< 詩篇 98 >
1 歌 新しき歌を主にむかってうたえ。主はくすしきみわざをなされたからである。その右の手と聖なる腕とは、おのれのために勝利を得られた。
௧பாடல். யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலது கரமும், அவருடைய பரிசுத்த கரமும், வெற்றியை உண்டாக்கினது.
2 主はその勝利を知らせ、その義をもろもろの国民の前にあらわされた。
௨யெகோவா தமது இரட்சிப்பை வெளிப்படுத்தி, தமது நீதியை தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கச்செய்தார்.
3 主はそのいつくしみと、まこととをイスラエルの家にむかって覚えられた。地のもろもろのはては、われらの神の勝利を見た。
௩அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய வெற்றியைக் கண்டது.
4 全地よ、主にむかって喜ばしき声をあげよ。声を放って喜び歌え、ほめうたえ。
௪பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும் யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
5 琴をもって主をほめうたえ。琴と歌の声をもってほめうたえ。
௫சுரமண்டலத்தால் யெகோவாவைப் புகழ்ந்துபாடுங்கள், சுரமண்டலத்தாலும் பாடலின் சத்தத்தாலும் அவரைப் புகழ்ந்துபாடுங்கள்.
6 ラッパと角笛の音をもって王なる主の前に喜ばしき声をあげよ。
௬யெகோவாவாகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்.
7 海とその中に満ちるもの、世界とそのうちに住む者とは鳴りどよめけ。
௭கடலும் அதின் நிறைவும், பூமியும் அதில் உள்ளவர்களும் முழங்குவதாக.
8 大水はその手を打ち、もろもろの山は共に主のみ前に喜び歌え。
௮யெகோவாவுக்கு முன்பாக ஆறுகள் கைதட்டி, மலைகள் ஒன்றாக கெம்பீரித்துப் பாடட்டும்.
9 主は地をさばくために来られるからである。主は義をもって世界をさばき、公平をもってもろもろの民をさばかれる。
௯அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; உலகத்தை நீதியோடும் மக்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.