< 民数記 12 >

1 モーセはクシの女をめとっていたが、そのクシの女をめとったゆえをもって、ミリアムとアロンはモーセを非難した。
எத்தியோப்பியா தேசத்து பெண்ணை மோசே திருமணம்செய்திருந்தபடியால், மிரியாமும் ஆரோனும் அவன் திருமணம்செய்த எத்தியோப்பியா தேசத்து பெண்ணினால் அவனுக்கு விரோதமாகப் பேசி:
2 彼らは言った、「主はただモーセによって語られるのか。われわれによっても語られるのではないのか」。主はこれを聞かれた。
“யெகோவா மோசேயைக்கொண்டுமட்டும் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். யெகோவா அதைக் கேட்டார்.
3 モーセはその人となり柔和なこと、地上のすべての人にまさっていた。
மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதர்களிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாக இருந்தான்.
4 そこで、主は突然モーセとアロン、およびミリアムにむかって「あなたがた三人、会見の幕屋に出てきなさい」と言われたので、彼ら三人は出てきたが、
உடனே யெகோவா மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: “நீங்கள் மூன்று பேரும் ஆசரிப்புக்கூடாரத்திற்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள்.
5 主は雲の柱のうちにあって下り、幕屋の入口に立って、アロンとミリアムを呼ばれた。彼らふたりが進み出ると、
யெகோவா மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள்.
6 彼らに言われた、「あなたがたは、いま、わたしの言葉を聞きなさい。あなたがたのうちに、もし、預言者があるならば、主なるわたしは幻をもって、これにわたしを知らせ、また夢をもって、これと語るであろう。
அப்பொழுது அவர்: “என்னுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாக இருந்தால், யெகோவாவாகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடு பேசுவேன்.
7 しかし、わたしのしもべモーセとは、そうではない。彼はわたしの全家に忠信なる者である。
என்னுடைய தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என்னுடைய வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.
8 彼とは、わたしは口ずから語り、明らかに言って、なぞを使わない。彼はまた主の形を見るのである。なぜ、あなたがたはわたしのしもべモーセを恐れず非難するのか」。
நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாக பேசுகிறேன்; அவன் யெகோவாவின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என்னுடைய தாசனாகிய மோசேக்கு விரோதமாகப் பேச, உங்களுக்குப் பயமில்லாமல் போனது என்ன என்றார்.
9 主は彼らにむかい怒りを発して去られた。
யெகோவாவுடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார்.
10 雲が幕屋の上を離れ去った時、ミリアムは、らい病となり、その身は雪のように白くなった。アロンがふり返ってミリアムを見ると、彼女はらい病になっていた。
௧0மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற தொழுநோயாளியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் தொழுநோயாளியாக இருக்கக் கண்டான்.
11 そこで、アロンはモーセに言った、「ああ、わが主よ、わたしたちは愚かなことをして罪を犯しました。どうぞ、その罰をわたしたちに受けさせないでください。
௧௧அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: “ஆ, என்னுடைய ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாகச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாமலிரும்.
12 どうぞ彼女を母の胎から肉が半ば滅びうせて出る死人のようにしないでください」。
௧௨தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாமலிருப்பாளாக” என்றான்.
13 その時モーセは主に呼ばわって言った、「ああ、神よ、どうぞ彼女をいやしてください」。
௧௩அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “என்னுடைய தேவனே. அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.
14 主はモーセに言われた、「彼女の父が彼女の顔につばきしてさえ、彼女は七日のあいだ、恥じて身を隠すではないか。彼女を七日のあいだ、宿営の外で閉じこめておかなければならない。その後、連れもどしてもよい」。
௧௪யெகோவா மோசேயை நோக்கி: “அவளுடைய தகப்பன் அவளுடைய முகத்திலே காறித் துப்பினால், அவள் ஏழுநாட்கள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் முகாமிற்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்றார்.
15 そこでミリアムは七日のあいだ、宿営の外で閉じこめられた。民はミリアムが連れもどされるまでは、道に進まなかった。
௧௫அப்படியே மிரியாம் ஏழு நாட்கள் முகாமிற்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படும்வரை மக்கள் பயணம் செய்யாமலிருந்தார்கள்.
16 その後、民はハゼロテを立って進み、パランの荒野に宿営した。
௧௬பின்பு, மக்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.

< 民数記 12 >