< Giobbe 5 >

1 Chiama, dunque! Ti risponderà forse qualcuno? E a chi fra i santi ti rivolgerai?
“இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்?
2 Poiché allo stolto dà morte lo sdegno e la collera fa morire lo sciocco.
கோபம் மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும்.
3 Io ho visto lo stolto metter radici, ma imputridire la sua dimora all'istante.
மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன்.
4 I suoi figli sono lungi dal prosperare, sono oppressi alla porta, senza difensore;
அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி, காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
5 l'affamato ne divora la messe e gente assetata ne succhia gli averi.
பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்; பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான்.
6 Non esce certo dalla polvere la sventura né germoglia dalla terra il dolore,
தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
7 ma è l'uomo che genera pene, come le scintille volano in alto.
தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
8 Io, invece, mi rivolgerei a Dio e a Dio esporrei la mia causa:
ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன்.
9 a lui, che fa cose grandi e incomprensibili, meraviglie senza numero,
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
10 che dà la pioggia alla terra e manda le acque sulle campagne.
௧0தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார்.
11 Colloca gli umili in alto e gli afflitti solleva a prosperità;
௧௧அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
12 rende vani i pensieri degli scaltri e le loro mani non ne compiono i disegni;
௧௨தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க, அவர்களுடைய திட்டங்களை அவர் பொய்யாக்குகிறார்.
13 coglie di sorpresa i saggi nella loro astuzia e manda in rovina il consiglio degli scaltri.
௧௩அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; தந்திரக்காரரின் ஆலோசனை கட்டப்படும்.
14 Di giorno incappano nel buio e brancolano in pieno sole come di notte,
௧௪அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள்.
15 mentre egli salva dalla loro spada l'oppresso, e il meschino dalla mano del prepotente.
௧௫ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும், பெலவானின் கைக்கும் தடுத்து காப்பாற்றுகிறார்.
16 C'è speranza per il misero e l'ingiustizia chiude la bocca.
௧௬அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.
17 Felice l'uomo, che è corretto da Dio: perciò tu non sdegnare la correzione dell'Onnipotente,
௧௭இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
18 perché egli fa la piaga e la fascia, ferisce e la sua mano risana.
௧௮அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
19 Da sei tribolazioni ti libererà e alla settima non ti toccherà il male;
௧௯ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
20 nella carestia ti scamperà dalla morte e in guerra dal colpo della spada;
௨0பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும், போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார்.
21 sarai al riparo dal flagello della lingua, né temerai quando giunge la rovina.
௨௧நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.
22 Della rovina e della fame ti riderai né temerai le bestie selvatiche;
௨௨அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்கள்.
23 con le pietre del campo avrai un patto e le bestie selvatiche saranno in pace con te.
௨௩வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்முடன் சமாதானமாயிருக்கும்.
24 Conoscerai la prosperità della tua tenda, visiterai la tua proprietà e non sarai deluso.
௨௪உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்; உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
25 Vedrai, numerosa, la prole, i tuoi rampolli come l'erba dei prati.
௨௫உம்முடைய சந்ததி பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் தாவரங்களைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
26 Te ne andrai alla tomba in piena maturità, come si ammucchia il grano a suo tempo.
௨௬தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
27 Ecco, questo abbiamo osservato: è così. Ascoltalo e sappilo per tuo bene.
௨௭இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான்.

< Giobbe 5 >