< Proverbi 7 >

1 Figlio mio, custodisci le mie parole e fà tesoro dei miei precetti.
என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து, என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.
2 Osserva i miei precetti e vivrai, il mio insegnamento sia come la pupilla dei tuoi occhi.
என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய போதகத்தையும் உன்னுடைய கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
3 Lègali alle tue dita, scrivili sulla tavola del tuo cuore.
அவைகளை உன்னுடைய விரல்களில் கட்டி, அவைகளை உன்னுடைய இருதயப்பலகையில் எழுதிக்கொள்.
4 Dì alla sapienza: «Tu sei mia sorella», e chiama amica l'intelligenza,
ஆசைவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
5 perché ti preservi dalla donna forestiera, dalla straniera che ha parole di lusinga.
ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு.
6 Mentre dalla finestra della mia casa stavo osservando dietro le grate,
நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று, அதின் வழியாகப் பார்த்தபோது,
7 ecco vidi fra gli inesperti, scorsi fra i giovani un dissennato.
பேதையர்களாகிய வாலிபர்களுக்குள்ளே ஒரு புத்தியற்ற வாலிபனைக்கண்டு அவனை கவனித்தேன்.
8 Passava per la piazza, accanto all'angolo della straniera, e s'incamminava verso la casa di lei,
அவன் மாலைமயங்கும் சூரியன் மறையும் நேரத்திலும், இரவின் இருளிலும்.
9 all'imbrunire, al declinare del giorno, all'apparir della notte e del buio.
அவள் இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் சென்று, அவளுடைய வீட்டுவழியாக நடந்துபோனான்.
10 Ecco farglisi incontro una donna, in vesti di prostituta e la dissimulazione nel cuore.
௧0அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த தந்திரமனமுள்ள ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள்.
11 Essa è audace e insolente, non sa tenere i piedi in casa sua.
௧௧அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவளுடைய கால்கள் வீட்டிலே தங்குகிறதில்லை.
12 Ora è per la strada, ora per le piazze, ad ogni angolo sta in agguato.
௧௨சிலவேளை வெளியிலே இருப்பாள், சிலவேளை வீதியில் இருப்பாள், சந்துகள்தோறும் மறைந்திருப்பாள்.
13 Lo afferra, lo bacia e con sfacciataggine gli dice:
௧௩அவள் அவனைப் பிடித்து முத்தமிட்டு, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:
14 «Dovevo offrire sacrifici di comunione; oggi ho sciolto i miei voti;
௧௪சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என்னுடைய பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.
15 per questo sono uscita incontro a te per cercarti e ti ho trovato.
௧௫ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
16 Ho messo coperte soffici sul mio letto, tela fine d'Egitto;
௧௬என்னுடைய மெத்தையை இரத்தினக் கம்பளங்களாலும், எகிப்து தேசத்தின் விசித்திரமான மெல்லிய துணிகளாலும் அலங்கரித்தேன்.
17 ho profumato il mio giaciglio di mirra, di aloè e di cinnamòmo.
௧௭என்னுடைய படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனையாக்கினேன்.
18 Vieni, inebriamoci d'amore fino al mattino, godiamoci insieme amorosi piaceri,
௧௮வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.
19 poiché mio marito non è in casa, è partito per un lungo viaggio,
௧௯கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான்.
20 ha portato con sé il sacchetto del denaro, tornerà a casa il giorno del plenilunio».
௨0பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
21 Lo lusinga con tante moine, lo seduce con labbra lascive;
௨௧தன்னுடைய மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன்னுடைய உதடுகளின் இனிமையான பேச்சால் அவனை இணங்கச்செய்தாள்.
22 egli incauto la segue, come un bue va al macello; come un cervo preso al laccio,
௨௨உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும்,
23 finché una freccia non gli lacera il fegato; come un uccello che si precipita nella rete e non sa che è in pericolo la sua vita.
௨௩ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவனுடைய இருதயத்தைப் பிளந்தது.
24 Ora, figlio mio, ascoltami, fà attenzione alle parole della mia bocca.
௨௪ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
25 Il tuo cuore non si volga verso le sue vie, non aggirarti per i suoi sentieri,
௨௫உன்னுடைய இருதயம் அவளுடைய வழியிலே சாயவேண்டாம்; அவளுடைய பாதையிலே மயங்கித் திரியாதே.
26 perché molti ne ha fatti cadere trafitti ed erano vigorose tutte le sue vittime.
௨௬அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழச்செய்தாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள்.
27 La sua casa è la strada per gli inferi, che scende nelle camere della morte. (Sheol h7585)
௨௭அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். (Sheol h7585)

< Proverbi 7 >