< 이사야 18 >
1 슬프다 구스의 강 건너편 날개치는 소리 나는 땅이여
௧எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் இறக்கைகளுடையதும்,
2 갈대 배를 물에 띄우고 그 사자를 수로로 보내며 이르기를 너희 경첩한 사자들아 너희는 강들이 흘러 나누인 나라로 가되 장대하고 준수한 백성 곧 시초부터 두려움이 되며 강성하여 대적을 밟는 백성에게로 가라 하도다
௨கடல்வழியாகத் தண்ணீர்களின்மேல் நாணல் படகுகளிலே பிரதிநிதிகளை அனுப்புகிறதுமான தேசத்திற்கு ஐயோ, வேகமான தூதர்களே, அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் உயர்ந்து இருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான மக்களிடத்திற்குப் போங்கள்.
3 세상의 모든 거민, 지상에 거하는 너희여 산들 위에 기호를 세우거든 너희는 보고 나팔을 불거든 너희는 들을지니라
௩பூமியில் குடியிருக்கிறவர்களும், தேசத்து மக்களுமாகிய நீங்களெல்லோரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள்.
4 여호와께서 내게 이르시되 내가 나의 처소에서 종용히 감찰함이 쬐이는 일광 같고 가을 더위에 운무 같도다
௪நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் விழும் சூடான வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து வெப்பத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் இருப்பிடத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று யெகோவா என்னுடனே சொன்னார்.
5 추수하기 전에 꽃이 떨어지고 포도가 맺혀 익어 갈 때에 내가 낫으로 그 연한 가지를 베며 퍼진 가지를 찍어버려서
௫திராட்சைச்செடிகள் அறுப்புக்கு முன்னே பூப்பூத்து முற்றி காய்க்கிற காய்கள் பிஞ்சாக இருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே காய்ப்புக்களை அறுத்துக் கொடிகளை வெட்டி அகற்றிப்போடுவார்.
6 산의 독수리들에게와 땅의 들짐승들에게 끼쳐주리니 산의 독수리들이 그것으로 과하하며 땅의 들짐승들이 다 그것으로 과동하리라 하셨음이니라
௬அவைகள் ஏகமாக மலைகளின் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் விடப்படும்; பறவைகள் அதின்மேல் கோடைக்காலத்திலும், காட்டுமிருகங்களெல்லாம் அதின்மேல் மழைக்காலத்திலும் தங்கும்.
7 그 때에 강들이 흘러 나누인 나라의 장대하고 준수하며 시초부터 두려움이 되며 강성하여 대적을 밟는 백성에게서 만군의 여호와께 드릴 예물을 가지고 만군의 여호와의 이름을 두신 곳 시온 산에 이르리라
௭அக்காலத்திலே அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான தேசமானது, சேனைகளின் யெகோவாவின் நாமம் தங்கும் இடமாகிய சீயோன் மலையில் சேனைகளின் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.