< Ezékiel 1 >
1 És lőn a harminczadik esztendőben, a negyedik hónapban, a hónap ötödikén, mikor én a foglyok közt a Kébár folyó mellett voltam: megnyilatkozának az egek, és láték isteni látásokat.
௧என்னுடைய வயது முப்பதாம் வருடம் நான்காம் மாதம் ஐந்தாம் நாளாய் இருக்கும்போது, நான் கேபார் நதியின் அருகிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, நடந்தது என்னவென்றால், வானங்கள் திறந்திருக்க, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.
2 A hónap ötödikén (ez az ötödik esztendeje Jojákin király fogságba vitelének).
௨அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருடமாக இருந்தது.
3 Valójában lőn az Úrnak beszéde Ezékiel paphoz, a Búzi fiához a Káldeusok földén, a Kébár folyó mellett, és lőn ott rajta az Úrnak keze.
௩அந்த ஐந்தாம்தேதியிலே, கல்தேயர்கள் தேசத்திலுள்ள கேபார் நதியின் அருகிலே பூசி என்னும் ஆசாரியனுடைய மகனாகிய எசேக்கியேலுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அங்கே யெகோவாவுடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.
4 És látám, és ímé forgószél jött északról, nagy felhő egymást érő villámlással, a mely körül fényesség vala, közepéből pedig mintha izzó ércz látszott volna ki, tudniillik a villámlás közepéből.
௪இதோ, வடக்கேயிருந்து புயல்காற்றும் பெரிய மேகமும், அதோடு கலந்த நெருப்பும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் நெருப்புக்குள்ளிருந்து வெளிப்பட்ட உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமும் உண்டாயிருந்தது.
5 És belőle négy lelkes állat formája tetszék ki, és ez vala ábrázatjok: emberi formájok vala,
௫அதின் நடுவிலிருந்து நான்கு உயிரினங்கள் தோன்றின; அவைகளின் தோற்றம் மனிதனைப்போல் இருந்தது.
6 És mindeniknek négy orczája vala, és négy szárnya mindenikőjöknek;
௬அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன.
7 És lábaik egyenes lábak, és lábaik talpa mint a borjú lábának talpa, és szikráznak vala, mint a simított ércz színe.
௭அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாக இருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாக இருந்தன; அவைகள் தேய்க்கப்பட்ட வெண்கலத்தின் நிறமாக மின்னிக்கொண்டிருந்தன.
8 Továbbá emberi kezek valának szárnyaik alatt négy oldalukon. Mind a négyőjöknek orczái és szárnyai.
௮அவைகளுடைய இறக்கைகளின்கீழ் அவைகளின் நான்கு பக்கங்களிலும் மனிதனுடைய கைகள் இருந்தன; அந்த நான்கிற்கும் அதினதின் முகங்களும், இறக்கைகளும் உண்டாயிருந்தன.
9 Szárnyaik egymás mellé lévén szerkesztve, nem fordultak meg jártukban, mindenik az ő orczája irányában megy vala.
௯அவைகள் ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றதின் இறக்கைகளுடன் சேர்ந்திருந்தன; அவைகள் செல்லும்போது திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாகச் சென்றன.
10 És orczájok formája vala emberi orcza, továbbá oroszlán-orcza mind a négynek jobbfelől, és bika-orcza mind a négynek balfelől, és sas-orcza mind a négynek hátul;
௧0அவைகளுடைய முகங்களின் தோற்றமாவது, வலதுபக்கத்தில் நான்கும் மனிதனுடைய முகமும் சிங்கமுகமும், இடது பக்கத்தில் நான்கும் எருதுமுகமும் கழுகு முகமுமாக இருந்தன.
11 És ezek az ő orczáik. És szárnyaik felül kiterjesztve valának, mindeniknél két szárny összeér vala, kettő pedig fedezé testöket.
௧௧அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய இறக்கைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு இறக்கைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு இறக்கைகள் அவைகளுடைய உடல்களை மூடின.
12 És mindenik az ő orczája irányában megy vala, a hová a lélek vala menendő, oda mennek vala, meg nem fordulván jártukban.
௧௨அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாகச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எந்த இடத்திற்கும் அவைகள் போயின; போகும்போது அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.
13 És a lelkes állatok közt látszék, mint egy égő üszög, a mely lángolt, mint a fáklyák, ide s tova futkározva a lelkes állatok közt; és a tűznek fényessége vala, és a tűzből villámlás jöve ki.
௧௩உயிரினங்களுடைய தோற்றம் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற நெருப்புத்தழலின் தோற்றமும் தீவட்டிகளின் தோற்றமுமாக இருந்தது; அந்த நெருப்பு உயிரினங்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாக இருந்தது; நெருப்பிலிருந்து மின்னல் புறப்பட்டது.
14 És a lelkes állatok ide s tova mozognak vala, mint a villámlás czikázása.
௧௪அந்த உயிரினங்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன.
15 És mikor ránéztem a lelkes állatokra, ímé egy-egy kerék vala a földön az állatok mellett mind az ő négy orczájok felől.
௧௫நான் அந்த உயிரினங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, பூமியில் உயிரினங்களின் அருகில் நான்கு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.
16 A kerekek mintha tarsiskőből készültek volna, és mind a négyüknek ugyanazon egy formája vala, és úgy látszának egybeszerkesztve, mintha egyik kerék a másik kerék közepében volna;
௧௬சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை நிறமாக இருந்தது; அவைகள் நான்கிற்கும் ஒரேவித தோற்றம் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்திற்குள் சக்கரம் இருகிறதுபோல் இருந்தது.
17 Jártukban négy oldaluk felé mentek vala; meg nem fordulnak vala jártukban;
௧௭அவைகள் ஓடும்போது தங்களின் நான்கு பக்கங்களிலும் ஓடும், ஓடும்போது அவைகள் திரும்புகிறதில்லை.
18 És talpaik magasak valának és félelmesek, és e talpak rakva valának szemekkel köröskörül mind a négynél.
௧௮அவைகளின் வட்டங்கள் பயங்கர உயரமாக இருந்தன; அந்த நான்கு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.
19 És mikor járnak vala a lelkes állatok, járnak vala a kerekek is mellettök, és mikor fölemelkednek vala az állatok a földről, fölemelkednek vala a kerekek is.
௧௯அந்த உயிரினங்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த உயிரினங்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின.
20 A hová a lélek vala menendő, mennek vala, a hová tudniillik a lélek vala menendő, és a kerekek fölemelkednek vala mellettök, mert a lelkes állatok lelke vala a kerekekben.
௨0உயிரினங்களின் ஆவி போகவேண்டுமென்றிருந்த எந்த இடத்திற்கும் அவைகள் போயின; அவ்விடத்திற்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; உயிரினங்களுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
21 Ha azok mentek, ezek is mennek vala, és ha azok álltak, ezek is állnak vala, és ha fölemelkedtek a földről, fölemelkednek vala a kerekek is mellettök, mert a lelkes állatok lelke vala a kerekekben.
௨௧அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; உயிரினங்களுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
22 És vala mintegy mennyezet az állatok feje fölött, olyan mint a csodálatos kristály, kiterjesztve felül fejök felett.
௨௨உயிரினங்களுடைய தலைகளின்மேல் ஆச்சரியப்படத்தக்க சுடர் வீசி மின்னும் பளிங்குபோல் ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.
23 És a mennyezet alatt szárnyaik egyenesek valának, egyik a másikkal összeérvén; mindegyiknek kettő vala, a melyek befedik vala innen, és mindegyiknek kettő vala, a melyek befedik vala amonnan az ő testöket.
௨௩மண்டலத்தின்கீழ் அவைகளுடைய இறக்கைகள் ஒன்றுக்கொன்று எதிர்நேராக விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு இறக்கைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.
24 És hallám szárnyaik zúgását, mint sok vizeknek zúgását, úgy mint a Mindenhatónak hangját, mikor járnak vala, zúgás hangját, mint valami tábornak zúgását; mikor állának, leeresztik vala szárnyaikat.
௨௪அவைகள் செல்லும்போது அவைகளுடைய இறக்கைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போலவும், சர்வ வல்ல தேவனுடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலைப் போன்ற ஆரவாரத்தின் சத்தம் போலவும் இருந்தது; அவைகள் நிற்கும்போது தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருந்தன.
25 És lőn kiáltás a mennyezeten felül, a mely vala fejök felett, és ők megállván, leeresztik vala szárnyaikat.
௨௫அவைகள் நின்று தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருக்கும்போது, அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.
26 És a mennyezeten felül, a mely fejök felett vala, látszék mint valami zafirkő, királyi széknek formája, és a királyi széknek formáján látszék mint egy ember formája azon felül;
௨௬அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல காட்சியளிக்கும் ஒரு சிங்காசனத்தின் தோற்றமும், அந்தச் சிங்காசனத்தின் தோற்றத்தின்மேல் மனிததோற்றத்தை போல ஒரு தோற்றமும் இருந்தது.
27 És látám izzó érczként ragyogni, a melyet, mintha tűz vett volna körül derekának alakjától fogva és fölfelé; és derekának alakjától fogva és lefelé látám, mintha tűz volna. És fényesség vala körülötte,
௨௭அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமாக இருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.
28 Mint a milyen a szivárvány, mely a felhőben szokott lenni esős időben, olyan vala a fényesség köröskörül. Ilyen vala az Úr dicsőségének formája, és látám, és orczámra esém, és hallám egy szólónak szavát.
௨௮மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே யெகோவாவுடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாக இருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.