< Giobbe 20 >

1 E SOFAR Naamatita rispose, e disse:
அதற்கு நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னது:
2 Perciò i miei pensamenti m'incitano a rispondere, E perciò [questa] mia fretta [è] in me.
“நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறபடியால், என் சிந்தனை மறுமொழிக்கூற என்னைத் தூண்டுகிறது.
3 Io ho udita la mia vituperosa riprensione; Ma lo spirito [mio] mi spinge a rispondere del mio intendimento.
என்னை அவமதிக்கும் கண்டனத்தை நான் கேட்கிறேன்; என் உள்ளுணர்வு என்னைப் பதிலளிக்கும்படி ஏவுகின்றது.
4 Non sai tu questo, [che è stato] d'ogni tempo, Da che l'uomo fu posto sopra la terra;
“மனிதன் பூமியில் தோன்றிய பூர்வகாலத்திலிருந்து, எவ்வாறு இருந்தது என்பது உனக்கு நிச்சயமாய்த் தெரியும்:
5 Che il trionfo degli empi [è] di breve durata, E che la letizia dell'ipocrita [è sol] per un momento?
கொடியவர்களின் சந்தோஷம் குறுகியகாலம், இறைவனை மறுதலிக்கிறவனின் மகிழ்ச்சி நொடிப்பொழுது.
6 Avvegnachè la sua altezza salisse fino al cielo, E il suo capo giungesse infino alle nuvole;
இறைவனற்றவனின் பெருமை வானங்களை எட்டினாலும், அவனுடைய தலை மேகங்களைத் தொட்டாலும்,
7 Pur perirà egli in perpetuo, come lo sterco suo; Quelli che l'avranno veduto, diranno: Ove [è] egli?
அவன் உரம் போல அழிந்தே போவான்; அவனை முன்பு கண்டவர்கள், ‘அவன் எங்கே?’ என்று கேட்பார்கள்.
8 Egli se ne volerà via come un sogno, e non sarà [più] ritrovato, E si dileguerà come una visione notturna.
ஒரு கனவைப்போல் அவன் பறந்துபோய், இனி ஒருபோதும் காணப்படமாட்டான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் மறைந்துபோகிறான்.
9 L'occhio [che] l'avrà veduto nol [vedrà] più, E il suo luogo nol mirerà più.
அவனைப் பார்த்த கண் மீண்டும் அவனைப் பார்க்காது; அவனுடைய இருப்பிடமும் இனி அவனைக் காணாது.
10 I suoi figliuoli procacceranno il favor de' poveri, E le sue mani restituiranno quel ch'egli avrà rapito per violenza.
அவனுடைய பிள்ளைகள் ஏழைகளின் தயவை நாடுவார்கள்; அவனுடைய கைகள் அவனுடைய செல்வத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.
11 Le sue ossa saranno ripiene [degli eccessi] della sua gioventù, I quali giaceranno con lui in su la polvere.
அவனுடைய எலும்புகளில் நிரம்பியிருக்கிற இளமையின் வலிமை, அவனுடன் தூசியில் கிடக்கும்.
12 Se il male gli è stato dolce nella bocca, [Se] egli l'ha nascosto sotto la sua lingua;
“தீமை இறைவனற்றவனின் வாயில் இனிமையாயிருந்தாலும், அவன் அதைத் தன் நாவின்கீழ் மறைத்து வைக்கிறான்.
13 [Se] l'ha riserbato, e non l'ha gittato fuori; Anzi l'ha ritenuto in mezzo del suo palato;
அதை விட்டுவிட மனமில்லாமல் தன் வாயில் வைத்திருக்கிறான்.
14 Il suo cibo gli si cangerà nelle sue viscere, E diverrà veleno d'aspido nelle sue interiora.
ஆனாலும் அவனுடைய உணவு அவன் வயிற்றுக்குள் புளிப்பாக மாறி, அவனுக்குள் பாம்பின் விஷம் போலாகிவிடும்.
15 Egli avrà trangugiate le ricchezze, ma egli le vomiterà; Iddio gliele caccerà fuor del ventre.
அவன் தான் விழுங்கிய செல்வத்தை வெளியே துப்பிவிடுவான்; இறைவன் அவனுடைய வயிற்றிலிருந்து அதை வெளியேறும்படி செய்வார்.
16 Egli avrà succiato il veleno dell'aspido, La lingua della vipera l'ucciderà.
அவன் பாம்புகளிலிருந்து நஞ்சை உறிஞ்சுவான்; விரியன் பாம்பின் நச்சு அவனைக் கொன்றுவிடும்.
17 Egli non vedrà i ruscelli, I fiumi, i torrenti del miele e del burro.
தேனும் வெண்ணெயும் ஓடும் ஆறுகளிலும், நீரோடைகளிலும் அவன் இன்பம் காணமாட்டான்.
18 Egli renderà [ciò che con] fatica [avrà acquistato], e non l'inghiottirà; Pari alla potenza [sua sarà] il suo mutamento, e non ne goderà.
அவன் தான் கஷ்டப்பட்டு உழைத்ததை உண்ணாமலே திருப்பிக் கொடுக்கவேண்டும்; அவன் தன் வியாபாரத்தின் இலாபத்தையும் அனுபவிப்பதில்லை.
19 Perciocchè egli ha oppressato [altrui], egli lascerà [dietro a sè] de' bisognosi; [Perciocchè] egli ha rapita la casa [altrui], egli non edificherà [la sua].
அவன் ஏழைகளை ஒடுக்கி, அநாதைகளாக்கினான்; தான் கட்டாத வீடுகளைக் கைப்பற்றிக்கொண்டான்.
20 Perciocchè egli non ha mai sentito riposo nel suo ventre, Non potrà salvar [nulla] delle sue più care cose.
“நிச்சயமாகவே இறைவனற்றவனுடைய ஆசைக்கு அளவேயில்லை; ஆதலால், தான் இச்சித்த பொக்கிஷங்களில் எதுவும் மீந்துவதில்லை.
21 Nulla gli rimarrà da mangiare, E però egli non avrà più speranza ne' suoi beni.
அவன் விழுங்குவதற்கும் ஒன்றும் மீதமில்லை; அவனுடைய செழிப்பும் நிலைக்காது.
22 Quando egli sarà ripieno a sufficienza, allora sarà distretto; Tutte le mani de' miseri gli verranno contra.
அவனுடைய நிறைவின் மத்தியில் துயரம் அவனை மேற்கொள்ளும்; அவலத்தின் கொடுமை முழுமையாய் அவன்மேல் வரும்.
23 [Quando] egli sarà per empiersi il ventre, [Iddio] gli manderà addosso l'ardore della sua ira, E [la] farà piovere sopra lui, [e] sopra il suo cibo.
அவன் வயிறு நிரம்பும்போது, இறைவன் தமது கடுங்கோபத்தை அவன்மேல் வரப்பண்ணி, அடிமேல் அடியாக அவனை வாதிப்பார்.
24 [Quando egli] fuggirà dalle armi di ferro, Un arco di rame lo trafiggerà.
அவன் இரும்பு ஆயுதத்திற்குத் தப்பி ஓடினாலும், வெண்கல முனையுள்ள அம்பு அவனைக் குத்துகிறது.
25 [Come prima la saetta] sarà tratta fuori, La punta gli passerà per mezzo il fiele, Dopo esser uscita del suo turcasso; Spaventi gli saranno addosso.
அவன் அதைத் தன் முதுகிலிருந்தும், அதின் மினுங்கும் நுனியைத் தன் ஈரலிலிருந்தும் இழுத்தெடுக்கிறான். பயங்கரங்கள் அவனை ஆட்கொள்கின்றன;
26 Tutte le tenebre [saran] nascoste ne' suoi nascondimenti; Un fuoco non soffiato lo divorerà; Chi sopravviverà nel suo tabernacolo, capiterà male.
அவனுடைய பொக்கிஷங்கள் காரிருளில் கிடக்கும். அணையாத நெருப்பு அவனைச் சுட்டெரித்து, அவனுடைய கூடாரத்தில் மீதியாயிருப்பதையும் விழுங்கிப்போடும்.
27 I cieli scopriranno la sua iniquità, E la terra si leverà contro a lui.
வானங்கள் அவன் குற்றங்களை வெளிப்படுத்தும்; பூமி அவனுக்கெதிராக எழும்பும்.
28 La rendita della sua casa sarà trasportata [ad altri]; [Ogni cosa sua] scorrerà via, nel giorno dell'ira di esso,
அவனுடைய வீட்டின் செல்வம் போய்விடும்; இறைவனுடைய கோபத்தின் நாளிலே, அதை வெள்ளம் அள்ளிக்கொண்டுபோகும்.
29 Questa [è] la parte [assegnata] da Dio all'uomo empio, E l'eredità [ch'egli riceve] da Dio per le sue parole.
கொடியவர்களுக்கு இறைவன் நியமித்த பலன் இதுவே; இறைவனால் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பங்கும் இதுவே.”

< Giobbe 20 >