< 역대상 9 >

1 온 이스라엘이 그 보계대로 계수되고 이스라엘 열왕기에 기록되니라 유다가 범죄함을 인하여 바벨론으로 사로잡혀 갔더니
இஸ்ரவேல் எல்லோரும் தங்கள் வம்சவரலாற்றின்படி பதிவுசெய்யப்பட்டார்கள்; இவர்களுடைய பெயர்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார்கள் தங்களுடைய துரோகத்தினால், பாபிலோனுக்கு சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
2 먼저 그 본성으로 돌아와서 그 기업에 거한 자는 이스라엘 제사장들과 레위 사람과 느디님 사람들이라
தங்களுடைய சொந்த நிலங்களிலும் தங்களுடைய பட்டணங்களிலும் முன்பு குடியிருந்தவர்கள் இஸ்ரவேலர்களும் ஆசாரியர்களும் லேவியர்களும் ஆலயப்பணியாளர்களுமே.
3 유다 자손과 베냐민 자손과 에브라임과 므낫세 자손 중에서 예루살렘에 거한 자는
யூதா சந்ததிகளிலும், பென்யமீன் சந்ததிகளிலும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் சந்ததிகளிலும், எருசலேமில் குடியிருந்தவர்கள் யாரென்றால்,
4 유다의 아들 베레스 자손 중에 우대니 저는 암미훗의 아들이요 오므리의 손자요 이므리의 증손이요 바니의 현손이며
யூதாவின் மகனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் மகனாகிய இம்ரியின் மகனான உம்ரிக்குப் பிறந்த அம்மியூதின் மகன் ஊத்தாய்.
5 실로 사람 중에서는 장자 아사야와 그 아들들이요
சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவனுடைய பிள்ளைகளும்,
6 세라 자손 중에서는 여우엘과 그 형제 육백구십 인이요
சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவனுடைய சகோதரர்களாகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேர்களுமே.
7 베냐민 자손 중에서는 핫스누아의 증손 호다위아의 손자 므술람의 아들 살루요
பென்யமீன் சந்ததியில் அசெனூவாவின் மகனாகிய ஒதாவியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின் மகன் சல்லு.
8 여로함의 아들 이브느야와 미그리의 손자 웃시의 아들 엘라요 이브니야의 증손 르우엘의 손자 스바댜의 아들 무술람이요
எரோகாமின் மகன் இப்னெயா; மிக்கிரியின் மகனாகிய ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் மகனாகிய ரேகுவேலுக்குப் பிறந்த செபதியாவின் மகன் மெசுல்லாம் என்பவர்களும்;
9 또 저의 형제들이라 그 보계대로 계수하면 구백오십육 인이니라 그 집의 족장된 자들이더라
தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரர்களாகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனிதர்கள் எல்லோரும், தங்களுடைய பிதாக்களின் வம்சத்திலே முன்னோர்களின் தலைவர்களாக இருந்தார்கள்.
10 제사장 중에서는 여다야와 여호야립과 야긴과
௧0ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின்.
11 하나님의 전을 맡은 자 아사랴니 저는 힐기야의 아들이요 므술람의 손자요 사독의 증손이요 므라욧의 현손이요 아히둡의 오대손이며
௧௧அகிதூபின் மகனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் மகனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக்காரன்.
12 또 아다야니 저는 여로함의 아들이요 바스훌의 손자요 말기야의 증손이며 또 마아새니 저는 아디엘의 아들이요 야세라의 손자요 므술람의 증손이요 므실레밋의 현손이요 임멜의 오대손이며
௧௨மல்கியாவின் மகனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மேரின் மகனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் மகனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,
13 또 그 형제들이니 그 집의 족장이라 하나님의 전의 일에 수종들 재능이 있는 자가 모두 일천칠백육십 인이더라
௧௩அவர்களுடைய சகோதரர்களும், தங்கள் முன்னோர்களின் வம்சத்தலைவர்களான ஆயிரத்து எழுநூற்று அறுபதுபேர் தேவாலயத்தின் பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாக இருந்தார்கள்.
14 레위 사람 중에서는 므라리 자손 스마야니 저는 핫숩의 아들이요 아스리감의 손자요 하사뱌의 증손이며
௧௪லேவியர்களில் மெராரியின் சந்ததியான அசபியாவின் மகனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா,
15 또 박박갈과 헤레스와 갈랄과 맛다냐니 저는 미가의 아들이요 시그리의 손자요 아삽의 증손이며
௧௫பக்பக்கார், ஏரேஸ், காலால், ஆசாபின் மகனாகிய சிக்ரிக்குப் பிறந்த மீகாவின் மகன் மத்தனியா,
16 또 오바댜니 저는 스마야의 아들이요 갈랄의 손자요 여두둔의 증손이며 또 베레갸니 저는 아사의 아들이요 엘가나의 손자라 느도바 사람의 향리에 거하였더라
௧௬எதுத்தூனின் மகனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியர்களின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் மகனாகிய ஆசாவின் மகன் பெரகியா,
17 문지기는 살룸과 악굽과 달몬과 아히만과 그 형제들이니 살룸은 그 두목이라
௧௭வாசல் காவலாளிகளாகிய சல்லூம், அக்கூப், தல்மோன், அகீமான் என்பவர்களும், இவர்கள் சகோதரர்களுமே; இவர்கள் தலைவன் சல்லூம்.
18 이 사람들은 전에 왕의 문 동편 곧 레위 자손의 영의 문지기며
௧௮லேவி சந்ததியின் சேனைகளில் இவர்கள் கிழக்கேயிருக்கிற ராஜாவின் வாசலைக் காவல் காத்துவந்தார்கள்.
19 고라의 증손 에비아삽의 손자 고레의 아들 살룸과 그 종족 형제 곧 고라의 자손이 수종드는 일을 맡아 성막 문들을 지켰으니 그 열조도 여호와의 영을 맡고 그 들어가는 곳을 지켰으며
௧௯கோராகின் மகனாகிய எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களாகிய அவனுடைய சகோதரர்களுமான கோராகியர்கள் பணிவிடைவேலையை விசாரித்து, அவர்கள் பிதாக்கள் யெகோவாவுடைய இடத்திலே கூடாரத்திற்குப்போகிற வழியைக் காவல்காத்ததுபோல, கூடாரத்துவாசல்களைக் காத்துவந்தார்கள்.
20 여호와께서 함께하신 엘르아살의 아들 비느하스가 옛적에 그 무리를 거느렸고
௨0எலெயாசாரின் மகனாகிய பினேகாசுடனே யெகோவா இருந்ததால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாக இருந்தான்.
21 므셀레먀의 아들 스가랴는 회막 문지기가 되었더라
௨௧மெசெல்மியாவின் மகனாகிய சகரியா ஆசரிப்புக் கூடாரவாசல் காவல்காரனாக இருந்தான்.
22 택함을 입어 문지기 된 자가 모두 이백열둘이니 이는 그 향리에서 그 보계대로 계수된 자요 다윗과 선견자 사무엘이 전에 세워서 이 직분을 맡긴 자라
௨௨வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களெல்லாரும் இருநூற்றுப் பன்னிரெண்டுபேர்களாக இருந்து, தங்கள் கிராமங்களின்படியே தங்களுடைய வம்சத்து அட்டவணைகளில் எழுதப்பட்டார்கள்; தாவீதும், தரிசனம்காண்கிறவனாகிய சாமுவேலும், அவர்களைத் தங்களுடைய வேலைகளில் வைத்தார்கள்.
23 저희와 그 자손이 그 반열을 좇아 여호와의 전 곧 성막문을 지켰는데
௨௩அப்படியே அவர்களும், அவர்களுடைய மகன்களும் யெகோவாவுடைய ஆலயமாகிய கூடாரத்து வாசல்களைக் காக்கிறவர்களை வரிசையாக விசாரித்து வந்தார்கள்.
24 이 문지기가 동서남북 사방에 섰고
௨௪ஆலயத்தின் வாசல்களைக் காக்கிறவர்கள் நான்கு திசைகளாகிய கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்தார்கள்.
25 그 향리에 있는 형제들은 이레마다 와서 함께하니
௨௫அவர்களுடைய சகோதரர்கள் தங்களுடைய கிராமங்களிலிருந்து, ஏழுநாட்களுக்கு ஒருமுறை மாறிமாறி அவர்களோடு இருக்க வருவார்கள்.
26 이는 문지기의 두목 된 레위 사람 넷이 긴요한 직분을 맡아 하나님의 전 모든 방과 곳간을 지켰음이라
௨௬தேவாலயத்தின் அறைகள்மேலும் கருவூல அறைகள்மேலும் உள்ள விசாரிக்கும் வேலை லேவியர்களான அந்த நான்கு தலைமைக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
27 저희는 하나님의 전을 맡은 직분이 있으므로 전 사면에 유하며 아침마다 문을 여는 책임이 있었더라
௨௭காவல் அவர்களுக்கு ஒப்படைத்திருந்ததால் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றிலும் இரவு தங்கியிருந்து, காலையில் கதவுகளைத் திறந்துவிடுவார்கள்.
28 그 중에 어떤 자는 섬기는데 쓰는 기명을 맡아서 그 수효대로 들여가고 수효대로 내어오며
௨௮அவர்களில் சிலரிடத்தில் ஆராதனை பொருட்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தது; அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டுவருவார்கள்.
29 또 어떤 자는 성소의 기구와 모든 기명과 고운 가루와 포도주와 기름과 유향과 향품을 맡았으며
௨௯அவர்களில் சிலர் மற்றப் பொருட்களின்மேலும், பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மாவு, திராட்சைரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப் பொருட்களின்மேலும் விசாரணைக்காரர்களாக இருந்தார்கள்.
30 또 제사장의 아들 중에 어떤 자는 향품으로 향기름을 만들었으며
௩0ஆசாரியர்களின் மகன்களில் சிலர் நறுமணப் பொருட்களால் பரிமளதைலம் இறக்குவார்கள்.
31 고라 자손 살룸의 장자 맛디댜라 하는 레위 사람은 남비에 지지는 것을 맡았으며
௩௧லேவியர்களில் கோராகியனான சல்லூமின் மூத்த மகனாகிய மத்தித்தியாவுக்குப் பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
32 또 그 형제 그핫 자손 중에 어떤 자는 진설하는 떡을 맡아 안식일마다 준비하였더라
௩௨அவர்கள் சகோதரர்களாகிய கோகாத்தியர்களின் மகன்களில் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் சமுகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.
33 또 찬송하는 자가 있으니 곧 레위 족장이라 저희가 골방에 거하여 주야로 자기 직분에 골몰하므로 다른 일은 하지 아니하였더라
௩௩இவர்களில் லேவியர்களுடைய குடும்பத்தலைவர்களாகிய சங்கீதக்காரர்கள் இரவும் பகலும் தங்களுடைய வேலையை நடத்தவேண்டியதிருந்ததால், மற்ற வேலைக்கு நீங்கலாகித் தங்களுடைய அறைகளில் இருந்தார்கள்.
34 이상은 대대로 레위의 족장이요 으뜸이라 예루살렘에 거하였더라
௩௪லேவியர்களில் குடும்பத்தலைவர்களாகிய இவர்கள் தங்களுடைய சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்.
35 기브온의 조상 여이엘은 기브온에 거하였으니 그 아내의 이름은 마아가라
௩௫கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
36 그 장자는 압돈이요 다음은 술과 기스와 바알과 넬과 나답과
௩௬அவன் மூத்த மகனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
37 그돌과 아히오와 스가랴와 미글롯이며
௩௭கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்களுமே.
38 미글롯은 시므암을 낳았으니 이 무리도 그 형제로 더불어 서로 대하여 예루살렘에 거하였더라
௩௮மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலிருக்கிற தங்களுடைய சகோதரர்களுக்கு சமீபத்தில் குடியிருந்தார்கள்.
39 넬은 기스를 낳았고 기스는 사울을 낳았고 사울은 요나단과 말기수아와 아비나답과 에스바알을 낳았으며
௩௯நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
40 요나단의 아들은 므립바알이라 므립바알이 미가를 낳았고
௪0யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
41 미가의 아들들은 비돈과 멜렉과 다레아와 아하스며
௪௧மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
42 아하스는 야라를 낳았고 야라는 알레멧과 아스마웹과 시므리를 낳았고 시므리는 모사를 낳았고
௪௨ஆகாஸ் யாராகைப் பெற்றான்; யாராக் அலமேத்தையும், அஸ்மவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
43 모사는 비느아를 낳았으며 비느아의 아들은 르바야요 그 아들은 엘르아사요 그 아들은 아셀이며
௪௩மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பாயா; இவனுடைய மகன் எலியாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
44 아셀이 여섯 아들이 있으니 그 이름은 아스리감과 보그루와 이스마엘과 스아랴와 오바댜와 하난이라 아셀의 아들들이 이러하였더라
௪௪ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்களுடைய பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான், இவர்கள் ஆத்சேலின் மகன்கள்.

< 역대상 9 >