< Példabeszédek 20 >

1 A bor csúfoló, a részegítő ital háborgó, és valaki abba beletéved, nem bölcs!
திராட்சைரசம் கேலிசெய்ய வைக்கும், மதுபானம் போதையை உண்டாக்கும்; அதினால் வழிதவறுகிறவர்கள் ஞானிகளல்ல.
2 Mint a fiatal oroszlán ordítása, olyan a királynak rettentése; a ki azt haragra ingerli, vétkezik a maga élete ellen.
அரசனின் கடுங்கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போலிருக்கிறது; அரசனைக் கோபமூட்டுகிறவர்கள் தங்கள் உயிரை இழப்பார்கள்.
3 Tisztesség az embernek elmaradni a versengéstől; valaki pedig bolond, patvarkodik.
சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை; ஒவ்வொரு முட்டாளும் சண்டையிட விரைகின்றனர்.
4 A hideg miatt nem szánt a rest; aratni akar majd, de nincs mit.
சோம்பேறி ஏற்றகாலத்தில் நிலத்தை உழுவதில்லை; அதினால் அறுவடைக்காலத்தில் அவர்கள் கேட்டும் உணவு கிடைப்பதில்லை.
5 Mély víz a férfiúnak elméjében a tanács; mindazáltal a bölcs ember kimeríti azt.
மனிதருடைய இருதயத்தின் நோக்கங்கள் ஆழமான நீர்நிலைகள்; மெய்யறிவுள்ளவர்களே அதை வெளியே கொண்டுவருவார்கள்.
6 A legtöbb ember talál valakit, a ki jó hozzá; de hű embert, azt ki találhat?
அநேகர் தங்களை நேர்மையான அன்புள்ளவர் என்று சொல்லிக்கொள்வார்கள்; ஆனால் ஒரு உண்மையுள்ள மனிதரை யாரால் கண்டுபிடிக்க முடியும்?
7 A ki az ő tökéletességében jár, igaz ember; boldogok az ő fiai ő utána!
நீதிமான்கள் குற்றமற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள்; அவர்களுக்குப் பிற்பாடு அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
8 A király, ha az ő ítélőszékiben ül, tekintetével minden gonoszt eltávoztat.
நியாயத்தீர்ப்புக்காக அரசன் சிங்காசனத்தில் அமரும்போது, அவன் தன் கண்களினாலேயே தீமையான யாவையும் பிரித்துவிடுவான்.
9 Ki mondhatná azt: megtisztítottam szívemet, tiszta vagyok az én bűnömtől?
“நான் எனது இருதயத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறேன்; நான் பாவமின்றி சுத்தமாய் இருக்கிறேன்” என யாரால் சொல்லமுடியும்?
10 A kétféle font és a kétféle mérték, útálatos az Úrnál egyaránt mind a kettő.
பொய்யான எடைக் கற்கள், சமமற்ற அளவைகள் ஆகிய இவ்விரண்டையும் யெகோவா அருவருக்கிறார்.
11 Az ő cselekedetiből ismerteti meg magát még a gyermek is, ha tiszta-é, és ha igaz-é az ő cselekedete.
சிறுபிள்ளைகளானாலும், அவர்களுடைய நடத்தை தூய்மையும் நேர்மையுமானதா என்று அவர்களுடைய செயல்களை வைத்து சொல்லலாம்.
12 A halló fület és a látó szemet, az Úr teremtette egyaránt mindkettőt.
கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள் ஆகிய இரண்டையும் யெகோவாவே உண்டாக்கியிருக்கிறார்.
13 Ne szeresd az álmot, hogy ne légy szegény; nyisd fel a te szemeidet, és megelégszel kenyérrel.
தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்; விழிப்பாயிரு, அப்பொழுது திருப்தியான உணவைப் பெறுவாய்.
14 Hitvány, hitvány, azt mondja a vevő; de mikor elmegy, akkor dicsekedik.
பொருட்களை வாங்குபவர்கள், “இது நல்லதல்ல, இது நல்லதல்ல!” எனச் சொல்கிறார்கள்; வாங்கிய பின்போ அவர்கள் போய் தான் வாங்கிய திறமையைப் பற்றிப் புகழ்கிறார்கள்.
15 Van arany és drágagyöngyök sokasága; de drága szer a tudománynyal teljes ajak.
தங்கமும் உண்டு, பவளங்களும் நிறைவாய்க் கிடைக்கும்; ஆனால் அறிவைப் பேசும் உதடுகளோ அரிதாய்க் கிடைக்கும் மாணிக்கக்கல்.
16 Vedd el ruháját, mert kezes lett másért, és az idegenért vedd el zálogát.
பிறரின் கடனுக்காக உத்திரவாதம் செய்பவரின் பாதுகாப்புக்காக உடையை எடுத்துக்கொள்; வெளியாளுக்காக அதைச் செய்திருந்தால், அதையே அடைமானமாக வைத்துக்கொள்.
17 Gyönyörűséges az embernek az álnokságnak kenyere; de annakutána betelik az ő szája kavicsokkal.
மோசடியினால் பெறும் உணவு சுவையாக இருக்கும்; ஆனால் முடிவில் அது வாயில் இட்ட மண்ணாகவே இருக்கும்.
18 A gondolatok tanácskozással erősek; és bölcs vezetéssel folytass hadakozást.
நல்ல ஆலோசனையினால் திட்டங்கள் உறுதிப்படும்; ஆகையால் நீ யுத்தத்திற்குப் போகுமுன் ஞானமுள்ள அறிவுரைகளைப் பெற்றுக்கொள்.
19 Megjelenti a titkot, a ki rágalmazó; tehát a ki fecsegő szájú, azzal ne barátkozzál.
புறங்கூறுபவர்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள்; ஆகையால் வாயாடிகளை விட்டு விலகியிரு.
20 A ki az ő atyját vagy anyját megátkozza, annak kialszik szövétneke a legnagyobb setétségben.
ஒருவன் தகப்பனையோ தாயையோ அவமதித்தால், கடும் இருட்டில் அவன் விளக்கு அணைந்துவிடும்.
21 A mely örökséget először siettetnek, annak vége meg nem áldatik.
ஆரம்பத்திலேயே மிகத் துரிதமாகக் கிடைத்த சொத்து, முடிவில் ஆசீர்வாதமாயிருக்காது.
22 Ne mondd: bosszút állok rajta! Várjad az Urat, és megszabadít téged!
“பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று நீ சொல்லாதே; யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை விடுவிப்பார்.
23 Útálatos az Úrnál a kétféle súly; és a hamis fontok nem jó dolgok.
போலியான எடைக் கற்களை பயன்படுத்துவோரை யெகோவா அருவருக்கிறார்; போலித் தராசுகளை பயன்படுத்துவது முறையானதல்ல.
24 Az Úrtól vannak a férfi lépései; az ember pedig mit ért az ő útában?
மனிதரின் காலடிகளை யெகோவாவே நடத்துகிறார்; அப்படியிருக்க ஒருவரால் தனது சொந்த வழியை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்?
25 Tőr az embernek meggondolatlanul mondani: szent, és a fogadástétel után megfontolni.
முன்யோசனையின்றி ஏதாவது ஒன்றை இறைவனுக்கு பொருத்தனை செய்துவிட்டு, பின்பு அதைப்பற்றி யோசிப்பது மனிதனுக்குக் கண்ணியாயிருக்கும்.
26 Szétszórja a gonoszokat a bölcs király, és fordít reájok kereket.
ஞானமுள்ள அரசன் கொடியவர்களை பிரித்தெடுக்கிறான்; பின்பு அரசன் அவர்களை கடுமையாகத் தண்டிக்கிறான்.
27 Az Úrtól való szövétnek az embernek lelke, a ki megvizsgálja a szívnek minden rejtekét.
மனிதருடைய ஆவி யெகோவா தந்த விளக்கு; அது உள்ளத்தின் ஆழத்தையும் ஆராய்கிறது.
28 A kegyelmesség és az igazság megőrzik a királyt, megerősíti irgalmasság által az ő székét.
அன்பும் உண்மையும் அரசனைக் காப்பாற்றுகிறது; அன்பினால் அவனுடைய சிங்காசனம் நிலைக்கிறது.
29 Az ifjaknak ékessége az ő erejök; és a véneknek dísze az ősz haj.
வாலிபரின் மகிமை அவர்களின் பெலன்; முதியோரின் அனுபவத்தின் நரைமுடி அவர்களின் மேன்மை.
30 A kékek és a sebek távoztatják el a gonoszt, és a belső részekig ható csapások.
அடிகளும் காயங்களும் தீமையை அகற்றும்; பிரம்படிகள் உள்ளத்தின் ஆழத்தைச் சுத்திகரிக்கும்.

< Példabeszédek 20 >