< 詩篇 141 >
1 ダビデのうた ヱホバよ我なんぢを呼ふ ねがはくは速かにわれにきたりたまへ われ汝をよばふときわが聲に耳をかたぶけたまへ
௧தாவீதின் பாடல். யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு விரைந்துவாரும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும்.
2 われは薫物のごとくにわが祈をみまへにささげ 夕のそなへものの如くにわが手をあげて聖前にささげんことをねがふ
௨என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும்.
3 ヱホバよねがはくはわが口に門守をおきて わがくちびるの戸をまもりたまへ
௩யெகோவாவே, என்னுடைய வாய்க்குக் காவல்வையும்; என்னுடைய உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
4 惡事にわがこころを傾かしめて邪曲をおこなふ者とともに惡きわざにあづからしめ給ふなかれ 又かれらの珍饈をくらはしめたまふなかれ
௪அக்கிரமஞ்செய்கிற மனிதரோடு துன்மார்க்கச் செயல்களை நடப்பிக்கும்படி என்னுடைய இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இசைந்துப்போகச் செய்யாமல் இரும்; அவர்களுடைய ருசியுள்ள உணவுகளில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.
5 義者われをうつとも我はこれを愛しみとしその我をせむるを頭のあぶらとせん わが頭はこれを辭まず かれらが禍害にあふときもわが祈はたえじ
௫நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என்னுடைய தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என்னுடைய தலை அதை நிராகரிப்பதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்செய்வேன்.
6 その審士ははほの崕になげられん かれらわがことばの甘美によりて聴ことをすべし
௬அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலை மேலிருந்து தள்ளப்பட்டுபோகிறபோது, என்னுடைய வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.
7 人つちを耕しうがつがごとく我儕のほねははかの口にちらさる (Sheol )
௭பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. (Sheol )
8 されど主ヱホバよわが目はなほ汝にむかふ 我なんぢに依頼めり ねがはくはわが霊魂をともしきままに捨おきたまなかれ
௮ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும்.
9 我をまもりてかれらがわがためにまうくる羂とよこしまを行ふものの機とをまぬかれしめたまへ
௯அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரர்களின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி பாதுகாத்துக்கொள்ளும்.
10 われは全くのがれん あしきものをおのれの網におちいらしめたまへ
௧0துன்மார்க்கர்கள் தங்களுடைய வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.