< Zsoltárok 122 >
1 Grádicsok éneke, Dávidtól. Örvendezek, mikor mondják nékem: Menjünk el az Úr házába!
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். “யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்” என்று என்னிடம் சொன்னவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியடைந்தேன்.
2 Ott álltak a mi lábaink a te kapuidban, oh Jeruzsálem!
எருசலேமே, எங்கள் கால்கள் உன் வாசல்களில் நிற்கின்றன.
3 Jeruzsálem, te szépen épült, mint a jól egybeszerkesztett város!
நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல், எருசலேம் கட்டப்பட்டிருக்கிறது.
4 A hová feljárnak a nemzetségek, az Úrnak nemzetségei, bizonyságul Izráelnek, az Úr nevének tiszteletére.
யெகோவாவினுடைய பெயரைத் துதிப்பதற்கு, கோத்திரங்கள் அங்கு போவார்கள்; இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியமத்தின்படி, யெகோவாவினுடைய கோத்திரங்கள் அங்கு போவார்கள்.
5 Mert ott ülnek az ítélőszékek, Dávid házának székei.
தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன; அங்கே மக்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள்.
6 Könyörögjetek Jeruzsálem békességéért; legyenek boldogok a téged szeretők!
எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்: “உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள்.
7 Békesség legyen a te várfalaid között, csendesség a te palotáidban.
உன் மதில்களுக்குள் சமாதானமும், உன் கோட்டைகளுக்குள் பாதுகாப்பும் இருப்பதாக.”
8 Atyámfiaiért és barátaimért hadd mondhassam: béke veled!
என் குடும்பத்தின் நிமித்தமும், என் சிநேகிதர்கள் நிமித்தமும் “உனக்குள் சமாதானம் இருக்கட்டும்” என்று நான் வாழ்த்துகிறேன்.
9 Az Úrnak, a mi Istenünknek házáért hadd kivánhassak jót tenéked!
எங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயம் அங்கு இருப்பதால், நான் உன் செழிப்பைத் தேடுவேன்.