< 4 Mózes 24 >
1 Mikor pedig látta Bálám, hogy tetszik az Úrnak, hogy megáldja Izráelt, nem indula, mint az előtt, varázslatok után, hanem fordítá az ő orczáját a puszta felé.
௧இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே யெகோவாவுக்குப் பிரியம் என்று பிலேயாம் பார்த்தபோது, அவன் முந்திச் செய்து வந்ததுபோல யெகோவாவைப் பார்க்கப் போகாமல், வனாந்திரத்திற்கு நேராகத் தன்னுடைய முகத்தைத் திருப்பி,
2 És mikor felemelte Bálám az ő szemeit, látá Izráelt, a mint letelepedett az ő nemzetségei szerint; és Istennek lelke vala ő rajta.
௨தன்னுடைய கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன்னுடைய கோத்திரங்களின்படியே முகாமிட்டிருக்கிறதைப் பார்த்தான்; தேவஆவி அவன்மேல் வந்தது.
3 Akkor elkezdé az ő példázó beszédét és monda: Bálámnak, Beór fiának szózata, a megnyílt szemű embernek szózata.
௩அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “பேயோரின் மகனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
4 Annak szózata, a ki hallja Istennek beszédét, a ki látja a Mindenhatónak látását, leborulva, de nyitott szemekkel:
௪தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது,
5 Mily szépek a te sátoraid óh Jákób! a te hajlékaid óh Izráel!
௫யாக்கோபே, உன்னுடைய கூடாரங்களும், இஸ்ரவேலே, உன்னுடைய தங்குமிடங்களும் எவ்வளவு அழகானவைகள்!
6 Mint kiterjesztett völgyek, mint kertek a folyóvíz mellett, mint az Úr plántálta áloék, mint czédrusfák a vizek mellett!
௬அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், யெகோவா நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு மரங்களைப்போலவும் இருக்கிறது.
7 Víz ömledez az ő vedreiből, vetését bő víz öntözi; királya nagyobb Agágnál, és felmagasztaltatik az ő országa.
௭அவர்களுடைய வாளிகளிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்கள் விதை திரளான தண்ணீர்களில் பரவும்; அவர்களுடைய ராஜா ஆகாகை விட உயருவான்; அவர்களுடைய ராஜ்ஜியம் மேன்மையடையும்.
8 Isten hozta ki Égyiptomból, az ő ereje mint a vad bivalyé: megemészti a pogányokat, az ő ellenségeit; csontjaikat megtöri, és nyilaival által veri.
௮தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்களுடைய எதிரிகளாகிய தேசத்தை தின்று, அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்களுடைய அம்புகளாலே எய்வார்கள்.
9 Lehever, nyugszik mint hím oroszlán, és mint nőstény oroszlán; ki serkenti fel őt? A ki áld téged, áldott lészen, és ki átkoz téged, átkozott lészen.
௯சிங்கம்போலவும் கொடிய சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன்” என்றான்.
10 És felgerjede Báláknak haragja Bálám ellen, és egybeüté kezeit, és monda Bálák Bálámnak: Azért hívtalak téged, hogy átkozd meg ellenségeimet; és ímé igen megáldottad immár három ízben.
௧0அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் வந்தவனாகி, கையோடு கைதட்டி, பிலேயாமை நோக்கி: “என்னுடைய எதிரிகளைச் சபிக்க உன்னை அழைத்து வந்தேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.
11 Most azért fuss a te helyedre. Mondottam vala, hogy igen megtisztellek téged; de ímé megfosztott téged az Úr a tisztességtől.
௧௧ஆகையால் உன்னுடைய இடத்திற்கு ஓடிப்போ; உன்னை மிகவும் மேன்மைப்படுத்துவேன் என்றேன்; நீ மேன்மை அடையாதபடி யெகோவா தடுத்தார் என்றான்.
12 És monda Bálám Báláknak: A te követeidnek is, a kiket küldöttél volt hozzám, nem így szólottam-é, mondván:
௧௨அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என்னுடைய மனதாக நன்மையையோ தீமையையோ செய்கிறதற்குக் யெகோவாவின் கட்டளையை மீறக்கூடாது; யெகோவா சொல்வதையே சொல்வேன் என்று,
13 Ha Bálák az ő házát ezüsttel és aranynyal tele adná is nékem, az Úrnak beszédét által nem hághatom, hogy magamtól jót, vagy rosszat cselekedjem. A mit az Úr szól, azt szólom.
௧௩நீர் என்னிடத்திற்கு அனுப்பின தூதுவர்களிடத்தில் நான் சொல்லவில்லையா?
14 Most pedig én elmegyek ímé az én népemhez; jőjj, hadd jelentsem ki néked, mit fog cselekedni e nép a te népeddel, a következő időben.
௧௪இதோ, நான் என்னுடைய மக்களிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த மக்கள் உம்முடைய மக்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும்” என்று சொல்லி.
15 És elkezdé az ő példázó beszédét, és monda: Bálámnak, Beór fiának szózata, a megnyilt szemű ember szózata,
௧௫அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “பேயோரின் மகன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
16 Annak szózata, a ki hallja Istennek beszédét, és a ki tudja a Magasságosnak tudományát, és a ki látja a Mindenhatónak látását, leborulva, de nyitott szemekkel.
௧௬தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமான தேவன் அளித்த அறிவை அறிந்து, உன்னதமான தேவனுடைய தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது;
17 Látom őt, de nem most; nézem őt, de nem közel. Csillag származik Jákóbból, és királyi pálcza támad Izráelből; és általveri Moábnak oldalait, és összetöri Sethnek minden fiait.
௧௭அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், அருகாமையில் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத் சந்ததி எல்லோரையும் நிர்மூலமாக்கும்.
18 És Edom más birtoka lesz, Szeir az ő ellensége is másnak birtoka lesz; de hatalmasan cselekszik Izráel.
௧௮ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன்னுடைய எதிரிகளுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமம்செய்யும்.
19 És uralkodik a Jákóbtól való, és elveszti a városból a megmaradtat.
௧௯யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார்” என்றான்.
20 És mikor látja vala Amáleket, elkezdé az ő példázó beszédét, és monda: Amálek első a nemzetek között, de végezetre mindenestől elvész.
௨0மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவில் முற்றிலும் நாசமாவான் என்றான்.
21 És mikor látja vala a Keneust, elkezdé példázó beszédét, és monda: Erős a te lakhelyed, és sziklára raktad fészkedet;
௨௧அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “உன்னுடைய தங்குமிடம் பாதுகாப்பானது; உன்னுடைய கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
22 Mégis el fog pusztulni Kain; a míg Assur téged fogva viszen.
௨௨ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைபிடித்துக்கொண்டுபோக எத்தனை நாட்கள் ஆகும்” என்றான்.
23 Újra kezdé az ő példázó beszédét, és monda: Óh, ki fog élni még, a mikor véghez viszi ezt az Isten?
௨௩பின்னும் அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “ஐயோ, தேவன் இதைச்செய்யும்போது யார் பிழைப்பான்;
24 És Kittim partjairól hajók jőnek, és nyomorgatják Assúrt, nyomorgatják Ébert is, és ez is mindenestől elvész.
௨௪கித்தீமின் கடல் துறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான்” என்றான்.
25 Felkele azért Bálám, és elméne, hogy visszatérjen az ő helyére. És Bálák is elméne az ő útján.
௨௫பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன்னுடைய வழியே போனான்.