이 갈라지니라
௩௧அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது;
32 땅이 그 입을 열어 그들과 그 가속과 고라에게 속한 모든 사람과 그 물건을 삼키매
௩௨பூமி தன்னுடைய வாயைத் திறந்து, அவர்களையும் அவர்களுடைய வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதர்களையும், அவர்களுக்கு உண்டான எல்லா பொருள்களையும் விழுங்கியது.
33 그들과 그 모든 소속이 산채로 음부에 빠지며 땅이 그 위에 합하니 그들이 총회 중에서 망하니라 (Sheol )
௩௩அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். (Sheol )
34 그 주위에 있는 온 이스라엘이 그들의 부르짖음을 듣고 도망하며 가로되 땅이 우리도 삼킬까 두렵다 하였고
௩௪அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர்கள் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும்” என்று சொல்லி ஓடினார்கள்.
35 여호와께로서 불이 나와서 분향하는 이백오십 인을 소멸하였더라
௩௫அக்கினி யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின 250 பேரையும் பட்சித்துப் போட்டது.
௩௬பின்பு யெகோவா மோசேயை நோக்கி:
37 너는 제사장 아론의 아들 엘르아살을 명하여 붙는 불 가운데서 향로를 취하여다가 그 불을 타처에 쏟으라 그 향로는 거룩함이니라
௩௭“நெருப்பிற்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமானது.
38 사람들은 범죄하여 그 생명을 스스로 해하였거니와 그들이 향로를 여호와 앞에 드렸으므로 그 향기가 거룩하게 되었나니 그 향로를 쳐서 제단을 싸는 편철을 만들라 이스라엘 자손에게 표가 되리라 하신지라
௩௮தங்களுடைய ஆத்துமாக்களுக்கே கேடு உண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடும் தட்டையான தகடுகளாக அடிக்கவேண்டும்; அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததால் அவைகள் பரிசுத்தமானது; அவைகள் இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும்” என்றார்.
39 제사장 엘르아살이 불탄 자들의 드렸던 놋 향로를 취하여 쳐서 제단을 싸서
௩௯அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து,
40 이스라엘 자손의 기념물이 되게 하였으니 이는 아론 자손이 아닌 외인은 여호와 앞에 분향하러 가까이 오지 못하게 함이며 또 고라와 그 무리 같이 되지 않게 하기 위함이라 여호와께서 모세로 그에게 명하신 대로 하였더라
௪0ஆரோனின் சந்ததியாக இல்லாத அந்நியன் ஒருவனும் யெகோவாவுடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடியும், கோராகைப்போலவும் அவனுடைய கூட்டத்தாரைப்போலவும் இல்லாதபடியும், இஸ்ரவேல் மக்களுக்கு நினைவுப்பொருளாக இருக்கும்படியாக, யெகோவா மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.
41 이튿날 이스라엘 자손의 온 회중이 모세와 아론에게 원망하여 가로되 너희가 여호와의 백성을 죽였도다 하고
௪௧மறுநாளில் இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: “நீங்கள் யெகோவாவின் மக்களைக் கொன்று போட்டீர்கள்” என்றார்கள்.
42 회중이 모여 모세와 아론을 칠 때에 회막을 바라본즉 구름이 회막을 덮었고 여호와의 영광이 나타났더라
௪௨சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்திற்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, யெகோவாவின் மகிமை காணப்பட்டது.
௪௩மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக வந்தார்கள்;
௪௪அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
45 너희는 이 회중에게서 떠나라 내가 순식간에 그들을 멸하려 하노라 하시매 그 두 사람이 엎드리니라
௪௫“இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிடத்தில் அவர்களை அழிப்பேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.
46 이에 모세가 아론에게 이르되 너는 향로를 취하고 단의 불을 그것에 담고 그 위에 향을 두어 가지고 급히 회중에게로 가서 그들을 위하여 속죄하라 여호와께서 진노하셨으므로 염병이 시작되었음이니라
௪௬மோசே ஆரோனை நோக்கி: “நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாகச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்”; யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது. வாதை துவங்கியது என்றான்.
47 아론이 모세의 명을 좇아 향로를 가지고 회중에게로 달려간즉 백성 중에 염병이 시작되었는지라 이에 백성을 위하여 속죄하고
௪௭மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; மக்களுக்குள்ளே வாதை துவங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து,
48 죽은 자와 산 자 사이에 섰을 때에 염병이 그치니라
௪௮செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது.
49 고라의 일로 죽은 자 외에 염병에 죽은 자가 일만 사천칠백 명이었더라
௪௯கோராகின் காரியத்தினால் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் 14,700 பேர்.
50 염병이 그치매 아론이 회막문 모세에게로 돌아오니라
௫0வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு மோசேயினிடம் திரும்பிவந்தான்.