< 詩篇 61 >
1 ああ神よねがはくはわが哭聲をききたまへ わが祈にみこころをとめたまへ
கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். என் இறைவனே, என் கதறுதலைக் கேளும், என் மன்றாட்டுக்குச் செவிகொடும்.
2 わが心くづほるるとき地のはてより汝をよばん なんぢ我をみちびきてわが及びがたきほどの高き磐にのぼらせたまへ
பூமியின் கடைசிகளில் இருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; என் இருதயம் சோர்ந்து போகையில் உம்மைக் கூப்பிடுகிறேன்; என்னைப் பார்க்கிலும் உயரமான கற்பாறையினிடத்திற்கு என்னை வழிநடத்தும்.
3 なんぢはわが避所われを仇よりのがれしむる堅固なる櫓なればなり
நீரே என் புகலிடமாய் இருக்கிறீர்; பகைவருக்கு எதிரான பலமுள்ள கோபுரமாய் இருக்கிறீர்.
4 われ永遠になんぢの帷幄にすまはん我なんぢの翼の下にのがれん (セラ)
நான் என்றென்றும் உமது கூடாரத்தில் குடியிருப்பேன்; உமது சிறகுகளின் அடைக்கலத்தில் தஞ்சமடைவேன்.
5 神よなんぢはわがもろもろの誓をきき名をおそるるものにたまふ嗣業をわれにあたへたまへり
இறைவனே, நீர் என் நேர்த்திக்கடன்களைக் கேட்டிருக்கிறீர்; உமது பெயருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குரிய உரிமைச்சொத்தை நீர் எனக்குத் தந்திருக்கிறீர்.
6 なんぢは王の生命をのばし その年を幾代にもいたらせたまはん
அரசனின் வாழ்நாட்களை அதிகமாக்கும்; அவனுடைய வருடங்களை தலைமுறை தலைமுறைகளாக அதிகமாக்கும்.
7 王はとこしへに神のみまへにとどまらん ねがはくは仁慈と眞實とをそなへて彼をまもりたまへ
இறைவனின் சமுகத்தில் அவன் என்றைக்கும் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பானாக; அவனைப் பாதுகாப்பதற்காக உமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் நியமித்தருளும்.
8 さらば我とこしへに名をほめうたひて日ごとにわがもろもろの誓をつくのひ果さん
அப்பொழுது நான் என்றென்றைக்கும் உமது பெயருக்குத் துதி பாடுவேன்; நாள்தோறும் எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.