< 아모스 5 >

1 이스라엘 족속아 내가 너희에게 대하여 애가로 지은 이 말을 들으라
இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள்.
2 처녀 이스라엘이 엎드러졌음이여 다시 일어나지 못하리로다 자기 땅에 던지움이여 일으킬 자 없으리로다
இஸ்ரவேல் என்னும் கன்னிப்பெண் விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன்னுடைய தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளைத் தூக்கிவிடுகிறவர்கள் இல்லை.
3 주 여호와께서 가라사대 이스라엘 중에서 천 명이 나가던 성읍에는 백 명만 남고 백 명이 나가던 성읍에는 열 명만 남으리라 하셨느니라
நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீதியாக இருப்பார்கள் என்று யெகோவாகிய தேவன் சொல்லுகிறார்.
4 여호와께서 이스라엘 족속에게 이르시기를 너희는 나를 찾으라 그리하면 살리라
யெகோவா இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.
5 벧엘을 찾지 말며 길갈로 들어가지 말며 브엘세바로도 나아가지 말라 길갈은 정녕 사로잡히겠고 벧엘은 허무하게 될 것임이라 하셨나니
பெத்தேலைத் தேடாதீர்கள், கில்காலிலும் சேராதீர்கள், பெயெர்செபாவுக்கும் போகாதீர்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான இடமாகவும் போகும்.
6 너희는 여호와를 찾으라 그리하면 살리라 염려컨대 저가 불 같이 요셉의 집에 내리사 멸하시리니 벧엘에서 그 불들을 끌 자가 없을까 하노라
யெகோவாவை தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அணைக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி, அதை எரிக்கும்.
7 공법을 인진으로 변하며 정의를 땅에 던지는 자들아
நியாயத்தைக் கசப்பாக மாற்றி, நீதியைத் தரையிலே விழச்செய்கிறவர்களே அவரைத் தேடுங்கள்.
8 묘성과 삼성을 만드시며 사망의 그늘로 아침이 되게 하시며 백주로 어두운 밤이 되게 하시며 바닷물을 불러 지면에 쏟으시는 자를 찾으라 그 이름이 여호와시니라
அவர் நட்சத்திரங்களையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரணஇருளை அதிகாலையாக மாற்றி, பகலை இரவாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் பரப்பின்மேல் ஊற்றுகிறவர்; யெகோவா என்பது அவருடைய நாமம்.
9 저가 강한 자에게 홀연히 패망이 임하게 하신즉 그 패망이 산성에 미치느니라
பாதுகாப்பான இடத்தின்மேல் அழிவு வரும்படியாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாக இலகுவடையச் செய்கிறவர்.
10 무리가 성문에서 책망하는 자를 미워하며 정직히 말하는 자를 싫어하는도다
௧0பட்டணத்தின் நுழைவுவாயிலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாகப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள்.
11 너희가 가난한 자를 밟고 저에게서 밀의 부당한 세를 취하였은즉 너희가 비록 다듬은 돌로 집을 건축하였으나 거기 거하지 못할 것이요 아름다운 포도원을 심었으나 그 포도주를 마시지 못하리라
௧௧நீங்கள் தரித்திரனை மிதித்து, அவனுடைய கையிலே தானியத்தைச் சுமைசுமையாக வாங்குகிறபடியினால், நீங்கள் வேலைப்பாடுள்ள கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சைத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.
12 너희의 허물이 많고 죄악이 중함을 내가 아노라 너희는 의인을 학대하며 뇌물을 받고 성문에서 궁핍한 자를 억울하게 하는 자로다
௧௨உங்களுடைய மீறுதல்கள் மிகுதியென்றும், உங்களுடைய பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, லஞ்சம் வாங்கி, பட்டணத்தின் நுழைவுவாயிலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்.
13 그러므로 이런 때에 지혜자가 잠잠하나니 이는 악한 때임이니라
௧௩ஆகையால் புத்திமான் அந்தக்காலத்திலே மௌனமாக இருக்கவேண்டும்; அந்தக்காலம் தீமையான காலம்.
14 너희는 살기 위하여 선을 구하고 악을 구하지 말지어다 만군의 하나님 여호와께서 너희의 말과 같이 너희와 함께 하시리라
௧௪நீங்கள் பிழைக்கும்படி தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய யெகோவா உங்களுடன் இருப்பார்.
15 너희는 악을 미워하고 선을 사랑하며 성문에서 공의를 세울지어다 만군의 하나님 여호와께서 혹시 요셉의 남은 자를 긍휼히 여기시리라
௧௫நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, நுழைவுவாயிலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய யெகோவா யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.
16 그러므로 주 만군의 하나님 여호와께서 말씀하시기를 사람이 모든 광장에서 울겠고 모든 거리에서 오호라 오호라 하겠으며 농부를 불러다가 애곡하게 하며 울음꾼을 불러다가 울게 할 것이며
௧௬ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத் தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ, ஐயோ, என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாடத்தெரிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.
17 모든 포도원에서도 울리니 이는 내가 너희 가운데로 지나갈 것임이니라 이는 여호와의 말씀이니라
௧௭எல்லாத் திராட்சைதோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
18 화 있을진저 여호와의 날을 사모하는 자여 너희가 어찌하여 여호와의 날을 사모하느뇨 그 날은 어두움이요 빛이 아니라
௧௮யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ, அதினால் உங்களுக்கு என்ன உண்டு? யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாள் வெளிச்சமாக இல்லாமல் இருளாக இருக்கும்.
19 마치 사람이 사자를 피하다가 곰을 만나거나 혹 집에 들어가서 손을 벽에 대었다가 뱀에게 물림 같도다
௧௯சிங்கத்திற்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டிற்குள்ளே வந்து சுவரின்மேல் தன்னுடைய கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.
20 여호와의 날이 어찌 어두워서 빛이 없음이 아니며 캄캄하여 빛남이 없음이 아니냐
௨0யெகோவாவுடைய நாள் வெளிச்சமாக இல்லாமல், இருளும் பிரகாசமற்ற காரிருளுமாக இருக்குமல்லவோ?
21 내가 너희 절기를 미워하여 멸시하며 너희 성회들을 기뻐하지 아니하나니
௨௧உங்களுடைய பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்களுடைய ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை.
22 너희가 내게 번제나 소제를 드릴지라도 내가 받지 아니할 것이요 너희 살진 희생의 화목제도 내가 돌아보지 아니하리라
௨௨உங்களுடைய தகனபலிகளையும் உணவுபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்களுடைய மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப்பார்க்கமாட்டேன்.
23 네 노랫소리를 내 앞에서 그칠지어다 네 비파 소리도 내가 듣지 아니하리라
௨௩உன் பாடல்களின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.
24 오직 공법을 물 같이, 정의를 하수 같이 흘릴지로다
௨௪நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரட்டும்.
25 이스라엘 족속아 너희가 사십 년 동안 광야에서 희생과 소제물을 내게 드렸느냐
௨௫இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலே இருந்த நாற்பது வருடங்கள்வரையில் பலிகளையும், காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ?
26 너희가 너희 왕 식굿과 너희 우상 기윤 곧 너희가 너희를 위하여 만들어서 신으로 삼은 별 형상을 지고 가리라
௨௬நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளோகுடைய கூடாரத்தையும், உங்களுடைய தெய்வங்களின் நட்சத்திர ராசியாகிய உங்களுடைய சிலைகளின் பல்லக்கையும் சுமந்துகொண்டு வந்தீர்களே.
27 내가 너희를 다메섹 밖으로 사로잡혀 가게 하리라 이는 만군의 하나님이라 일컫는 여호와의 말씀이니라
௨௭ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பால் குடிபோகச்செய்வேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள யெகோவா சொல்லுகிறார்.

< 아모스 5 >