< Katuma 7 >

1 Una katuma ka dandang ma gu ka dundure kani.
பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியா இருக்கிறது என்று கேட்டான்.
2 Istifanus ma gu a henu nan a ka co kunnanime aco uni nonzo ma kem aco aru Ibrahim anyumu a Misopotamiya otuba ticukum u hara.
அதற்கு அவன்: சகோதரர்களே, தகப்பன்மார்களே, கேளுங்கள். நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்பே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:
3 Ma gu imme ceki ma nyanga ma we me nan nanu henu uwe me, hana a manyangamage sa indi bezi we.
நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ என்றார்.
4 Monno ma ceki manyanga mu kaldiya ma cukuno u haran, ba abim me sa a co me ma wi, Asere a e imme a nyimo a manyanga mageme sa inci kin.
அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே குடியிருந்தான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இந்த தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.
5 Ma nyari unga umeme nyania hira a indai barki ukalum, ko a hira sa madi inki ubuna. se ma inki tize, u zatu u kem u vana u ibrahim dati.
இதிலே ஒரு அடி நிலத்தையாவது அவனுக்கு சொத்தாகக் கொடுக்காமல், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதை சொத்தாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.
6 Asere ma boo me a nime barki wadi chukuno a ma nyanga ma soh nan a na a hira me wadi wu wa ziti ti we esoh inaze.
அப்படியே, தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் வேறு தேசத்தில் குடியிருப்பார்கள்; அந்த தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருடங்கள் துன்பப்படுத்துவார்கள்.
7 ''In di hungu ko titui ta nu age sa wadi wu we a ni rere me,'' ingi asere, Inna dumo me wadi eh wa wu zim niru a banna me.
அவர்களை அடிமைப்படுத்தும் மக்களை நான் தண்டிப்பேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இந்த இடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.
8 Ma kuri ma nya Ibrahim in inko u tize tini gbari Ibrahim ma yoh Ishayu ma gbari me rono u witotari Ishaya ma yoh Yakubu, Yakubu aco a nu kirau i.
மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.
9 A cokoro wa wu ni eru ni Yususu wa ziki me u masar, Asere magi nan me.
அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.
10 Ma suso me a nyimo anirereme, ma nya me mu henu nan nu rusa utize a hira a Firauna Ugomo u masar, Firauna ma nya me ucanti u masar nan na kura ameme vat.
௧0தேவனோ அவனோடிருந்து, எல்லா உபத்திரவங்களில் இருந்தும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் அவனுக்கு தயவையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடு அனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
11 An no a ribe ikomo ukene a manyanga mu masar vat nan kanana nan nu zito kang, a kaco aru wa diri imumare.
௧௧பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் அதிக வருத்தமும் உண்டாகி, நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல்போனது.
12 Serki sa Yakubu ma kunna imare ira anyimo umasar, matumi akaco aru me.
௧௨அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டு என்று யாக்கோபு கேள்விப்பட்டு, யோசேப்புடைய மூத்த சகோதரர்களை முதல்முறை அனுப்பினான்.
13 Ukure me Yusufu ma suri wa iri me, firauna ma gurna nan na henu a Yusufu me.
௧௩இரண்டாம்முறை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.
14 Yusufu ma tumi a henu ameme waka buka Yakubu a co ameme ma e u masar, vat nan ni henu wa biki eso sunare nan nu cibi.
௧௪பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான்.
15 Yakubu ma ha umasar monno ma wi nan aka co arume.
௧௫அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய முற்பிதாக்களும் மரித்து,
16 Aziki we u hana ushekem a nyimo a mu cau sa Ibrahim ma kpi a zurfa a tarin ta hana a hamor ushekem me.
௧௬அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் விலைக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.
17 U ganiya sa u u gwinci ka utize wa eh mamu, sa Asere ma buki Ibrahim, anume wa uh wa kinki u masar me.
௧௭ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கியபோது,
18 Ure Ugomo ma hiri in na dumo, sa da ma rusi Yusufu ba.
௧௮யோசேப்பைத் தெரியாத வேறொரு ராஜா தோன்றின காலம்வரையிலும், மக்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.
19 Me mani ma cangi anu acu me, ma nya we titene wa veti a hana awe me barki wa hama.
௧௯அவன் நம்முடைய மக்களை வஞ்சகமாக நடப்பித்து, நம்முடைய முற்பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
20 U ganiya sa a yo Musa ma rizi memerun aje Asere inta me tipieu ti taru a nyimo a kura a co ameme.
௨0அக்காலத்திலே மோசே பிறந்து, மிகுந்த அழகுள்ளவனாக இருந்து, மூன்று மாதங்கள் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.
21 Sa a vete me a matara uco u Firauna ma wuzi ni wari ni me gu usam ume.
௨௧அவன் வீட்டிற்கு வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய மகள் அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
22 Musa ma manza tu katuma anu u mesar tize time me nan katuma ka me ka zi memerun.
௨௨மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
23 Serke sa mabiki ti we a ino anazi, iri ba ime ya be zi me ma ka ira ahenu ameme ahana a Israilawa.
௨௩அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய தன்னுடைய சகோதரர்களைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் தோன்றியது.
24 Sa ma iri azi un nutira ure u Istrailawa, Musa ma benki me, ma garza men ma dusa mahu unu ugino me.
௨௪அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாக நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணையாக இருந்து, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தான்.
25 Ma gusi agu ahenu me wadi iri tari ta Asere tini tidi benkiwe, da wa hemba.
௨௫தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு விடுதலையைத் தருவார் என்பதைத் தன்னுடைய சகோதரர்கள் தெரிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை தெரிந்துகொள்ளவில்லை.
26 Rono ukure me ma biki a hana ameme wa zi in nukara ma ha ma gu in we, “A nu a dandang shi a henu wani, nya nini izi innu matara a cece ashi me?
௨௬மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேரை அவன் கண்டு: மனிதர்களே, நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயம் செய்கிறது என்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.
27 Unu ukwabi me matuburko musa me, ma gu “Aveni ma nya we tigomo tiru?
௨௭ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்?
28 Udi hem? gu sa wa hu u masara me ninjo me?
௨௮நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான்.
29 Musa ma sumi sa ma kunna ani me ma cukuno gu ugenu a manyanga mu midia, monno ma yo a huna ruma ware.
௨௯இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
30 Tiwe ti aino a aki, umalaika ma ha a hira a musa a nyimo a nijaa upana u Sinai, a nyimo a nilem ni ura.
௩0நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
31 Sa Musa ma iri ura, ma kunna bi yau, sa ma hana mamu, monno ma kunna ni gbiran na Asere, na gu.
௩௧மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது:
32 Mi mani Asere a kaco wa co aweme, aco a Ibrahim nan Ishaku, nan Yakubu, nipum ni Musa na tuba ukirsa, ma kari aje amemen.
௩௨நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் முற்பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன் என்று கர்த்தர் உரைத்த சத்தம் அவனுக்குக் கேட்டது. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணிச்சல் இல்லாமலிருந்தான்.
33 Asere agu imme, kara makwatak me, a hira a gemesa uturin a zo me imma dini ba.
௩௩பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாக இருக்கிறது.
34 Ma mu ira utito a nu amme a nyimo umasar, ma kunna aso ashi me, mi be ma ringi in burishi, ayeni ana me, in di tumi shi u masar.
௩௪எகிப்திலிருக்கிற என் மக்களின் உபத்திரவத்தை நான் கண்டு, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகவே, நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.
35 Musa ugeme sa ya gidi me sa we gu, Aveni ma nya we tigomo aru? me mani Asere ma tumi me atari ti malaika sa ma kem me a nyimo ani jaa.
௩௫உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் நியமித்தவன் யார் என்று சொல்லி அவர்கள் நிராகரித்த இந்த மோசேயைத்தான் தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
36 Musa ma suso we a nyimo u masar, sa ma wuzi timumu ti dandang a nyimo umasar nan ni win nivu, nan a nyimo a nijaa a ti we ti nu a ino a nazi.
௩௬இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருடகாலமாக வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
37 Musa sa irusa me mani magu in na Israilawa Asere adi nya shi udura anyimo ashime nan na henu a shi, udura gimi.
௩௭இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக ஏற்படுத்துவார், அவர் சொல்வதை கேட்பீர்களாக என்று சொன்னவனும் இந்த மோசேயே.
38 Me mani sa mara a nyimo a ni gurna a ni jaa nan malaika sa ma buki metize a nipana ni sinai me mani sa mazi nan aka co aru me, me mani ma kabi tize ti urai ma nya dura.
௩௮சீனாய்மலையில் தன்னோடு பேசின தூதனோடும் நம்முடைய முற்பிதாக்களோடும் வனாந்திரத்தில் இருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவார்த்தைகளைப் பெற்றவனும் இவனே.
39 Me mani unu me sa aka co aru wa nyaru u kunma utize ti meme wa idi me ahira awe me, nan a nyimo iriba iwemme wa kuri u masar.
௩௯இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,
40 A nyimo uganiya uginome wa gu in haruna bara duru mu Asere sa wadi canti duru, Musa ugeme sa ma suso duru umasar, tita duru imum me sa ya kenme ba.
௪0ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியாது; ஆதலால் எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;
41 Wonno wa ba barka ku maruka atiye me wa nya madodo imumare, wa kunna urunta kang.
௪௧அந்த நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்களுடைய கைவேலைகளில் மகிழ்ந்திருந்தார்கள்.
42 Senke Asere a ceki we wa wuzi anu akura Asere kadtuma gu sa a nyetike a nyimo a matakarda ma adura kAsere, ya wekimi iname ya iro anyimo atiwe a ino a nazi a rujaa, a kura a Israilawa?
௪௨அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானத்தின் கோள்களுக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலிருந்த நாற்பது வருடங்கள்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,
43 Yakabi a hira ni gurna ni molek nan Asere a Refan, nan na imum sa ya barka barki ni ru, indi ziki shi in aki u Babila.
௪௩பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்களுடைய தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகவே, உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன்’ என்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே.
44 Aka co arume wa zi inni rusa Asere a nyimo a nijaa, gu udungurka me umusa ma barka gu sa ma ira.
௪௪மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணு என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபடி, அந்தக் கூடாரம் வனாந்திரத்திலே நம்முடைய முற்பிதாக்களோடு இருந்தது.
45 A hira a nigurna nan kaco arume wa gamirka wa riben a manyanga a tari ti Joshua imum ya hiri sa wa ribe wa meki ti tihira sa Asere ma gidi we, aje a kaco aru me, Anime ani har uganiya u Dauda.
௪௫மேலும், யோசுவாவோடுகூட நம்முடைய முற்பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட யூதரல்லாதவர்களுடைய தேசத்தை அவர்கள் கைப்பற்றிக்கொள்ளும்போது, அதை அந்த தேசத்திற்கு கொண்டுவந்து தாவீதின் நாள்வரை வைத்திருந்தார்கள்.
46 Sa ma hem ahira Asere, ma ikki barki makem Asere a Yakubu a hira.
௪௬இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு ஆலயத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.
47 Senke sulemanu ma barka Asere a kura.
௪௭சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
48 Unu udandang ma da ciki a nyumo a tikura sa abara in tari ba, gu ubukamwa na kadura me.
௪௮ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை.
49 Aza me a hira ti cukum tum tini, adizi me a hira upatala tibuna tum, aye akura ani udi barka mini? ubo wa Asere, nani abani indi venke?
௪௯வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாக இருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க இடம் எது;
50 Da tari tum me tini ta wuzi ba?
௫0இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா’ என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.
51 Shi anu sa ida kunna tize ba, da agwara muriba mushi nan titui, ko uya uganiya ya nyari ukana bibe ba Asere, i wuza gu aka co ashi me.
௫௧“வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்களுடைய முற்பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவியானவருக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
52 Uya unu dura mani sa da aka co ashi wa yomo me ba, wa hu anu dura sa wa emaje unu ulau, shi be ya cikuno anu uhaza anu.
௫௨தீர்க்கதரிசிகளில் யாரை உங்களுடைய முற்பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்? நீதிபரராகிய இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாக இருக்கிறீர்கள்.
53 Shi me sa ya kabi udungurka Asere me sa malaiku wa inko, shi be yaga shi ucanti me.
௫௩தேவதூதர்களைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கடைபிடிக்காமல்போனீர்கள்” என்றான்.
54 Sa anu adandang wa kunna timumume ya dari iriba iwe me, wa chari Istifanus in na nyo.
௫௪இவைகளை அவர்கள் கேட்டபொழுது மிகுந்த கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.
55 Sarki ma macika in bibe biriri, ma inki aje Asesere ma iri ni nonzo na Asere, ma iri Yesu maturi a tari tinare ta Asere.
௫௫அவன் பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவனாக, வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபக்கத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் பார்த்து:
56 Istifanus magu, ira, ma ira a poko Asesere me vana Asere ma turi a tari tinare ta Asere.
௫௬அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசுவானவர் தேவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
57 Senki anu adangdang me wa wu uhanu in nigbirang we impi titui tu we me, wa rizi a me.
௫௭அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாகக் கூக்குரலிட்டுத் தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டு, ஒன்றுசேர்ந்து அவன்மேல் பாய்ந்து,
58 Wa kari me anyimo a nipin me wa tizi me in napo, anu hiri me, wa nati tirunga adizi a tibuna ti shawulu me.
௫௮அவனை நகரத்திற்கு வெளியே தள்ளி, அவன் மீது கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தின் அருகே வைத்தார்கள்.
59 Sa wazi innu tiza u Istifanus, ma ri aje innu tisa Asere, ma gusi, “Ugomo Asere kaba bine bimme”.
௫௯அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளும்போது, அவனைக் கல்லெறிந்தார்கள்.
60 Ma tunguno a dizi ma yeze nigbirang inni kara, Asere, kati ucanti ucara tize a nice ni we me ba, sa ma mari ubo anime, monno ma wi.
௬0அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாமல் இரும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி உயிரைவிட்டான்.

< Katuma 7 >