< 시편 111 >
1 할렐루야! 내가 정직한 자의 회와 공회 중에서 전심으로 여호와께 감사하리로다
அல்லேலூயா, நீதிமான்களின் கூட்டத்திலும் சபையிலும் நான் முழு இருதயத்தோடும் யெகோவாவைப் புகழ்வேன்.
2 여호와의 행사가 크시니 이를 즐거워하는 자가 다 연구하는도다
யெகோவாவின் செயல்கள் மகத்தானவை; அவைகளால் மகிழ்ச்சியடையும் எல்லோராலும் அவை சிந்திக்கப்படுகின்றன.
3 그 행사가 존귀하고 엄위하며 그 의가 영원히 있도다
அவருடைய செயல்கள் மகிமையும், மகத்துவமுமானவை; அவருடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது.
4 그 기이한 일을 사람으로 기억케 하셨으니 여호와는 은혜로우시고 자비하시도다
அவர் தமது அதிசய செயல்களை நமது நினைவை விட்டு விலகாதபடிச் செய்திருக்கிறார்; யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவராய் இருக்கிறார்.
5 여호와께서 자기를 경외하는 자에게 양식을 주시며 그 언약을 영원히 기억하시리로다
அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்; அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் வைத்திருக்கிறார்.
6 저가 자기 백성에게 열방을 기업으로 주사 그 행사의 능을 저희에게 보이셨도다
அவர் பிற நாடுகளைத் தம் மக்களுக்குக் கொடுத்து, தமது வல்லமையை அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார்.
7 그 손의 행사는 진실과 공의며 그 법도는 다 확실하니
அவருடைய கரங்களின் செயல்கள் உண்மையும் நீதியுமானவை; அவருடைய ஒழுங்குவிதிகள் அனைத்தும் நம்பத்தகுந்தவை.
8 영원 무궁히 정하신 바요 진실과 정의로 행하신 바로다
அவை என்றென்றும் உறுதியானவை; உண்மையுடனும், நேர்மையுடனும் கொடுக்கப்பட்டவை.
9 여호와께서 그 백성에게 구속을 베푸시며 그 언약을 영원히 세우셨으니 그 이름이 거룩하고 지존하시도다
அவர் தமது மக்களுக்கு மீட்பைக் கொடுத்தார்; அவர் தம் உடன்படிக்கையை என்றென்றுமாய் நியமித்திருக்கிறார்; பரிசுத்தமும் மற்றும் பயபக்தி என்பது அவருடைய பெயராயிருக்கிறது.
10 여호와를 경외함이 곧 지혜의 근본이라 그 계명을 지키는 자는 다 좋은 지각이 있나니 여호와를 찬송함이 영원히 있으리로다
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நற்புத்தியுண்டு. நித்தியமான துதி அவருக்கே உரியது.