< 詩篇 129 >
1 都もうでの歌 今イスラエルは言え、「彼らはわたしの若い時から、ひどくわたしを悩ました。
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று இஸ்ரயேலர் சொல்லட்டும்;
2 彼らはわたしの若い時から、ひどくわたしを悩ました。しかしわたしに勝つことができなかった。
“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள், ஆனாலும் அவர்களால் என்மேல் வெற்றிகொள்ள முடியவில்லை.
3 耕す者はわたしの背の上をたがやして、そのうねみぞを長くした」と。
உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
4 主は正しくいらせられ、悪しき者のなわを断ち切られた。
ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்; அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்.”
சீயோனை வெறுக்கிற அனைவரும் வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும்.
6 彼らを、育たないさきに枯れる屋根の草のようにしてください。
அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்; அது வளரும் முன்பு வாடிப்போகுமே.
7 これを刈る者はその手に満たず、これをたばねる者はそのふところに満たない。
அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது; அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது.
8 かたわらを過ぎる者は、「主の恵みがあなたの上にあるように。われらは主のみ名によってあなたがたを祝福する」と言わない。
வழிப்போக்கர்கள் அவர்களிடம், “யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்; யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்றும் சொல்லாதிருக்கட்டும்.