< 시편 24 >

1 (다윗의 시) 땅과 거기 충만한 것과 세계와 그 중에 거하는 자가 다 여호와의 것이로다
தாவீதின் சங்கீதம். பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் யெகோவாவினுடையவை, உலகமும் அதில் வாழும் அனைவரும் அவருடையவர்கள்.
2 여호와께서 그 터를 바다 위에 세우심이여 강들 위에 건설하셨도다
ஏனென்றால் அவர் பூமியைக் கடலின்மேல் நிறுவி, தண்ணீரின்மேல் நிலைநிறுத்தினார்.
3 여호와의 산에 오를 자 누구며 그 거룩한 곳에 설 자가 누군고
யெகோவாவினுடைய மலையில் ஏறத்தகுந்தவன் யார்? அவருடைய பரிசுத்த இடத்தில் நிற்கத் தகுந்தவன் யார்?
4 곧 손이 깨끗하며 마음이 청결하며 뜻을 허탄한 데 두지 아니하며 거짓 맹세치 아니하는 자로다
சுத்தமான கைகளுடையவனும் தூய்மையான இருதயமுடையவனும் தன் ஆத்துமாவை பொய்யானவைகளுக்கு ஒப்புக்கொடாதவனும் பொய் சத்தியம் செய்யாதவனுமே.
5 저는 여호와께 복을 받고 구원의 하나님께 의를 얻으리니
அவர்கள் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவார்கள், தங்கள் இரட்சகரான இறைவனால் நியாயத்தைப் பெறுவார்கள்.
6 이는 여호와를 찾는 족속이요 야곱의 하나님의 얼굴을 구하는 자로다 (셀라)
அவரைத் தேடுகிறவர்களின் சந்ததி இப்படிப்பட்டதே, யாக்கோபின் இறைவனே, உமது முகத்தைத் தேடுகிறவர்கள் இவர்களே.
7 문들아 너희 머리를 들지어다! 영원한 문들아 들릴지어다! 영광의 왕이 들어 가시리로다
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; பூர்வீகக் கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்; மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள்.
8 영광의 왕이 뉘시뇨 강하고 능한 여호와시요 전쟁에 능한 여호와시로다
இந்த மகிமையின் அரசன் யார்? அவர் பலமும் வலிமையும் உள்ள யெகோவா, அவர் போரில் வல்லமையுள்ள யெகோவா.
9 문들아 너희 머리를 들지어다! 영원한 문들아 들릴지어다! 영광의 왕이 들어 가시리로다
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; பூர்வீக கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்; மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள்.
10 영광의 왕이 뉘시뇨 만군의 여호와께서 곧 영광의 왕이시로다 (셀라)
மகிமையின் அரசனான இவர் யார்? அவர் சேனைகளின் யெகோவா; அவரே மகிமையின் அரசன்.

< 시편 24 >