< 詩篇 142 >
1 ダビデがほら穴にいた時によんだマスキールの歌、祈 わたしは声を出して主に呼ばわり、声を出して主に願い求めます。
௧குகையிலிருந்த போது தாவீதின் பாடல், ஜெபம். யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.
2 わたしはみ前にわが嘆きを注ぎ出し、み前にわが悩みをあらわします。
௨அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
3 わが霊のわがうちに消えうせようとする時も、あなたはわが道を知られます。彼らはわたしを捕えようとわたしの行く道にわなを隠しました。
௩என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.
4 わたしは右の方に目を注いで見回したが、わたしに心をとめる者はひとりもありません。わたしには避け所がなく、わたしをかえりみる人はありません。
௪வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலமில்லாமற் போனது; என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.
5 主よ、わたしはあなたに呼ばわります。わたしは言います、「あなたはわが避け所、生ける者の地でわたしの受くべき分です。
௫யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன்.
6 どうか、わが叫びにみこころをとめてください。わたしは、はなはだしく低くされています。わたしを責める者から助け出してください。彼らはわたしにまさって強いのです。
௬என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள்.
7 わたしをひとやから出し、み名に感謝させてください。あなたが豊かにわたしをあしらわれるので、正しい人々はわたしのまわりに集まるでしょう」。
௭உமது பெயரை நான் துதிக்கும்படி, என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவு செய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.