< エレミヤ書 16 >
௧யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 「あなたはこの所で妻をめとってはならない。またむすこ娘を持ってはならない。
௨நீ பெண்ணைத் திருமணம் செய்யவேண்டாம்; இவ்விடத்தில் உனக்கு மகன்களும் மகள்களும் இருக்கவேண்டாம் என்றார்.
3 この所で生れるむすこ娘と、この地でこれを産む母たちと、これを生む父たちとについて主はこう言われる、
௩இவ்விடத்தில் பிறக்கிற மகன்களையும் மகள்களையும், இந்தத் தேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற தகப்பன்களையும் குறித்துக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்,
4 彼らは死の病にかかって死に、哀悼する者もなく、埋葬する者もなく、地のおもてに、糞土のようになる。またつるぎと、ききんに滅ぼされて、その死体は空の鳥と地の獣の食い物となる。
௪மகா கொடிய வியாதிகளால் இறப்பார்கள், அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்செய்வாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் இறந்து போவார்கள்; அவர்களுடைய உடல் வானத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
5 主はこう言われる、喪のある家に、はいってはならない。また行って、それを悲しみ嘆いてはならない。わたしがこの民からわたしの平安と、いつくしみと、あわれみとを取り去ったからであると、主は言われる。
௫ஆகையால், நீ துக்கவீட்டில் நுழையாமலும், புலம்புவதற்க்குப்போகாமலும் அவர்களுக்கு பரிதாபப்படாமலும் இருப்பாயாக என்று யெகோவா சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த மக்களைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
6 大いなる者も小さき者も、この地に死ぬ。彼らは葬られず、また彼らのために悲しむ者もなく、自分の身を傷つける者もなく、髪をそる者もない。
௬இந்த தேசத்தில் பெரியோரும் சிறியோரும் இறப்பார்கள்; அவர்களை அடக்கம்செய்வாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்களுக்காக கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.
7 悲しむ者のためにパンをさいて、死者のためにこれを慰める者はなく、また父あるいは母のために慰めの杯をこれに与えて飲ませる者もない。
௭இறந்தவர்களுக்காக ஏற்படுகிற துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு ஆகாரம் பரிமாறப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவோ, ஒருவனுடைய தாய்க்காவோ துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.
8 またあなたは宴会をする家にはいって、人々と共にすわって食い飲みしてはならない。
௮நீ அவர்களுடன் அமர்ந்து சாப்பிட விருந்துவீட்டிலும் நுழையாதே.
9 万軍の主、イスラエルの神はこう言われる、見よ、あなたの目の前で、あなたのなおこの世にいる間に、わたしは喜びの声と楽しみの声、花婿の声と花嫁の声とをこの所に絶やしてしまう。
௯ஏனெனில், இதோ, இவ்விடத்தில் நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணமகனின் சத்தத்தையும், மணமகளின் சத்தத்தையும் ஓயச்செய்வேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
10 あなたがこのすべての言葉をこの民に告げるとき、彼らがあなたに尋ねて、『主がわれわれにこの大きな災を宣告されるのはどうしてですか。われわれにどんな悪い所があるのですか。われわれの神、主にそむいて、われわれが犯した罪とはなんですか』と言うならば、
௧0நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த மக்களுக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: யெகோவா எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கை ஏன் சொல்லவேண்டும் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகச் செய்த எங்கள் பாவம் என்ன என்றும் கேட்பார்களானால்,
11 あなたは彼らに答えなければならない、『主は仰せられる、それはあなたがたの先祖がわたしを捨てて他の神々に従い、これに仕え、これを拝し、またわたしを捨て、わたしの律法を守らなかったからである。
௧௧நீ அவர்களை நோக்கி: உங்கள் முற்பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதெய்வங்களைப் பின்பற்றி, அவர்களை வணங்கி, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே.
12 あなたがたは、あなたがたの先祖よりも、いっそう悪いことをした。見よ、あなたがたはおのおの自分の悪い強情な心に従い、わたしに聞き従うことはしない。
௧௨நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப் பார்க்கிலும் அதிகக் கேடாக நடந்தீர்களே; இதோ, உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக்கேளாமல், உங்கள் பொல்லாத இருதயக் கடினத்தின்படி நடக்கிறீர்கள்.
13 それゆえ、わたしはあなたがたをこの地より追い出し、あなたがたも、あなたがたの先祖も知らない地に行かせる。その所であなたがたは昼夜、ほかの神々に仕えるようになる。これはわたしがあなたがたにあわれみを示さないからである』と。
௧௩ஆகவே, உங்களை இந்தத் தேசத்திலிருந்து நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நிய தெய்வங்களை வணங்குவீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.
14 主は言われる、それゆえ、見よ、こののち『イスラエルの民をエジプトの地から導き出した主は生きておられる』とは言わないで、
௧௪ஆகவே, இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்த யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம் செய்யாமல்,
15 『イスラエルの民を北の国と、そのすべて追いやられた国々から導き出した主は生きておられる』という日がくる。わたしが彼らを、その先祖に与えた彼らの地に導きかえすからである。
௧௫இஸ்ரவேல் மக்களை வடதேசத்திலும், தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரவழைத்த யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்செய்வார்கள்; நான் அவர்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்திற்கு அவர்களைத் திரும்பிவரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
16 主は言われる、見よ、わたしは多くの漁夫を呼んできて、彼らをすなどらせ、また、そののち多くの猟師を呼んできて、もろもろの山、もろもろの丘、および岩の裂け目から彼らをかり出させる。
௧௬இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக் குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.
17 わたしの目は彼らのすべての道を見ているからである。みなわたしに隠れてはいない。またその悪はわたしの目に隠れることはない。
௧௭என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்திற்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை; அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.
18 わたしはその悪とその罪の報いを二倍にする。彼らがその忌むべき偶像の死体をもって、わたしの地を汚し、その憎むべきものをもって、わたしの嗣業を満たしたからである」。
௧௮முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்திற்கும், அவர்களுடைய பாவத்திற்கும் இரட்டிப்பாக நீதி செய்வேன்; அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் பங்கைச் சீயென்று அருவருக்குமளவுக்கு தங்கள் காரியங்களின் அசுத்தமான விக்கிரகங்களினால் நிரப்பினார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
19 主、わが力、わが城、悩みの時の、のがれ場よ、万国の民は地の果からあなたのもとにきて申します、「われわれの先祖が受け嗣いだのは、ただ偽りと、役に立たないつまらない事ばかりです。
௧௯என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய யெகோவாவே, அந்நியமக்கள் பூமியின் கடைசிமுனைகளிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் முற்பிதாக்கள் பிரயோஜனமில்லாத வீணான விக்கிரங்களைக் கைப்பற்றினார்கள் என்பார்கள்.
20 人が自分で神々を造ることができましょうか。そういうものは神ではありません」。
௨0மனிதன் தனக்குத் தெய்வங்களை உண்டாக்கலாமோ? அவைகள் தெய்வங்கள் அல்லவே.
21 「それゆえ、見よ、わたしは彼らに知らせよう。すなわち、この際わたしの力と、わたしの勢いとを知らせよう。彼らはわたしの名が、主であることを知るようになる」。
௨௧ஆதலால் இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியவைப்பேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரிவிப்பேன்; என் பெயர் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.