< Hufore Hu'nea Naneke 8 >
1 Hanki anante Sipisipi anentamo'ma avontafeteti nampa 7ni fukima eri kanopegeno, monafina hafu'a auafi agasasana eritagane'ne.
௧அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரம் வரை அமைதி உண்டானது.
2 Anantera Anumzamofo avuga 7ni'a ankero vahe oti'namokizmia 7ni'a ufe eri nezamizage'na ke'noe.
௨பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையும் பார்த்தேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.
3 Anantera mago ankeromo golire tro hunte'nea zuompa eri'neno kresramna vu itare eme otigeno, Anumzamofo kini tra'mofo avuga golire tro hunte'naza kre sramnavu itare Anumzamofo nagamokizmi nunamune erinteno kresramna vanigu rama'a mananentake'zana ami'ne.
௩வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் எல்லாப் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடு அதிகமான தூபவர்க்கம் செலுத்தும்படி அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
4 Hagi mananentake zamofo tevegumo'ene, Anumzamofo naga'mofo nunamumofo mna'amo'a, ankeromofo azampinti marerino Anumzamofo avure vu'ne.
௪அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையில் இருந்து தேவனுக்குமுன்பாக எழும்பியது.
5 Anantera ankeromo'a zuompa erino kre sramnavu itaretira, golire tro hunte'naza zuompafi tevea tagino eri aviteteno, matevuno mopafi atregeno, tusi'a monage nehigeno, kopsina e'nerigeno, imi eri'ne.
௫பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமி அதிர்ச்சியும் உண்டானது.
6 Hanki anantera 7ni'a ankeromo'za 7ni'a ufe erine'za, ufe renaku retro hu'naze.
௬அப்பொழுது, ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.
7 Ese ankeromo uferegeno, komopa ko'ene korane tevea eri havia hu'neana, zamagra mopafi matevu'za atrazageno, tagufa kevufintira, mago kevu mopamo'a teveregeno, tagufa kevu zafafintira, mago kevu zafamo'za teverazageno, maka zafa sinage tra'zamo'za tevere'naze.
௭முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தம் கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றில் ஒரு பங்கு வெந்துபோனது, பசும்புல்லெல்லாம் எரிந்துபோனது.
8 Nampa 2 ankeromo ufe regeno, ra agona gnazamo'a teve neregeno hagerimpi mate vuno atregeno, tagufa hageri me'nefintira, mago hagerimo'a koranke higeno,
௮இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோல ஒன்று கடலிலே போடப்பட்டது. அதனால் கடலில் மூன்றில் ஒரு பங்கு இரத்தமாக மாறியது.
9 tagufa kevu hagerimpi zagrami mani'nafintira, mago kevumo'za frizageno, tagufa kevu venterami me'nefintira, mago kevu ventemo'za haviza hu'naze.
௯கடலில் இருந்த உயிருள்ள படைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு மரித்துப்போனது; கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு சேதமானது.
10 Nampa 3 ankeromo'a uferegeno, ra hanafimo monafinti teve taginaku kasagasa hu'za taginefa hiankna tavimo remsa huno atafariramigeno, tagufa kevu tira me'nefinti mago kevu tirante'ene osi tinte'ene kampui tinte'ene takaure'ne.
௧0மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றில் ஒருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.
11 Ana ofumofo agi'a Akahe'ne, hu'za hu'naze. Tagufa kevufinti, mago kevu timo'za akahazageno, rama'a vahe'mo'za ana tina nene'za fri'naze. Na'ankure ana timo'a akahunegeno'e.
௧௧அந்த நட்சத்திரத்திற்கு எட்டி என்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு எட்டியைப்போலக் கசப்பானது; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனிதர்களில் அநேகர் மரித்தார்கள்.
12 Nampa 4 ankeromo'a ufe regeno, zagemofona tagufa kevu refko higeno, ikamofona tagufa kevu refko higeno, tagufa kevu hanafitami me'nefintira, magoke magoke kevuzmia amasagigeno haninki'ne. Mago zage ferumofoma tagufa kevu masama me'nefintira, mago kevu masamo'a hani hu'ne. Hanimo'enena anazanke hu'ne. (Mat 24:29.)
௧௨நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றில் ஒருபங்கும், சந்திரனில் மூன்றில் ஒருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒருபங்கும் சேதமானது, அவைகளில் மூன்றில் ஒரு பங்கு இருள் அடைந்தது; பகலிலும் மூன்றில் ஒரு பங்கு பிரகாசம் இல்லாமல்போனது, இரவிலும் அப்படியே ஆனது.
13 Anantera nege'na antahugeno, mago tumpamo monamofo amu'nompi hareno enevuno, ranke huno anage hu'ne, Kva hiho, kva hiho, mopafima mani'naza vahe'mota hazenke ne-eanki kva hiho. Na'ankure 3'a ankero vahe'mo'za ufena ore'nazanki'za, kofa knafi ufena regahaze!
௧௩பின்பு, ஒரு கழுகு வானத்தின் நடுவிலே பறந்து வருவதைப் பார்த்தேன்; அவன் அதிக சத்தமாக: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதர்களுடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்வதைக்கேட்டேன்.