< エゼキエル書 16 >

1 主の言葉が再びわたしに臨んだ、
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 「人の子よ、エルサレムにその憎むべき事どもを示して、
மனிதகுமாரனே, நீ எருசலேமின் அருவருப்புகளை அதற்கு அறிவித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
3 言え。主なる神はエルサレムにこう言われる、あなたの起り、あなたの生れはカナンびとの地である。あなたの父はアモリびと、あなたの母はヘテびとである。
யெகோவாகிய ஆண்டவர் எருசலேமுக்குச் சொல்லுகிறார், கானான் தேசமே உன்னுடைய உற்பத்திக்கும், பிறப்புக்கும் இடம், உன்னுடைய தகப்பன் எமோரியன், தாய் ஏத்தித்தி.
4 あなたの生れについていえば、その生れた日に、へその緒は切られず、水で洗い清められず、塩でこすられず、また布で包まれなかった。
உன்னுடைய பிறப்பின் சம்பவம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன்னுடைய தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை.
5 ひとりもあなたをあわれみ見る者なく、情をもってこれらのことの一つをも、あなたにしてやる者もなく、あなたの生れた日に、あなたはきらわれて、野原に捨てられた。
உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றைகூட உனக்குச் செய்ய ஒரு கண்ணும் உன்மேல் இரக்கமாக இருந்ததுமில்லை; நீ பிறந்த நாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய்.
6 わたしはあなたのかたわらを通り、あなたが血の中にころがりまわっているのを見た時、わたしは血の中にいるあなたに言った、『生きよ、
நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாக நீ உன்னுடைய இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன்னுடைய இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன்னுடைய இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன்.
7 野の木のように育て』と。すなわちあなたは成長して大きくなり、一人前の女になり、その乳ぶさは形が整い、髪は長くなったが、着物がなく、裸であった。
உன்னை வயலின் பயிரைப்போல அநேகமாயிரமாகப் பெருகும்படி வைத்தேன்; நீ வளர்ந்து பெரியவளாகி, மகா செளந்தரியவதியானாய்; உன்னுடைய மார்பகங்கள் எழும்பின, உன்னுடைய முடி வளர்ந்தது; ஆனாலும், நீ நிர்வாணமும் உடையற்றவளுமாக இருந்தாய்.
8 わたしは再びあなたのかたわらをとおって、あなたを見たが、見よ、あなたは愛せられる年齢に達していたので、わたしは着物のすそであなたをおおい、あなたの裸をかくし、そしてあなたに誓い、あなたと契約を結んだ。そしてあなたはわたしのものとなったと、主なる神は言われる。
நான் உன் அருகே கடந்துபோனபோது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன்னுடைய காலம் பருவகாலமாக இருந்தது; அப்பொழுது என்னுடைய ஆடையை உன்மேல் விரித்து, உன்னுடைய நிர்வாணத்தை மூடி, உனக்கு வாக்குக்கொடுத்து, உன்னுடன் உடன்படிக்கைசெய்தேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இந்த விதமாக நீ என்னுடையவளாக ஆனாய்.
9 そこでわたしは水であなたを洗い、あなたの血を洗い落して油を塗り、
நான் உன்னைத் தண்ணீரால் கழுவி, உன்னை இரத்தம் நீங்க குளிக்கவைத்து, உனக்கு எண்ணெய் பூசி,
10 縫い取りした着物を着せ、皮のくつをはかせ、細布をかぶらせ、絹のきれであなたをおおった。
௧0சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, வண்ணம் தீட்டப்பட்ட காலணிகளை உனக்கு அணிவித்து, உடுத்த மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச்சால்வையையும் உனக்குக் கொடுத்து,
11 また飾り物であなたを飾り、腕輪をあなたの手にはめ、鎖をあなたの首にかけ、
௧௧உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன்னுடைய கைகளிலே கடகங்களையும், உன்னுடைய கழுத்திலே சங்கிலியையும் போட்டு,
12 鼻には鼻輪、耳には耳輪、頭には美しい冠を与えた。
௧௨உன்னுடைய நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன்னுடைய காதுகளில் காதணியையும், உன்னுடைய தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் அணிவித்தேன்.
13 このようにあなたは金銀で飾られ、細布、絹、縫い取りの服をあなたの衣とし、麦粉と、蜜と、油とを食べた。あなたは非常に美しくなって王の地位に進み、
௧௩இந்தவிதமாக பொன்னினாலும் வெள்ளியினாலும் நீ அலங்கரிக்கப்பட்டாய்; உன்னுடைய உடை மெல்லிய புடவையும், பட்டும், சித்திரத்தையலாடையுமாக இருந்தது; மெல்லிய மாவையும் தேனையும் நெய்யையும் சாப்பிட்டாய்; நீ மிகவும் அழகுள்ளவளாகி, மற்ற தேசங்களை சொந்தமாக்கும் வாய்ப்பையும் பெற்றாய்.
14 あなたの美しさのために、あなたの名声は国々に広まった。これはわたしが、あなたに施した飾りによって全うされたからであると、主なる神は言われる。
௧௪உன்னுடைய அழகினாலே உன்னுடைய புகழ் அந்நியதேசங்களுக்குள்ளே பிரபலமாயிற்று; நான் உன்மேல் வைத்த என்னுடைய மகிமையினாலே அது குறைவற்றதாக இருந்ததென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15 ところが、あなたは自分の美しさをたのみ、自分の名声によって姦淫を行い、すべてかたわらを通る者と、ほしいままに姦淫を行った。
௧௫நீயோவென்றால் உன்னுடைய அழகை நம்பி, உன்னுடைய புகழ்ச்சியால் துன்மார்க்க வழியிலே நடந்து, வழிப்போக்கர்களில் உனக்கு எதிர்பட்ட எல்லோரோடும் வேசித்தனம்செய்து,
16 あなたは自分の衣をとって、自分のために、はなやかに色どった聖所を造り、その上で姦淫を行っている。こんなことはかつてなかったこと、またあってはならないことである。
௧௬உன்னுடைய ஆடைகளில் சிலவற்றை எடுத்து, பலவர்ண அலங்கரிப்புள்ள மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்செய்தாய்; அதைப்போன்ற காரியங்கள் ஒருபோதும் நடந்ததுமில்லை, நடக்கப்போவதுமில்லை.
17 あなたはわたしが与えた金銀の美しい飾りの品をとり、自分のために男の像を造って、これと姦淫を行った。
௧௭நான் உனக்குக் கொடுத்த என்னுடைய பொன்னும், வெள்ளியுமான உன்னுடைய அலங்கார ஆபரணங்களை நீ எடுத்து, உனக்கு ஆண் உருவங்களை உண்டாக்கி, அவைகளுடன் வேசித்தனம்செய்து,
18 また縫い取りのある自分の衣をとって彼らに着せ、わたしの油と香とをその前に供え、
௧௮உன்னுடைய சித்திரத்தையலாடைகளை எடுத்து, அவைகளை மூடி, என்னுடைய எண்ணெயையும் என்னுடைய தூபவர்க்கத்தையும் அவைகளின் முன்பாக படைத்து,
19 またわたしがあなたに与えたパン、わたしがあなたを養うための麦粉、油および蜜を、こうばしきかおりとして彼らの前に供えたと、主なる神は言われる。
௧௯நான் உனக்குக் கொடுத்த என்னுடைய அப்பத்தையும், நீ சாப்பிடும்படி உனக்குக் கொடுத்த மெல்லிய மாவையும் நெய்யையும் தேனையும் நீ அவைகளின்முன்பு சுகந்த வாசனையாகப் படைத்தாய்; காரியம் இப்படி ஆனதென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
20 あなたはまた、あなたがわたしに産んだむすこ、娘たちをとって、その像に供え、彼らに食わせた。このようなあなたの姦淫は小さい事であろうか。
௨0நீ எனக்குப் பெற்ற உன்னுடைய மகனையும் உன்னுடைய மகள்களையும் எடுத்து, அவர்களை அவைகளுக்கு இரையாகப் பலியிட்டாய்.
21 あなたはわたしの子どもを殺し、火の中を通らせて彼らにささげた。
௨௧நீ செய்த வேசித்தனங்கள் போதாதென்று, நீ என்னுடைய பிள்ளைகளை அவைகளுக்குத் தீயில் அடக்கம்செய்ய ஒப்புக்கொடுத்து, அவர்களைக் கொலைசெய்தாய்.
22 あなたがそのすべての憎むべきことや姦淫を行うに当って、あなたが衣もなく、裸で、血の中にころがりまわっていた自分の若き日のことを思わなかった。
௨௨நீ உன்னுடைய எல்லா அருவருப்புகளிலும் வேசித்தனங்களிலும் நடக்கும்போது, நிர்வாணமும் உடையில்லாமலும் இருந்ததும், உன்னுடைய இரத்தத்திலே மிதிக்கப்பட ஏதுவாக இருந்ததுமான உன்னுடைய சிறுவயதின் நாட்களை நினையாமற்போனாய்.
23 あなたがもろもろの悪を行った後、(あなたはわざわいだ、わざわいだと、主なる神は言われる)
௨௩ஐயோ, உனக்கு ஐயோ, என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ செய்த பொல்லாப்புகளெல்லாம் தவிர,
24 あなたは自分のために高楼を建て、広場、広場に台を造り、
௨௪நீ உனக்கு மண்டபங்களைக் கட்டி, உனக்குச் எல்லா வீதிகளிலும் உயர்ந்த மேடைகளை உண்டாக்கினாய்.
25 ちまた、ちまたのつじに台を造って、あなたの美しさを汚し、すべてかたわらを通る者に身をまかせて、大いに姦淫を行っている。
௨௫நீ எல்லா வழிமுனையிலும் உன்னுடைய உயர்ந்த மேடைகளைக் கட்டி, உன்னுடைய அழகை அருவருப்பாக்கி, வழிப்போக்கர்கள் யாவருக்கும் உன்னுடைய கால்களை விரித்து, உன்னுடைய வேசித்தனங்களைத் திரளாகப் பெருகச்செய்து,
26 あなたはまた、かの肉欲的な隣りエジプトの人々と姦淫を行い、大いに姦淫を行って、わたしを怒らせた。
௨௬சதை பெருத்த உன்னுடைய அயல் தேசத்தாராகிய எகிப்திய மக்களுடன் வேசித்தனம்செய்து, எனக்குக் கோபம் உண்டாக்கும்படி உன்னுடைய வேசித்தனங்களைப் பெருகச்செய்தாய்.
27 それゆえ、わたしはわたしの手をあなたの上に伸べて、あなたの賜わる分を減らし、あなたの敵、すなわち、あなたのみだらな行為を恥じるペリシテびとの娘らの欲のままに、あなたを渡した。
௨௭ஆதலால், இதோ, நான் என்னுடைய கையை உனக்கு எதிராக நீட்டி, உனக்கு நியமித்த உணவை குறைத்து, உன்னுடைய முறைகேடான வழியைக்குறித்து வெட்கப்பட்ட உன்னுடைய பகையாளிகளாகிய பெலிஸ்தர்களுடைய மகள்களின் ஆசைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன்.
28 あなたは飽くことがないので、またアッスリヤの人々と姦淫を行ったが、彼らと姦淫を行っても、なお飽くことがなかった。
௨௮நீ திருப்தியடையாததினால் அசீரியர்களுடனும் வேசித்தனம்செய்தாய்; அவர்களுடன் வேசித்தனம்செய்தும் நீ திருப்தியடையவில்லை.
29 あなたはまたカルデヤの商業地と大いに姦淫を行ったが、これと姦淫を行っても、なお飽くことがなかった。
௨௯நீ கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தைக் கல்தேயர்கள்வரை எட்டச் செய்தாய்; அதினாலும் நீ திருப்தியடையாமற்போனாய்.
30 主なる神は言われる、あなたの心はどんなに恋いわずらうのか。あなたは、これらすべての事を行った。これはあつかましい姦淫のわざである。
௩0வெட்கங்கெட்ட வேசியின் செயல்களாகிய இவைகளையெல்லாம் நீ செய்து,
31 あなたは、ちまた、ちまたのつじに高楼を建て、広場、広場に台を設けたが、価をもらうことをあざけったので、遊女のようではなかった。
௩௧எல்லா வழிமுனையிலும் உன்னுடைய மண்டபங்களைக் கட்டி, எல்லா வீதிகளிலும் உன்னுடைய மேடைகளை உண்டாக்கினபடியால், உன்னுடைய இருதயம் எவ்வளவாகக் களைத்துப்போயிருக்கிறது என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ கட்டணத்தை அலட்சியம் செய்கிறகிறதினால், நீ வேசியைப்போல இல்லாமல்,
32 自分の夫に替えて他人と通じる姦婦よ。
௩௨தன்னுடைய கணவனுக்குப்பதிலாக அந்நியர்களைச் சேர்த்துக்கொள்ளுகிற விபசார பெண்ணைப்போல இருக்கிறாய்.
33 人はすべての遊女に物を与える。しかしあなたはすべての恋人に物を与え、彼らにまいないして、あなたと姦淫するために、四方からあなたの所にこさせる。
௩௩எல்லா வேசிகளுக்கும் கட்டணம் கொடுக்கிறார்கள்; நீயோ உன்னுடைய நேசர்கள் சுற்றுப்புறங்களிலிருந்து உன்னிடத்தில் வேசித்தனம்செய்ய வரும்படி அவர்களுக்கெல்லாம் நீயே கட்டணம் கொடுத்து, அவர்களுக்கு வெகுமதிகளைத் தருகிறாய்.
34 このようにあなたは姦淫を行うに当って、他の女と違っている。すなわち、だれもあなたに姦淫をさせたのではない。あなたはかえって価を払い、相手はあなたに払わない。これがあなたの違うところである。
௩௪இந்த விதமாக உன்னுடைய வேசித்தனங்களுக்கும் வேறே பெண்களின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்செய்ய அவர்கள் உனக்குப் பின்செல்லமாட்டார்கள்; கட்டணம் உனக்குக் கொடுக்கப்படாமல் நீயே கட்டணம் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம்.
35 それで遊女よ、主の言葉を聞け。
௩௫ஆகையால், வேசியே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்.
36 主なる神はこう言われる、あなたがその恋人と姦淫して、あなたの恥じる所をあらわし、あなたの裸をあらわし、またすべての偶像と、あなたが彼らにささげたあなたの子どもらの血のゆえに、
௩௬யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உன்னுடைய வேசித்தனத்தின் அசுத்தம் பாய்ந்தபடியினாலும், நீ உன்னுடைய காமவிகாரிகளோடும் அருவருப்பாகிய உன்னுடைய அசுத்தமான சிலைகளோடும் வேசித்தனம்செய்து, இவைகளுக்கு உன்னுடைய பிள்ளைகளின் இரத்தத்தைப் படைத்ததினால் உன்னுடைய நிர்வாணம் திறக்கப்பட்டபடியினாலும்,
37 見よ、わたしはあなたと遊んだあなたのすべての恋人、およびすべてあなたが恋した者と、すべてあなたが憎んだ者とを集め、四方から彼らをあなたの所に集めて、あなたの裸を彼らにあらわす。彼らはあなたの裸を、ことごとく見る。
௩௭இதோ, நீ உடலுறவுகொண்ட உன்னுடைய எல்லாக் காமவிகாரிகளையும், நீ நேசித்த யாவரையும், நீ பகைத்திருக்கிற அனைவரோடும் நான் கூடிவரச்செய்து, சுற்றிலுமிருந்து அவர்களை உனக்கு எதிராக சேர்த்து, அவர்கள் உன்னுடைய நிர்வாணத்தையெல்லாம் காணும்படி உன்னுடைய நிர்வாணத்தை அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்து,
38 わたしは姦淫を行った女と、血を流した女がさばかれるように、あなたをさばき、憤りと、ねたみの血とを、あなたに注ぐ。
௩௮விபசாரிகளையும் இரத்தம் சிந்தினவர்களையும் நியாயந்தீர்க்கிறபடியே உன்னை நியாயந்தீர்த்து, கடுங்கோபத்தோடும் எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்மேல் சுமத்தி,
39 わたしはあなたを恋人の手に渡す。彼らはあなたの高楼を倒し、台をこわし、あなたの衣をはぎ取り、あなたの美しい飾りの品を奪い、あなたを衣服のない裸者にする。
௩௯உன்னை அவர்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் உன்னுடைய மண்டபங்களை இடித்து, உன்னுடைய மேடைகளைத் தரையாக்கிப்போட்டு, உன்னுடைய உடைகளை அவிழ்த்து, உன்னுடைய சிங்கார ஆபரணங்களை எடுத்துக்கொண்டு, உன்னை உடையில்லாமலும் நிர்வாணமுமாக விட்டுப்போய்,
40 彼らは民衆をかり立ててあなたを攻め、石であなたを撃ち、つるぎであなたを切り、
௪0உனக்கு எதிராக ஒரு கூட்டத்தைக் கொண்டுவந்து, உன்னைக் கல்லெறிந்து, உன்னைத் தங்களுடைய வாள்களால் குத்திபோட்டு,
41 火であなたの家を焼き、多くの女たちの前で、あなたにさばきを行う。こうしてわたしはあなたに淫行をやめさせ、重ねて価を払わせないようにする。
௪௧உன்னுடைய வீடுகளை நெருப்பால் சுட்டெரித்து, அநேக பெண்களின் கண்களுக்கு முன்பாக உனக்கு நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன்னுடைய வேசித்தனத்தை ஒழியச்செய்வேன்; நீ இனிக் கட்டணம் கொடுப்பதில்லை.
42 そしてあなたに対するわが憤りをしずめ、わがねたみをあなたから離し、わたしは心を安んじて、再び怒ることをしない。
௪௨இவ்விதமாக என்னுடைய எரிச்சல் உன்னை விட்டு நீங்கும்படி, நான் என்னுடைய கடுங்கோபத்தை உன்னில் ஆறச்செய்து, இனி கோபமாக இல்லாமல் அமர்வேன்.
43 またあなたはその若き日の事を覚えず、すべてこれらの事をもって、わたしを怒らせたから、見よ、わたしもあなたの行うところをあなたのこうべに報いると、主なる神は言われる。あなたはもろもろの憎むべき事に加えて、このみだらな事をおこなったではないか。
௪௩நீ உன்னுடைய இளவயதின் நாட்களை நினைக்காமல், இவைகள் எல்லாவற்றினாலும் எனக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், இதோ, நான் உன்னுடைய வழியின் பலனை உன்னுடைய தலையின்மேல் சுமரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அதினாலே இனி உன்னுடைய எல்லா அருவருப்புகளினாலும் இப்படிப்பட்ட முறைகேடான காரியத்தைச் செய்யமாட்டாய்.
44 見よ、すべてことわざを用いる者は、あなたについて、『この母にしてこの娘あり』という、ことわざを用いる。
௪௪இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லோரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்துப் பழமொழி சொல்லுவார்கள்.
45 あなたは、その夫と子どもとを捨てたあなたの母の娘、またその夫と子どもとを捨てた姉妹を持っている。あなたの母はヘテびと、あなたの父はアモリびと、
௪௫நீ, தன்னுடைய கணவனையும் தன்னுடைய பிள்ளைகளையும் அருவருத்த உன்னுடைய தாயின் மகள்; நீ, தங்களுடைய கணவன்களையும் பிள்ளைகளையும் அருவருத்த உன்னுடைய சகோதரிகளின் சகோதரி; உங்களுடைய தாய் ஏத்தித்தி; தகப்பன் எமோரியன்.
46 あなたの姉はサマリヤ、サマリヤはその娘たちと共に、あなたの北に住み、あなたの妹はソドムで、その娘たちと共に、あなたの南に住んでいる。
௪௬உன்னுடைய இடதுபுறத்திலே, தானும் தன்னுடைய மகள்களுமாகக் குடியிருந்த சமாரியா உன்னுடைய அக்காள்; உன்னுடைய வலதுபுறத்திலே, தானும் தன்னுடைய மகள்களுமாகக் குடியிருந்த சோதோம் உன்னுடைய தங்கை.
47 あなたは彼らの道を歩まず、彼らの憎むべき事に従っていないが、しばらくすると、あなたのおこないは、彼らよりもさらに悪くなる。
௪௭ஆகிலும் நீ அவர்களுடைய வழிகளிலே நடக்காமலும், அவர்களுடைய அருவருப்புகளின்படி செய்யாமலும், அது மகா அற்பகாரியம் என்கிறதுபோல நீ உன்னுடைய எல்லா வழிகளிலேயும் அவர்களைவிட கேடாக நடந்தாய்.
48 主なる神は言われる、わたしは生きている。あなたの妹ソドムとその娘たちは、あなたとあなたの娘たちがしたほどのことはしなかった。
௪௮நீயும் உன்னுடைய மகள்களும் செய்ததுபோல, உன்னுடைய சகோதரியாகிய சோதோமும் அவளுடைய மகள்களும் செய்யவில்லை என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்கிறார்.
49 見よ、あなたの妹ソドムの罪はこれである。すなわち彼女と、その娘たちは高ぶり、食物に飽き、安泰に暮していたが、彼らは、乏しい者と貧しい者を助けなかった。
௪௯இதோ, கர்வமும், உணவுப்பெருக்கும், அலட்சியமான அக்கறை செலுத்தாதவைகளாகிய இவைகளே உன்னுடைய சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவளுடைய மகள்களிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.
50 彼らは高ぶり、わたしの前に憎むべき事をおこなったので、わたしはそれを見た時、彼らを除いた。
௫0அவர்கள் தங்களை உயர்த்தி, என்னுடைய முகத்திற்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன்.
51 サマリヤはあなたの半分も罪を犯さなかった。あなたは彼らよりも多く憎むべき事をおこない、あなたのおこなったもろもろの憎むべき事によって、あなたの姉妹を義と見せかけた。
௫௧நீ செய்த பாவங்களில் பாதியையும் சமாரியா செய்யவில்லை; நீ உன்னுடைய சகோதரிகளைவிட உன்னுடைய பாவங்களைப் பெருகச்செய்து, நீ செய்த உன்னுடைய எல்லா அருவருப்புகளினாலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கச்செய்தாய்.
52 あなたはその姉妹を有利にさばいたことによって、あなたもまた自分のはずかしめを負わなければならない。それはあなたが彼らよりも、さらに憎むべきことをした罪によって、彼らはあなたよりも義とされるからである。それであなたも恥を受け、はずかしめを負わなければならない。それはあなたがその姉妹を義と見せかけたからである。
௫௨இப்போதும் உன்னுடைய சகோதரிகளைக் குற்றவாளிகள் என்று தீர்த்த நீ அவர்களைவிட அருவருப்பாகச் செய்த உன்னுடைய பாவங்களுக்காக உன்னுடைய வெட்கத்தை சுமந்துகொள்; உன்னைவிட அவர்கள் நீதியுள்ளவர்கள்; உன்னுடைய சகோதரிகளை நீதியுள்ளவர்களென்று விளங்கச்செய்த நீ வெட்கமடைந்து, உன்னுடைய வெட்கத்தை சுமந்துகொள்.
53 わたしは彼らの幸福をもとに返す。すなわちソドムとその娘たちの幸福、サマリヤとその娘たちの幸福、また彼らの中にいるあなたの幸福をもとに返す。
௫௩நான் சோதோமும் அவளுடைய மகள்களும் சிறையிருக்கிற அவர்களுடைய சிறையிருப்பையும், சமாரியாவும் அவளுடைய மகள்களும் சிறையிருக்கிற சிறையிருப்பையும் திருப்பும்போது, அவர்களுடைய நடுவிலே நீ சிறையிருக்கிற உன்னுடைய சிறையிருப்பையும் திருப்புவேன்.
54 これはあなたに自分のはずかしめを負わせるため、またすべてあなたのなした事を恥じさせるためである。こうしてあなたは彼らの慰めとなる。
௫௪அதினால் நீ அவர்களுக்கு ஆறுதலாக இருந்து, உன்னுடைய வெட்கத்தை சுமந்து, நீ செய்த எல்லாவற்றினாலும் வெட்கமடைவாய்.
55 あなたの姉妹ソドムと、その娘たちとは、そのもとの所に帰り、サマリヤと、その娘たちとは、そのもとの所に帰り、あなたと、あなたの娘たちとは、そのもとの所に帰る。
௫௫உன்னுடைய சகோதரிகளாகிய சோதோமும் அவளுடைய மகள்களும் தங்களுடைய முந்தின நிலைக்கு திரும்புவார்கள்; சமாரியாவும் அவளுடைய மகள்களும் தங்களுடைய முந்தின நிலைக்குத் திரும்புவார்கள்; நீயும் உன்னுடைய மகள்களும் உங்களுடைய முந்தின நிலைக்குத் திரும்புவீர்கள்.
56 あなたの高ぶりの日に、あなたの姉妹ソドムは、あなたの口に、ことわざとなったではなかったか。
௫௬உன்னை வெறுக்கும் சீரியாவின் மகள்களும், அவளைச் சுற்றிலும் இருக்கிற பெலிஸ்தர்களின் மகள்களும் அவமானப்படுத்தினபோது உன்னுடைய பொல்லாப்பு வெளியாயிற்றே.
57 すなわちあなたの悪があらわされた時まで、そうではなかったか。しかし今はあなたも彼女と同様に、エドムの娘たちと、すべてその周囲の者、および四方からあなたをあざけるペリシテの娘たちのそしりとなった。
௫௭அதற்கு முன்பு உன்னுடைய கர்வத்தின் நாளிலே உன்னுடைய சகோதரியாகிய சோதோமின் பெயரை உன்னுடைய வாயினாலே உச்சரிக்கவுமாட்டாய்.
58 あなたはあなたのみだらな行為と、あなたの憎むべき事のとがとを、身に負っていると主は言われる。
௫௮உன்னுடைய முறைகேட்டையும் உன்னுடைய அருவருப்புகளையும் நீ சுமப்பாய் என்று யெகோவா சொல்லுகிறார்.
59 主なる神はこう言われる、誓いを軽んじ、契約を破ったあなたには、あなたがしたように、わたしもあなたにする。
௫௯யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உடன்படிக்கையை முறித்துப்போடுகிறதினால் ஆணையை அசட்டைசெய்த நீ செய்ததுபோல நான் உனக்கும் செய்வேன்.
60 しかしわたしはあなたの若き日に、あなたと結んだ契約を覚え、永遠の契約をあなたと立てる。
௬0ஆகிலும் உன்னுடைய இளவயதில் உன்னுடன்செய்த என்னுடைய உடன்படிக்கையை நான் நினைத்து, நிரந்தர உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன்.
61 わたしがあなたの姉および妹を受け、またあなたとの契約によらずに、娘として彼らをあなたに与える時、あなたは自分のおこないを思い出して恥じる。
௬௧அப்பொழுது உன்னுடைய மூத்த சகோதரிகளையும் உன்னுடைய தங்கைகளையும் நீ சேர்த்துக்கொள்ளும்போது, உன்னுடைய வழிகளை நினைத்து நாணுவாய்; அவர்களை நான் உனக்குக் மகள்களாகக் கொடுப்பேன்; உன்னுடைய உடன்படிக்கையைப் பார்த்துக் கொடுப்பதில்லை.
62 わたしはあなたと契約を立て、あなたはわたしが主であることを知るようになる。
௬௨உன்னுடன் என்னுடைய உடன்படிக்கையைசெய்து ஏற்படுத்துவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிவாய்.
63 こうしてすべてあなたの行ったことにつき、わたしがあなたをゆるす時、あなたはそれを思い出して恥じ、その恥のゆえに重ねて口を開くことがないと、主なる神は言われる」。
௬௩நீ செய்த எல்லாவற்றையும் நான் மன்னித்தருளும்போது, நீ நினைத்து வெட்கி, உன்னுடைய நாணத்தினால் உன்னுடைய வாயை இனித் திறக்கமுடியாமல் இருப்பாய் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

< エゼキエル書 16 >