< Ézsaiás 46 >
1 Ledől Bél, elesik Nebó, oktalan barmokra kerülnek szobraik, és miket ti hordoztatok, felrakatnak, terhéül a megfáradott állatnak;
௧பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் சிலைகள் காட்டு மிருகங்களுக்கும் நாட்டு மிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள், இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும்.
2 Elesnek, összerogynak együtt, nem menthetik meg a terhet; és ők magok fogságba mennek.
௨அவைகள் ஏகமாகக் குனிந்து பணியும்; சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது; அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும்.
3 Hallgassatok rám, Jákób háza és Izráel házának minden maradéka, a kiket magamra raktam anyátok méhétől fogva, és hordoztalak születésetek óta;
௩யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்.
4 Vénségtekig én vagyok az, és megőszüléstekig én visellek; én teremtettem és én hordozom, én viselem és megszabadítom.
௪உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுவரை நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.
5 Kihez hasonlíttok engem, és kivel tesztek egyenlővé? És kivel vettek egybe, hogy hasonlók volnánk?
௫யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படி என்னை ஒப்பிடுவீர்கள்?
6 Kitöltik az aranyat az erszényből, és ezüstöt mérnek a mértékkel, és ötvöst fogadnak, hogy abból istent csináljon; meghajolnak, leborulnak előtte.
௬பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, கொல்லனுடனே கூலி பொருத்திக்கொள்கிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள்.
7 Vállukra veszik azt és hordozzák, majd állványára helyezik és veszteg áll, helyéről meg nem mozdul, ha kiáltasz is hozzá, nem felel, nyomorúságodból nem szabadít meg.
௭அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதின் இடத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்திரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை காப்பாற்றியதுமில்லை.
8 Emlékezzetek meg erről, és legyetek erősek, vegyétek eszetekbe, pártütők!
௮இதை நினைத்து ஆண்களாயிருங்கள்; பாதகர்களே, இதை மனதில் வையுங்கள்.
9 Emlékezzetek meg a messze régi dolgokról, hogy én vagyok Isten és nincsen több; Isten vagyok, és nincs hozzám hasonlatos.
௯முன்பு ஆரம்பகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
10 Ki megjelentem kezdettől fogva a véget, és előre azokat, a mik még meg nem történtek, mondván: tanácsom megáll, és véghez viszem minden akaratomat;
௧0முடிவிலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் ஆரம்பகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,
11 Ki elhívom napkeletről a sast, meszsze földről tanácsom férfiát; nem csak szóltam, ki is viszem, elvégezem, meg is cselekszem!
௧௧வேகமாக பறக்கிற ஒரு பறவையைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனிதனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்செய்தேன், அதைச் செய்துமுடிப்பேன்.
12 Hallgassatok reám, kemény szívűek, a kik távol vagytok az igazságtól.
௧௨கடின இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
13 Elhoztam igazságomat, nincs messze, és az én szabadításom nem késik, Sionban lesz szabadításom, és Izráelen dicsőségem.
௧௩என் நீதியைச் சமீபிக்கச்செய்கிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கொடுப்பேன்.