< ネヘミヤ 記 11 >
1 民のつかさたちはエルサレムに住み、その他の民はくじを引いて、十人のうちからひとりずつを、聖都エルサレムに来て住ませ、九人を他の町々に住ませた。
௧மக்களின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற மக்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேர்களில் ஒருவனை எருசலேம் என்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கச்செய்ய சீட்டுகளைப் போட்டார்கள்.
2 またすべてみずから進みでてエルサレムに住むことを申し出た人々は、民はこれを祝福した。
௨ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாகச் சம்மதித்த மனிதர்களையெல்லாம் மக்கள் வாழ்த்தினார்கள்.
3 さてエルサレムに住んだこの州の長たちは次のとおりである。ただしユダの町々ではおのおのその町々にある自分の所有地に住んだ。すなわちイスラエルびと、祭司、レビびと、宮に仕えるしもべ、およびソロモンのしもべであった者たちの子孫である。
௩யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், ஆலயப் பணியாளர்களும், சாலொமோனுடைய வேலைக்காரர்களின் சந்ததிகளும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் சொந்த இடத்திலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர்கள் யாரென்றால்:
4 そしてエルサレムにはユダの子孫およびベニヤミンの子孫のうちのある者たちが住んだ。すなわちユダの子孫ではウジヤの子アタヤで、ウジヤはゼカリヤの子、ゼカリヤはアマリヤの子、アマリヤはシパテヤの子、シパテヤはマハラレルの子、マハラレルはペレヅの子孫である。
௪எருசலேமிலே யூதா சந்ததியர்களில் சிலரும், பென்யமீன் சந்ததியர்களில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா மக்களிலே பேரேசின் சந்ததியில் ஒருவனான மகலாலெயேலின் மகனாகிய செபதியாவின் மகன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்கு மகனான உசியாவின் மகன் அத்தாயாவும்,
5 またバルクの子マアセヤで、バルクはコロホゼの子、コロホゼはハザヤの子、ハザヤはアダヤの子、アダヤはヨヤリブの子、ヨヤリブはゼカリヤの子、ゼカリヤはシロニびとの子である。
௫சீலோனின் மகன் சகரியாவுக்கு மகனாகிய யோயாரிபுக்கு மகனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் மகன் கொல்லோசே பெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே.
6 ペレヅの子孫でエルサレムに住んだ者は合わせて四百六十八人で、みな勇敢な人々である。
௬எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் மகன்களெல்லாம் நானூற்று அறுபத்தெட்டு பலசாலிகளாக இருந்தார்கள்.
7 ベニヤミンの子孫では次のとおりである。すなわちメシュラムの子サルで、メシュラムはヨエデの子、ヨエデはペダヤの子、ペダヤはコラヤの子、コラヤはマアセヤの子、マアセヤはイテエルの子、イテエルはエサヤの子である。
௭பென்யமீன் சந்ததியர்களில் யாரென்றால், சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேதுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் ஈத்தியேலுக்கும், இவன் எஷாயாவுக்கும் மகனானவன்.
8 その次はガバイおよびサライなどで合わせて九百二十八人。
௮அவனுக்குப்பின் கப்பாய், சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுபேர்.
9 ジクリの子ヨエルが彼らの監督である。ハッセヌアの子ユダがその副官として町を治めた。
௯அவர்கள்மேல் கண்காணியான சிக்ரியின் மகன் யோவேலும், பட்டணத்தின்மேல் இரண்டாவது கண்காணியான அசெனூவாவின் மகன் யூதாவுமே.
௧0ஆசாரியர்களில் யோயாரிபின் மகன் யெதாயா, யாகின் என்பவர்களும்,
11 および神の宮のつかさセラヤで、セラヤはヒルキヤの子、ヒルキヤはメシュラムの子、メシュラムはザドクの子、ザドクはメラヨテの子、メラヨテはアヒトブの子である。
௧௧அகிதூபின் மகன் மெராயோத்திற்குப் பிறந்த சாதோக்கின் மகன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளனும்,
12 宮の務をするその兄弟は八百二十二人あり、また、エロハムの子アダヤがある。エロハムはペラリヤの子、ペラリヤはアムジの子、アムジはゼカリヤの子、ゼカリヤはパシホルの子、パシホルはマルキヤの子である。
௧௨ஆலயத்திலே வேலைசெய்கிற அவர்கள் சகோதரர்களாகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் மகன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் மகன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் மகன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,
13 アダヤの兄弟で、氏族の長たる者は二百四十二人あり、またアザリエルの子アマシサイがある。アザリエルはアハザイの子、アハザイはメシレモテの子、メシレモテはインメルの子である。
௧௩குடும்பத்தலைவர்களாகிய அவனுடைய சகோதரர்கள் இருநூற்று நாற்பத்திரண்டுபேர்களும், இம்மேரின் மகன் மெசில்லேமோத்தின் மகனாகிய அகசாய்க்குப் பிறந்த அசரெயேலின் மகன் அமாசாயும்,
14 その兄弟である勇士は百二十八人あり、その監督はハッゲドリムの子ザブデエルである。
௧௪அவர்களுடைய சகோதரர்களாகிய பலசாலிகள் நூற்று இருபத்தெட்டுபேருமே; இவர்கள்மேல் அகெதோலிமின் மகன் சப்தியேல் கண்காணியாக இருந்தான்.
15 レビびとではハシュブの子シマヤで、ハシュブはアズリカムの子、アズリカムはハシャビヤの子、ハシャビヤはブンニの子である。
௧௫லேவியர்களிலே புன்னியின் மகன் அசபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் மகனான அசூபின் மகன் செமாயாவும்,
16 またシャベタイおよびヨザバデがある。これらはレビびとのかしらであって、神の宮の外のわざをつかさどった。
௧௬தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியர்களின் தலைவர்களிலே சப்பேதாயியும், யோசபாத்தும்,
17 またミカの子マッタニヤがある。ミカはザブデの子、ザブデはアサフの子である。マッタニヤは祈の時に感謝の言葉を唱え始める者である。その兄弟のうちのバクブキヤは彼に次ぐ者であった。またシャンマの子アブダがある。シャンマはガラルの子、ガラルはエドトンの子である。
௧௭ஆசாபின் மகன் சப்தியின் மகனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவனுடைய சகோதரர்களில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் மகன் காலாவின் மகனாகிய சம்முவாவின் மகன் அப்தாவுமே.
18 聖都におるレビびとは合わせて二百八十四人であった。
௧௮பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர்கள் அனைவரும் இருநூற்று எண்பத்துநான்குபேர்.
19 門衛では門を守るアックブ、タルモンおよびその兄弟たち合わせて百七十二人である。
௧௯வாசல் காவலாளர்கள் அக்கூபும், தல்மோனும், வாசல்களில் காவல்காக்கிற அவர்களுடைய சகோதரர்களும் நூற்று எழுபத்திரண்டுபேர்.
20 その他のイスラエルびと、祭司、レビびとたちは皆ユダのすべての町々にあって、おのおの自分の嗣業にとどまった。
௨0மற்ற இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், யூதாவின் எல்லா பட்டணங்களிலும் இருந்தார்கள்.
21 ただし宮に仕えるしもべたちはオペルに住み、ヂハおよびギシパが宮に仕えるしもべたちを監督していた。
௨௧ஆலய பணியாளர்கள் ஓபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.
22 エルサレムにおるレビびとの監督はウジである。ウジはバニの子、バニはハシャビヤの子、ハシャビヤはマッタニヤの子、マッタニヤはミカの子である。ミカは歌うたう者なるアサフの子孫である。ウジは神の宮のわざを監督した。
௨௨எருசலேமிலிருக்கிற லேவியர்களின் தலைமை அதிகாரி மீகாவின் மகன் மத்தனியாவின் மகனாகிய அஷபியாவுக்குப் பிறந்த பானியின் மகன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்திற்கு நிற்கிற பாடகர்களாகிய ஆசாபின் மகன்களில் ஒருவன்.
23 彼らについては王からの命令があって、歌うたう者に日々の定まった分を与えさせた。
௨௩பாடகர்களாகிய அவர்களுக்காக தினக்கூலி கொடுக்க ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது.
24 またユダの子ゼラの子孫であるメシザベルの子ペタヒヤは王の手に属して民に関するすべての事を取り扱った。
௨௪யூதாவின் மகனாகிய சேராக்கின் சந்ததியர்களில் மெசெசாபெயேலின் மகன் பெத்தகியா மக்களின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் முன்பு நின்றான்.
25 また村々とその田畑については、ユダの子孫の者はキリアテ・アルバとその村々、デボンとその村々、エカブジエルとその村々に住み、
௨௫தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் மக்களில் சிலர் கீரியாத் அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்,
௨௬யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும்,
27 ハザル・シュアルおよびベエルシバとその村々に住み、
௨௭ஆசார்சூவாவிலும், பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும்,
௨௮சிக்லாகிலும், மேகோனாகிலும் அதின் கிராமங்களிலும்,
௨௯என்ரிம்மோனிலும், சோரியாவிலும், யர்மூத்திலும்,
30 ザノア、アドラムおよびそれらの村々、ラキシとその田野、アゼカとその村々に住んだ。こうして彼らはベエルシバからヒンノムの谷にまで宿営した。
௩0சானோவாகிலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா துவங்கி இன்னோமின் பள்ளத்தாக்குவரை குடியேறினார்கள்.
31 ベニヤミンの子孫はまたゲバからミクマシ、アヤおよびベテルとその村々に住み、
௩௧கேபாவின் ஊரைச்சேர்ந்த பென்யமீன் மக்கள், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும்,
௩௩ஆத்சோர், ராமா, கித்தாயிம்,
௩௪ஆதீத், செபோயிம், நெபலாத்,
௩௫லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள்.
36 レビびとの組のユダにあるもののうちベニヤミンに合したものもあった。
௩௬லேவியர்களிலே சிலர் யூதாவிலும், சிலர் பென்யமீனிலும் இருந்தார்கள்.