< 箴言 知恵の泉 18 >

1 人と交わりをしない者は口実を捜し、すべてのよい考えに激しく反対する。
பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான்.
2 愚かな者は悟ることを喜ばず、ただ自分の意見を言い表わすことを喜ぶ。
மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.
3 悪しき者が来ると、卑しめもまた来る、不名誉が来ると、はずかしめも共にくる。
துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும்.
4 人の口の言葉は深い水のようだ、知恵の泉は、わいて流れる川である。
மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும்.
5 悪しき者をえこひいきすることは良くない、正しい者をさばいて、悪しき者とすることも良くない。
வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல.
6 愚かな者のくちびるは争いを起し、その口はむち打たれることを招く。
மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும்.
7 愚かな者の口は自分の滅びとなり、そのくちびるは自分を捕えるわなとなる。
மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி.
8 人のよしあしをいう者の言葉はおいしい食物のようで、腹の奥にしみこむ。
கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும்.
9 その仕事を怠る者は、滅ぼす者の兄弟である。
தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன்.
10 主の名は堅固なやぐらのようだ、正しい者はその中に走りこんで救を得る。
௧0யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான்.
11 富める者の富はその堅き城である、それは高き城壁のように彼を守る。
௧௧செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும்.
12 人の心の高ぶりは滅びにさきだち、謙遜は栄誉にさきだつ。
௧௨அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
13 事をよく聞かないで答える者は、愚かであって恥をこうむる。
௧௩காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும்.
14 人の心は病苦をも忍ぶ、しかし心の痛むときは、だれがそれに耐えようか。
௧௪மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?
15 さとき者の心は知識を得、知恵ある者の耳は知識を求める。
௧௫புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.
16 人の贈り物は、その人のために道をひらき、また尊い人の前に彼を導く。
௧௬ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.
17 先に訴え出る者は正しいように見える、しかしその訴えられた人が来て、それを調べて、事は明らかになる。
௧௭தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான்.
18 くじは争いをとどめ、かつ強い争い相手の間を決定する。
௧௮சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும்.
19 助けあう兄弟は堅固な城のようだ、しかし争いは、やぐらの貫の木のようだ。
௧௯பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும்.
20 人は自分の言葉の結ぶ実によって、満ち足り、そのくちびるの産物によって自ら飽きる。
௨0அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
21 死と生とは舌に支配される、これを愛する者はその実を食べる。
௨௧மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள்.
22 妻を得る者は、良き物を得る、かつ主から恵みを与えられる。
௨௨மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
23 貧しい者は、あわれみを請い、富める者は、はげしい答をする。
௨௩தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான்.
24 世には友らしい見せかけの友がある、しかし兄弟よりもたのもしい友もある。
௨௪நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்; சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு.

< 箴言 知恵の泉 18 >