< 詩篇 75 >

1 聖歌隊の指揮者によって、「滅ぼすな」というしらべにあわせてうたわせたアサフの歌、さんび 神よ、われらはあなたに感謝します。われらは感謝します。われらはあなたのみ名を呼び、あなたのくすしきみわざを語ります。
“அழிக்காதே” என்ற இசையில் வாசிக்கும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம். இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்; உமது பெயர் சமீபமாயிருப்பதால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; மனிதர் உமது அதிசயமான செயல்களைப்பற்றிக் கூறுகிறார்கள்.
2 定まった時が来れば、わたしは公平をもってさばく。
இறைவனோ, “நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு, நீதியாய் நியாயந்தீர்பேன்.
3 地とすべてこれに住むものがよろめくとき、わたしはその柱を堅くする。 (セラ)
பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது; நான் அதின் தூண்களை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வேன்.
4 わたしは、誇る者には「誇るな」と言い、悪しき者には「角をあげるな、
அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும், கொடியவர்களைப் பார்த்து, ‘உங்கள் கொம்பை உயர்த்தாதிருங்கள்’ என்றும் சொல்கிறார்.
5 角を高くあげるな、高慢な態度をもって語るな」と言う。
உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்; தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார்.”
6 上げることは東からでなく、西からでなく、また荒野からでもない。
கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ, அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது.
7 それはさばきを行われる神であって、神はこれを下げ、かれを上げられる。
ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே: அவர் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார்.
8 主の手には杯があって、よく混ぜた酒があわだっている。主がこれを注ぎ出されると、地のすべての悪しき者はこれを一滴も残さずに飲みつくすであろう。
யெகோவாவினுடைய கரத்தில் நியாயத்தீர்ப்பென்னும் காரசாரமான நுரைக்கின்ற திராட்சை இரசம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது; அவர் அதை ஊற்றுகிறார்; பூமியின் கொடியவர்கள் எல்லோரும் அதைக் கடைசிவரைக் குடிக்கிறார்கள்.
9 しかしわたしはとこしえに喜び、ヤコブの神をほめうたいます。
நானோ, இதை எக்காலத்திலும் அறிவிப்பேன்; நான் யாக்கோபின் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
10 悪しき者の角はことごとく切り離されるが正しい者の角はあげられるであろう。
“கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்; ஆனால் நீதிமான்களின் கொம்பாகிய பலத்தை மேலும் உயர்த்துவேன்” என்று இறைவன் சொல்கிறார்.

< 詩篇 75 >