< Ézsaiás 64 >
1 Oh, vajha megszakasztanád az egeket és leszállnál, előtted a hegyek elolvadnának;
௧ஆ, உமது நாமத்தை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துவதற்கும், தேசங்கள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும்,
2 mint a tűz meggyújtja a rőzsét, a vizet a tűz felforralja; hogy nevedet ellenségidnek megjelentsd, hogy előtted reszkessenek a népek;
௨தேவரீர் வானங்களைக் கிழித்து இறங்கி, உருக்கும் அக்கினி எரிவதைப்போலவும், நெருப்பு தண்ணீரைப் பொங்கச் செய்வதைப்போலவும், மலைகள் உமக்கு முன்பாக உருகும்படி செய்யும்.
3 Hogy cselekednél rettenetes dolgokat, a miket nem vártunk; leszállnál és előtted a hegyek elolvadnának.
௩நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்தபோது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் மலைகள் உருகிப்போயின.
4 Hiszen öröktől fogva nem hallottak és fülökbe sem jutott, szem nem látott más Istent te kívüled, a ki így cselekszik azzal, a ki Őt várja.
௪தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை.
5 Elébe mégy annak, a ki örvend és igazságot cselekszik, a kik útaidban rólad emlékeznek! Ímé, Te felgerjedtél, és mi vétkezénk; régóta így vagyunk; megtartatunk-é?
௫மகிழ்ச்சியாக நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்; நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே, தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்; இன்னமும் தப்பியிருக்கிறோம்.
6 És mi mindnyájan olyanok voltunk, mint a tisztátalan, és mint megfertéztetett ruha minden mi igazságaink, és elhervadánk, mint a falomb mindnyájan, és álnokságaink, mint a szél, hordának el bennünket!
௬நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கிழிந்த ஆடையைப்போல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்களுடைய அக்கிரமங்கள் எங்களைக் காற்றைப்போல் அடித்துக்கொண்டுபோகிறது.
7 S nem volt, a ki segítségül hívta volna nevedet, a ki felserkenne és beléd fogóznék, mert orczádat elrejtéd tőlünk, és álnokságainkban minket megolvasztál.
௭உமது நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனும், உம்மைப் பற்றிக்கொள்வதற்கு விழித்துக்கொள்ளுகிறவனும் இல்லை; தேவரீர் உம்முடைய முகத்தை எங்களை விட்டு மறைத்து, எங்கள் அக்கிரமங்களின்காரணமாக எங்களைக் கறையச்செய்கிறீர்.
8 Most pedig, Uram, Atyánk vagy Te, mi sár vagyunk és Te a mi alkotónk, és kezed munkája vagyunk mi mindnyájan.
௮இப்பொழுதும் யெகோவாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின்செயல்.
9 Oh ne haragudjál Uram felettébb, és ne mindörökké emlékezzél meg álnokságinkról; ímé lásd, kérünk, mindnyájan a Te néped vagyunk.
௯யெகோவாவே, அதிகமாகக் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்கொள்ளாமலும் இருப்பீராக; இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய மக்களே.
10 Szentségednek városai pusztává lettenek, Sion pusztává lőn, Jeruzsálem kietlenné.
௧0உமது பரிசுத்த பட்டணங்கள் வனாந்திரமாயின; சீயோன் வனாந்திரமாயிற்று; எருசலேம் பாழாய்க் கிடக்கிறது.
11 Szentségünk és ékességünk házát, hol téged atyáink dicsértenek, tűz perzselé föl, és minden a miben gyönyörködénk, elpusztult.
௧௧எங்கள் முன்னோர்கள் உம்மைத் துதித்த பரிசுத்தமும் மகிமையுமான எங்களுடைய ஆலயம் நெருப்பிற்கு இரையாகி, இன்பமான எங்களுடைய இடங்களெல்லாம் பாழாயின.
12 Hát megtartóztatod-é magad mind e mellett is, Uram; hallgatsz-é és gyötörsz minket felettébb?
௧௨யெகோவாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாக எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ?